இன்றைய பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு.ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார் வர்த்தமானர்.
ராஜ வாழ்க்கையையும், பிற செல்வங்களையும் இளமை யிலேயே துறந்தார். விருப்பு, வெறுப்புகளையும் வென்றதால், மஹாவீரர் என்று அழைக்கப்படுகிறார். ஜைன சமயக் கோட்பாடுகளில் சீர்திருத்தங்கள் செய்த மஹாவீரர், நல்ல நம்பிக்கை, நல்ல அறிவாற்றல், நல்ல பண்புகள் ஒவ்வொரு வருக்கும் தேவை எனப் போதித்தார்.
"எந்த உயிரினத்திற்கும் தீங்கு செய்தலாகாது; உண்மைகளை மட்டுமே பேச வேண்டும்; முறையற்ற வழியில் எந்தப் பொருளையும் ஏற்கலாகாது; அறநெறி நீங்கி இன்பம் நுகர்தல் ஆகாது; பொருளாசையை முற்றிலும் நீக்குதல் வேண்டும்'' என்று அறிவுறுத்திய மஹாவீரர் பிறந்த தினம் ஏப்ரல் 16.
மஹாவீரரை போற்றுவோம்!
0 comments:
Post a Comment