மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை தனபால் பத்மநாபன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது. படத்தில் புதுமுகங்கள் நந்தனா, ஹேமச்சந்திரன் கதாநாயகி, நாயகனாக வலம் வருகிறார்கள். முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து இருக்கிறார்கள். 80களில் இருந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படம், தமிழ் சினிமா இதுவரை பார்க்காத கதைக் களன். இந்தப் படத்தில் அறிமுகமாகும் நந்தனா இன்னொரு கேரளத்துப் பைங்கிளி. குடும்பப் பாங்கான தோற்றமும் சரசரக்கும் மல்லிகையும் வைத்திருக்கும் நந்தனாவைப் பார்த்தால் லவ் பண்ணத் தோன்றும். கிருஷ்ணவேணி பஞ்சாலைப் படத்தில் நந்தனாவை காதலிக்கும் கதாநாயகன் ஹேமச்சந்திரன்.















1 comments:
அழகு.... வாழ்த்துக்கள்...
Post a Comment