30 January 2010

காதலர் தினக் கொண்டாட்டம்

Posted by Gunalan Lavanyan 10:11 PM, under | No comments

வலைப்பூ உலகில் ஒரு புதிய முயற்சி - பிப்ரவரி 1 (திங்கள்) முதல் பிப்ரவரி 15 வரை காதல் ஸ்பெஷல். காதலித்து திருமணம் செய்தவர்கள் - இப்போது காதலித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு காதலில் வெற்றி பெறுவது எப்படி? காதலர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும். எப்படி காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு டிப்ஸ்களை தர இருக்கிறார்கள். தினம் ஒரு ஜோடியாக 15 நாட்களுக்கும் 15 ஜோடிகள் காதல் டிப்ஸ் அளிக்க இருக்கிறார்கள்... இன்னும் காதல் கவிதைகள்... காதல் கடிதங்கள்... கஜிராஹோ...

28 January 2010

காதல் நதி

Posted by Gunalan Lavanyan 7:33 AM, under | No comments

பூத்த நாள்முதலாய் வண்டுகளே மொய்க்காத மலரைப்போல் இருந்தாய். நான் வந்து மொய்த்துவிட்டேன். உன் மகரந்தத்திலிருந்து உறிஞ்சுகிறேன்... ஆனாலும், வாற்றாது சுரக்கிறது தேன். ஒரு கணம் கண்களைப் பார்த்தேன். உன் கண்கள் சொன்னது... ‘நமது காதல் ஜீவநதி’ என்று... என் கண்கள் நதியாகிவிட்டன... என்ன செய்யப் போகிறாய்..? முடிந்தால் கட்டிக்கொள்... அல்லது ஆனந்தப் பெருநதியை வழியவிடு...

26 January 2010

காதல் தோய்ந்த மனது

Posted by Gunalan Lavanyan 10:19 PM, under | No comments

கோப்பை நிறைய ஊற்றிப் பருகிய தேனீரைப்போல் வண்ணங்களைப் பார்க்கும்போதெல்லாம் மனம் சப்புக்கொட்டி சுவை கொள்கிறது. மனதின் ஆழத்தில் ஊற்றாய் மகிழ்ச்சி பிரவாகம் எடுக்கும்போதெல்லாம் காட்சிக்கடலில் வண்ணங்கள் பேரலையாய் துள்ளி எழுகின்றன. வாழ்க்கைப் பந்தயத்தில் சக்கரங்களைப் பூட்டி இளமைப் பெருவண்டியை ஓட்டுகிறபோது வண்ணங்கள் குதிரைகளாய் பாய்ந்தோடுகின்றன. வண்ணங்களாலான வெளியின் காதல் தோய்ந்த மனதில் உயிர் அணுக்களாய் பரிணமித்துக்கொண்டிருக்கின்றன வண்ணங்கள் அனுதினமும்...

இந்தியாவுக்கு வெற்றி!

Posted by Gunalan Lavanyan 6:53 AM, under | No comments

3,20,61,600 மணித்துளிகள், 5,34,360 மணிகள், 22,265 நாட்கள், 3,172 வாரங்கள், 732 மாதங்கள், 61 ஆண்டுகள் (1950 - 2010)! இந்தியாவுக்கு வெற்றி. இந்தியா குடியரசு நாடாகி 60 ஆண்டுகள் நிறைவுபெற்ற தினம் இன்று. இந்த குடியரசு தினத்தில் இந்தியச் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட நமது முப்பாட்டன்களுக்கு வீரவணக்கம்! இனியொருமுறை இந்திய மண்ணை அடிமைப்படுத்த எவனையும் அனுமதியோம் என்று உறுதிகொள்வோம். நாம் அனைவரும் இந்தியர்கள். இந்திய தேசம் நமது தாய்நாடு. நமது...

24 January 2010

மழை வந்துவிட்டது இதயத்தில்!

Posted by Gunalan Lavanyan 7:54 PM, under | No comments

மழை வந்துவிட்டது இதயத்தில் மெல்லிய இசை எழுப்பி சில்லென்று பெய்கிறது... தென்றல் விசும்புகிறது குளிர் நடுங்குகிறது செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன... பச்சைப் பச்சையாய் புல்வெளிகள் கால்களை வருடி சிலிர்க்கின்றன. தெரு ஓடையில் மிதக்கிறது காகிதக் கப்பல் - காதல் கடிதம். பறவைக் குஞ்சுகள் சிறகுகளில் ஒளிந்துகொண்டு கீச்ச்... கீச்ச்... கீச்ச்... முளைக்கத் தொடங்கியிருந்தன மழைக் குடைகள்... டீசல் வழிந்த சாலைகளில் வானவில் நெப்பந்தஸ் மழைத்துளிகளை ஜீரணித்து ஏப்பம்...

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்... நேற்று காலை முழுக்க என் வீட்டு தோட்டத்தையே சுற்றிச்சுற்றி வந்த பட்டாம்பூச்சி இன்று அந்த அடர்ந்த முட்புதரில் சிக்கி உயிர் நீத்துக் கிடந்தது. சாலையின் குறுக்கும் நெடுக்குமாய் போய் வந்துகொண்டிருந்த நாய்க் குட்டி ஏதோ வாகனத்தின் டயர் பதிந்த அடையாளத்தோடு நசுங்கிக் கிடந்தது. சிலந்தி பின்னிய வலையின் இடையே ஈயின் மரணம். பிறிதொரு நாளில் வீட்டை ஒட்டடை அடித்ததில் நசிங்கிப்போனது ஈயும் வலையும். சாலையோர மரத்தை வெட்டிச் சாய்ந்ததில் கூடு உடைந்து சிதறிப்போனதிலிருந்து செத்துக்...

23 January 2010

திருமணம் முடித்த ஆண்கள் கவனத்துக்கு...

Posted by Gunalan Lavanyan 7:25 AM, under | 1 comment

இறக்க நேரிட்டால்... காலம் சென்றஎன் நண்பரின் படத்திற்குபூவும் பொட்டும்வைத்தார்கள்.கணவனை இழந்தஅடையாளம் என்று சொல்லிஅவர் இணைஇனி அவையெதுவும்இல்லாமல் வெறுமனேயேஇருக்கவேண்டும் என்றார்கள். நானும்கூடஒருநாள் இறக்க நேரிட்டால்என் படத்திற்கானபூவையும் பொட்டையும்என் இணைக்குகொடுங்கள்... அவையெதுவும்நான் அவளைமணந்ததற்கானஅடையாளச் சின்னங்கள் அல்ல.அதற்கு முன்பாகவேஅவையாவும் அவளின்பயன்பாட்டுப் பொருட்கள். - சா.இலாகுபாரதி 2004-ல் எழுதிய கவிதை. அப்போது எனக்கு திருமணம் ஆகவில்லை.ஆனால்,...

22 January 2010

புத்தகம் படிப்பவர்கள் ஜாக்கிரதை! மருத்துவர் தரும் எச்சரிக்கை டிப்ஸ்...

Posted by Gunalan Lavanyan 4:01 PM, under | 3 comments

மனிதனின் கற்றல் அறிவு நாள்தோறும் புதிய புதிய வாசிப்பை நோக்கி முன்னேறிக்கொண்டே இருக்கிறது. அதனால் சிலர், அதீதமான ஆர்வக்கோளாறினால் புத்தகத்தைப் பிரித்தால் கடைசி அட்டை வரை படித்தே தீருவது என்று 'புத்தகமும் கையுமாக' தங்கள் வாசிப்புத் தாகத்தைக் தணிக்க முயல்கிறார்கள். அவர்கள்தான், பயணத்தின்போது வாசித்தல், படுத்துக்கொண்டே வாசித்தல், சாப்பிடும்போது வாசித்தல், தொலைக்காட்சி பார்க்கும்போது வாசித்தல் என்று இயல்பை மீறின நிலைக்குப் போய்விடுகிறார்கள். இதனால்...

காதலிப்பவர்கள் மட்டும் கவனியுங்கள்...

Posted by Gunalan Lavanyan 6:30 AM, under | 2 comments

அந்த ஓடைக்குப் போனால்அதில் நான் இறங்குவதேயில்லை...கால்களால் எப்படி இறங்குவதுஅது தேவதை குளித்த தீர்த்தம்! தேவதை ஓடுகிறாள்காற்சலங்கை கழன்று வீழ்கிறதுசெத்துவிட்டது இசை. அரிசிமாவில் கோலம் போட்டுஎறும்புக்கு காட்டுகிற கரிசனத்தில்கொட்டும் பனியில்ஒளிந்திருந்து பார்க்கிறஎனக்கு கொஞ்சம் காட்டக்கூடாதா?கடைக்கண் பார்த்து... அவள் ஆண் சாமிகோயில்களுக்குப் போவதில்லை!‘என் புருஷனை மயக்கிவிடாதே’ என்றுபெண் சாமிகள்சண்டைக்கு வருகின்றனஆதலால்... பழத்திலேயேதக்காளிதான்...

21 January 2010

சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!

Posted by Gunalan Lavanyan 9:53 PM, under | 1 comment

ஐனாக்ஸ் – மயிலாப்பூர்(சினிமா பார்க்கப் போகிறவர்கள் ஒரு நிமிடம் இதைப் படித்துவிடுங்கள்!) இந்தியாவிலேயே மிக அதிகமான திரைகளைக் கொண்ட நிறுவனம் ஐனாக்ஸ் லீஸுர் லிமிடெட் (Inox leisure ltd). இந்தியா முழுக்க 19 நகரங்களில் 101 திரைகளை ஐனாக்ஸ் கொண்டிருக்கிறது. மிக அதிகமான ஐனாக்ஸ் தியேட்டர்கள் ஷாப்பிங் மால்களில்தான் இருக்கின்றன. சென்னையிலும் சிட்டி சென்டர் ஷாப்பிங் மாலில்தான் ஐனாக்ஸ் இருக்கிறது. மொத்தம் நான்கு ஸ்க்ரீன்கள். முக்கியமான எல்லா மொழிப் படங்களும் காட்சியிடப்படுகின்றன. ஐனாக்ஸில் பிலிம் சுருள்களின் மூலம்தான் படங்கள் திரையிடப்படுகின்றன. டிஜிட்டல் முறையைவிட...

சென்னைக்கு வருகிற சுற்றுலா பயணிகளுக்கு பெஸ்ட் ஸ்பாட்!

Posted by Gunalan Lavanyan 8:09 AM, under | 2 comments

மாயாஜால் - கிழக்கு கடற்கரைச் சாலை திருவான்மியூரிலிருந்து 30 கிலோமீட்டர் தூரத்தில், கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக மேற்கத்திய பாணியில் பல வசதிகளுடன் கூடிய முதல் திரையரங்கம்; 10 ஸ்க்ரீன்கள். எந்த நேரத்திலும் படம் பார்க்கக்கூடிய வசதி. டிஜிட்டல் கியூப் டெக்னாலஜியில் திரையிடப்படும் படங்கள். டிடிஎஸ் சவுன்ட் சிஸ்டம். ஸ்டெப்ஸ் டைப்பில் வசதியான இருக்கைகள் என்று நவீன ‘மாயலோகம்’தான் மாயாஜால். தமிழ், மலையாளம்,...

20 January 2010

இதய நோயாளிகள் இதைப் படிக்கவேண்டாம் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்!

Posted by Gunalan Lavanyan 10:12 PM, under | 1 comment

அபிராமி மெகா மால் – புரசைவாக்கம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அபிராமி மாலில்தான் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. சீட்டிலிருந்தே பட்டன் அழுத்தினால், தேடி வந்து ஸ்னாக்ஸ், டிரிங்க்ஸ் ஆர்டர் எடுப்பார்கள். இந்தியாவிலேயே முதன்முறையாக இங்குதான் டிஜிட்டல் புரொஜக்ஷன் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 4 தியேட்டர்கள். இதில் ஸ்ரீ அன்னை அபிராமி, சீன கலாசார பாரம்பரியத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தியேட்டருக்குள் நுழைந்தாள் முழுக்கமுழுக்க...

‘உம்மா உம்மம்மா’வுக்கு ஜாலி!

Posted by Gunalan Lavanyan 6:01 AM, under | No comments

சத்தியம் காம்ப்ளெக்ஸ் – ராயப்பேட்டை தியேட்டருக்குள் நுழைந்தால் ஸ்டார் ஹோட்டலில் கால் வைப்பதுபோல் பிரமிப்பு. ‘குளுகுளு’ சென்டர்லைஸ்ட் ஏசியோடு, திரும்பிய பக்கமெல்லாம் எல்.சி.டி. டிஸ்ப்ளேவில் அப்டேட்டாகும் சினிமா விளம்பரம். டாய்லெட்டில்கூட சின்னச் சின்ன டிஸ்ப்ளேஸ். இப்படி விளம்பரத்திலும் பல புதுமைகளைக் கையாள்கிற சத்தியம், நவீன வசதிகளோடு இயங்கும் இந்தியாவின் முன்னணி திரையரங்கம். சென்னையின் பிரதான இடமான அண்ணா சாலையிலிருந்து...

19 January 2010

காதலிக்காதவர்கள் படிக்கவேண்டாம்!

Posted by Gunalan Lavanyan 11:33 PM, under | No comments

அன்பிற்கினியவளே, இப்போதும் நான் உன் கூந்தலைப் பற்றிதான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். அதுயெப்படி நான் பார்க்கிற ஒவ்வொரு முறையும் உன் பார்வையைப் போலவே, உன் ஸ்பரிஸத்தைப் போலவே, உன் சிரிப்பைப் போலவே உன் கூந்தலும் புதுப் பொலிவோடும் புது அழகோடும் எனக்குக் காட்சித் தருகிறது; தெரியவில்லை. நக்கீரர் காலத்திலிருந்தே கேட்டுவருகிறார்கள், ‘வாசனை மிகுந்த பூக்களைச் சூடுவதால் கூந்தலுக்கு மணம் வருகிறதா..? அல்லது இயற்கையிலேயே கூந்தலிலிருந்து வாசனை வழிகிறதா?’...

17 January 2010

ரெட் சல்யூட்

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments

தோழர் ஜோதிபாசு அவர்களுக்கு ரெட் சல்யூட் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியை,  அதன் மக்கள் ஆதரவுக் கொள்கைகளை, மக்கள் மனதில் விதைத்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி வேரூன்றி, இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்பதற்கு உரமிட்ட தலைவர். தொடர்ந்து மக்களுக்காக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்காகக் குரல் கொடுத்தவர். அவற்றை நிறைவேற்றியும் வைத்தவர்.இந்தியாவில் கம்யூனிஸ்ட்...

இனி நிம்மதியா சிரிங்க!

Posted by Gunalan Lavanyan 12:26 AM, under | 2 comments

ரமேஷ் ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினீயர். அவருக்குத் திருமணம் நிச்சயமானது. கல்யாணத்துக்கு ஒருமாதம் இருக்கும்போது மணமகளுக்குப் பிறந்தநாள் வர, ஊரிலிருக்கும் தமது வருங்கால மனைவியைப் பார்த்துப் பரிசு கொடுத்துவர, பைக்கில் புறப்பட்டார் ரமேஷ். கிழக்குக் கடற்கரைச் சாலையில், மகிழ்ச்சியுடன் 70 கிலோமீட்டர் வேகத்தில் அவர் பயணிக்க, ஒரு வளைவில் லாரியொன்று எதிர்பாராமல் முளைத்துத் திரும்ப, ரமேஷ் சுதாரிப்பதற்குள் விபத்து நடந்தேவிட்டது. அதிர்ஷ்டவசமாக ரமேஷ் சிற்சில காயங்களுடன்...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் 93வது பிறந்தநாள்

Posted by Gunalan Lavanyan 12:17 AM, under | 2 comments

புரட்சித்திலகம் எம்.ஜி.ஆருக்கு நமது வலைப்பூ  அஞ்சலி செலுத்துகிறது...

15 January 2010

அவளும் அவனும் மட்டும்...

Posted by Gunalan Lavanyan 10:57 PM, under | No comments

வானம் கறுத்து கடற்கரையே காணாமல் போயிருந்த நேரம். மழைதான் வராமல் அடம்பிடித்தது. அதைப் பார்த்து காற்று சும்மா இல்லை வம்படியாக கைக்கொட்டிச் சிரிக்க, அலையும் சேர்ந்துகொண்டு கும்மாளமிட்டு பொங்கி நுரைத்தது. இப்போது வானம் சும்மா இல்லை மின்னல் வேர் விட்டு வெடித்தது... ஒளி, இடியுடன் கலந்து பொத்துக்கொண்டு வந்தது மழை. காதல் பொருட்படுத்தாது மையமிட்டிருந்தது கரையை... மழைதான் என்ன செய்யும்..? தூறல் குடை பிடித்துப் பார்த்துக்கொண்டது காதலை. அவளும் அவனும் மழையின்...

Pages 271234 »

கோப்பு

கோப்பு