
21ஆம் நூற்றாண்டின் மிக மோசமான பேரழிவு என்று வர்ணிக்கப்படும் சுனாமி ஏற்பட்டு 19 ஆண்டுகள் ஆகின்றன. அதன் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. கடற்கரையோர கிராமங்களில் மீனவ மக்கள் பட்ட துயரம் இன்னும் காயவில்லை. அரசு செய்த சீர்த்திருத்த நடவடிக்கைகள் பெரிய அளவில் இருந்தாலும் அது போதவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது. சுனாமி குடியிருப்புகள் சிதிலம் அடைந்து போயிருப்பது இன்னும் வேதனையை மீனவர்களிடம் ஏற்படுத்தியிருக்கிறது. 2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா...