19 June 2011

ரொமான்ஸ் ராஜா

Posted by Show Now 8:25 PM, under | 2 comments

சண்முக ராஜா’ - இந்தப் பெயரைச் சொன்னதுமே கண்களை உருட்டி பிடிங்கடா அவனை என்று ஹீரோவை நோக்கி அடியாட்களை ஏவும் வில்லன் முகமோஅல்லது நீ சொல்றபடி எல்லாம் கேட்கறதுக்கு நான் ஆளில்லை… உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ என்று ஹீரோவிடம் சொல்லிவிட்டு வில்லனிடம்நான் உங்கபக்கம்தான் ஐயா… என்று போலி பணிவு காட்டும் போலீஸ் அதிகாரி முகமோதான் நினைவுக்கு வரும்.ஆனால்கிருஷ்ணவேணி பஞ்சாலையில் புதிய முகம் காட்டியிருக்கிறார் சண்முகராஜா. பஞ்சாலைக்கு வேலைக்கு வரும் பெண்களிடம் குழைந்து நெளிந்து வழிசல் காட்டும் சூப்பர்வைஸராக காமெடி தர்பார் நடத்தியிருக்கிறார் சண்முக ராஜா.

 
‘‘என்ன இந்த திடீர் மாற்றம்?”

‘‘மாற்றமெல்லாம் ஏதுமில்லை. நடிகன் என்றால் எல்லாவித கதாபாத்திரங்களும் செய்யணும்தானே… நாம இப்படித்தான்னு பிராண்ட் பண்ணிக்கக் கூடாது. அதுக்கு கிருஷ்ணவேணி பஞ்சாலையில் ஒரு வாய்ப்பு கிடைச்சது. நான் காஸ்டிங் டைரக்டரா இந்தப் படத்தில் நுழைந்தபோதே டைரக்டர் தனபால் சொன்ன கதையில் இந்த கேரக்டருக்கு யாரு வரப் போறானு ஒரு ஆர்வம் எழுந்தது. அதை நீங்க செய்யணும்னு டைரக்டர் சொன்னதும் மகிழ்ச்சி ஆகிட்டேன்.

‘‘ஒருநிமிஷம்… அது என்ன பேச்சின் நடுவே காஸ்டிங் டைரக்டர்னு ஏதோ சொன்னீங்களே… அது புது விஷயமா இருக்கே!

‘‘நிச்சயமாக தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரையில் டைரக்டரே கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து தயார் செய்யும் வேலையைச் செய்கிறார். ஆனால்அதைவிட அதற்கென தனியாக ஒருவர் இருந்து அந்த வேலையைச் செய்தால் சிறப்பாகச் செய்யமுடியும். அப்படி ஒரு முயற்சியை கிருஷ்ணவேணி பஞ்சாலை டைரக்டர் தனபால் எடுத்தபோதே எனக்கு சந்தோஷமாக இருந்தது.

படத்தின் கதைக்கு ஏற்ற கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து அதை இயக்குனரின் ஒப்புதலோடு முடிவு செய்வதுதான் காஸ்டிங் டைரக்டரின் பணி. நான் அதை இந்தப் படத்தில் நிறைவாகச் செய்திருக்கிறேன். புதுமுகங்கள் நடிக்கும்போது இந்தத் தேவை முக்கியமானதாக இருக்கும். கிருஷ்ணவேணி பஞ்சாலைக்குப் பிறகு தமிழ் சினிமாவில் காஸ்டிங் டைரக்டர் என்ற துறை பலப்படும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.


கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்துக்கு நடிப்புப் பயிற்சி

 ‘‘கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் காஸ்டிங் டைரக்டராகப் பணியாற்றிய அனுபவம் பற்றி சொல்லுங்கள்..?”

‘‘அது ரொம்ப நல்ல அனுபவம். 42 நடிகர் நடிகைகளை தேர்ந்தெடுக்குறதுக்காக 300 பேரை சந்திச்சோம். என்னைப் போலவே தேசிய நாடகப் பள்ளியில் பயிற்சி பெற்ற ராஜேஷும் என்னோடு இருந்தார். நடிகர்களை தேர்வு செய்ததும் முதல்கட்டமா அவர்களுக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்தோம். ஒவ்வொரு கேரக்டரையும் எப்படி அணுகணும். ஒரு கதாபாத்திரத்துக்கும் இன்னொரு பாத்திரத்துக்கும் உள்ள உறவுமுறை என்ன..நடிப்புன்னா என்னகாமிரா முன்னாடி எப்படி பயமில்லாம நடிக்கிறதுன்னு பல விஷயங்களை அந்தப் பயிற்சிப் பட்டறையிலே சொல்லிக்கொடுத்தோம். அதன்பிறகு படத்தில் அவங்களோட ரோல் என்னகதை என்னகதைக்கு எப்படி தயார்படுத்திக்கிறதுனு பயிற்சி பட்டறை இருந்தது. படத்துக்காக புதுமுகங்களுக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்தது எனக்கு சந்தோஷமான அனுபவம்தான்.

‘‘அப்ப படத்தில் எல்லாருமே புதுமுகங்கள்தானா..?”

‘‘ஹீரோஹீரோயினோடு சேர்த்து 90 சதவீதம் பேர் புதுமுகங்கள்தான். ஆனால் ரேணுகாபாலாசிங்ராஜிவ் கிருஷ்ணாதென்னவன்நான் என்று மக்களுக்கு அறிமுகமான நடிகர்களும் படத்துல இருக்கோம்.

''படத்தில் உங்கள் கேரக்டரைப் பற்றிச் சொல்லுங்க…”

‘‘மில்லுன்னாலே பொண்ணுங்களுக்கு பஞ்சம் இருக்காது. கிருஷ்ணவேணி பஞ்சாலை மில்லிலும் பொண்ணுங்க அதிகம். இப்படியொரு சூழலில் கல்யாணம் ஆகாத ஆசாமியான நான் சூப்பரவைஸரா வேலை செய்றேன். எப்படி இருக்கும்னு யோசிச்சுப் பாருங்க. நல்ல காமெடி ரோல். படம் முழுக்க என் கேரக்டர் டிராவல் பண்ணும்.

‘‘கிருஷ்ணவேணி பஞ்சாலை பேரே வித்தியாசமாக இருக்கிறதே..?”

‘‘படமும் வித்தியாசமா இருக்கும். இதுவரை தமிழ் சினிமா பார்க்காத கதைக்களம். பஞ்சாலையில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் மத்தியில் உள்ள சாதி வன்மத்தைப் பதிவு செய்யுற படம். ஆனாதொழிற்சாலை எப்படி இந்த ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் சரிப்படுத்துங்கிறதுதான் கதை. இந்தக் கதையை சுவாரஸ்யமான சினிமாவாகக் காட்டியிருப்பது டைரக்டர் தனபாலின் திறமை.

‘‘காஸ்டிங் டைரக்டராகச் சொல்லுங்கள்புதுமுகங்கள் எப்படி நடித்திருக்கிறார்கள்..?”

‘‘பேருக்குத்தான் அவங்க புதுமுகங்களே தவிரபடத்தைப் பார்த்தா அப்படி தெரியாது. நல்ல அனுபவம் வாய்ந்த நடிகர்கள் மாதிரி நடிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு அப்படிப்பட்ட நடிகர்களை தயார்செய்தது. படம் பார்க்கிறவர்களுக்கு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள் என்ற அடையாளமே தெரியாது. ஒவ்வொருத்தரோட நடிப்புலேயும் அவ்வளவு எனர்ஜி.

அதனாலேயே படம் மிகச் சிறப்பா வந்திருக்கு. ஃபிரேம் பை ஃபிரேம் இயக்குனர் தனபால் பத்மநாபனின் முதிர்ச்சியான முத்திரை அழுத்தமாக இருக்கு. எல்லாத்தரப்பு மக்கள் மனசிலேயும் படம் நிக்கும். அந்த அளவுக்கு கதையை எளிமையா புரியவெச்சிருக்காரு டைரக்டர். அப்படி புது ரத்தத்தோட படம் வருது. சினிமா ரசிகர்கள் மனசில் கிருஷ்ணவேணி பஞ்சாலைக்கு உயர்ந்த இடம் கிடைக்கும்.

இந்தப் படத்தில் சண்முகராஜா ரொமான்ஸ் ராஜாவாகவும் வலம் வருகிறார் என்பது உபரிச் செய்தி!

- சா.இலாகுபாரதி

2 comments:

உங்களது படைப்பு நன்றாக உள்ளது . உங்களது படைப்புகளை கீழே பதிவு செய்யவும்

Share Here

அவர் தானா இவரு ! நம்பவே முடியலைங்க !


**********************************

வலைப்பதிவர்களே கொஞ்சம் கவனியுங்க ? ரொம்ப அவசரம்

Post a Comment

கோப்பு

கோப்பு