23 July 2011

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி...

Posted by lavanyan gunalan 6:15 PM, under | 1 comment

வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானை அடுத்து இசையமைப்பாளர் என். ஆர். ரஹ்நந்தன் சேர்ந்து இருக்கிறார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இவருடைய இசையில் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு தாயே...’ பாடல்தான் தேசிய விருதை வென்றிருக்கிறது. அதே உற்சாகத்தோடு இருவரும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆலைக்காரி அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றதும் துள்ளலாகப் பேசத் தொடங்கினார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில்...


“தனபால் பத்மநாபன் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள். ஒரு தீம் மியூஸிக். எல்லாம் சூப்பராக வந்திருக்கிறது. மீண்டும் வைரமுத்துவுடன் இணையும் அதேநேரத்தில் ஒரு பாடலை தாமரையிடம் எழுதி வாங்கியிருக்கிறோம்...” என்றவரிடம், “அப்போ அடுத்த படத்துக்கும் தேசிய விருது கிடைக்குமா?” என்றதும் நம்பிக்கை மிளிரப் பேசினார்.

என்.ஆர்.ரஹ்நந்தன்
“எனக்கு மட்டுமல்ல. இயக்குனர் தனபால் பத்மநாபனுக்கும் கிடைக்கும்; கிடைக்க வேண்டும். தேசிய விருது பெறுவதற்குரிய எல்லாத் தகுதிகளும் இந்தப் படத்துக்கு இருக்கிறது. அந்த அளவுக்கு உழைத்து இருக்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலைகளும் அப்படி அமைந்திருக்கின்றன. எந்தப் பாடலும் காரணம் இல்லாமல் படத்தில் இருக்காது. இதில் வைரமுத்து எழுதிய ‘ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி...’ பாடலுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

இதுவரைக்கும் பல ஆயுதபூஜை பாடல்களை கேட்டிருப்பீர்கள். அவை அத்தனையும் அதிரடியான இசையாகத்தான் அமைந்திருக்கும். ஆனால், ஆலைக்காரி பாடல் மெலடியில் துள்ளலாக அமைக்கப்பட்டு இருக்கிறது. பாடல் கேட்கும்போது ஒரு எனர்ஜி கிடைக்கும். ஆலையில் வேலை செய்பவர்களுடைய வாழ்க்கையை சொல்வதாக பாடல் இருக்கும். வைரமுத்து வரிகளும் நன்றாக வந்திருக்கிரது. இசையும் சிறப்பாக அமைந்திருக்கிறது. கிருஷ்ணவேணி பஞ்சாலை படம் வெளியானால், அதன்பிறகு எல்லா இடங்களிலும் ஆலைக்காரிதான் ஒலிக்கப்போகிறது” என்றார்.

“மற்ற பாடல்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்” என்றதும்,

“படத்தில் ஒரு காதல் இருக்கிறது. காதல் இருந்தால் டூயட் இருக்கத்தான் செய்யும். படம் முழுக்க 80களில் பயணிப்பதால் இந்த டூயட் பாடல் இசைக்கருவிகளாகப் பார்த்து கம்போஸ் செய்து இருக்கிறோம். பாடலை கேட்கும்போது இனிமையாக இருக்கும். பாடல்கள் முழுக்க லைவ் இன்ஸ்ட்ரூமெண்ட் உபயோகித்துதான் பதிவு செய்திருக்கிறோம். அதனால், எல்லாப் பாடல்களிலும் ஒரு உயிர் இருக்கும்” என்றார்.

பஞ்சாலைப் பாடல் தேசம் முழுக்க ஒலிக்கட்டும்!

- சா.இலாகுபாரதி
நம் தோழி, ஜூன் 2011

1 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு