- மழை வந்துவிட்டது இதயத்தில்
- மெல்லிய இசை எழுப்பி
- சில்லென்று பெய்கிறது...
- தென்றல் விசும்புகிறது
- குளிர் நடுங்குகிறது
- செடிகளில் பூக்கள் சிரிக்கின்றன...
- பச்சைப் பச்சையாய் புல்வெளிகள்
- கால்களை வருடி சிலிர்க்கின்றன.
- தெரு ஓடையில் மிதக்கிறது
- காகிதக் கப்பல் - காதல் கடிதம்.
- பறவைக் குஞ்சுகள்
- சிறகுகளில் ஒளிந்துகொண்டு
- கீச்ச்... கீச்ச்... கீச்ச்...
- முளைக்கத் தொடங்கியிருந்தன
- மழைக் குடைகள்...
- டீசல் வழிந்த சாலைகளில் வானவில்
- நெப்பந்தஸ் மழைத்துளிகளை
- ஜீரணித்து ஏப்பம் விட்டது & டப்
- ஆர்மோன் மாற்றத்தால்
- மழை விட்டுவிட்டு பெய்தாலும்
- தூவானம் இருக்கும்.
- இதயம் நின்றுபோகும்சமயம்
- ஓய்ந்தாலும்
- வேறு இதயத்தில் பெய்யும்
- மழை
0 comments:
Post a Comment