உடல்நலக் குறைவால் கடந்த மாதம் 28ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த புட்டபர்த்தி சாய்பாபா இன்று மரணம் அடைந்தார்.
இதயக் கோளாறு, சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இருந்த பாபாவுக்கு வயது 85. பாபாவுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார்கள். அதனால், அவருடைய மரணச் செய்தியைக் கேட்ட பலர் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து இருக்கிறர்கள்.
ஆனால், பாபாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக ஆந்திரா வட்டாரத்தில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. பாபா இருந்த புட்டபர்த்தியில் கடந்த ஒரு வார காலமாக அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்தது. அதற்குக் காரணமே அவருடைய மரணத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் என்று அவருடைய பக்தர்கள் கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்ல, அவர் இறந்தபிறகுதான் 144 தடை உத்தரவே பிறப்பக்கப் பட்டது என்றும், ஆனால், உடனே விஷயம் வெளியில் தெரிந்தால் பதட்டமான சூழ்நிலை உருவாகிவிடும் என்பதால், அதைத் தடுப்பதற்காகத்தான் ஒரு வாரம் காலதாமதமாக மரணச் செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள் என்றும் சிலர் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.
இதற்கிடையில் புட்டபர்த்தியின் மாவட்ட ஆட்சியர் ஒருமுறை மருத்துவ மனைக்கு சென்று பாபா உயிரோடுதான் இருக்கிறார் என்றும், ஆனால், மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்றும் தகவல் கூறியிருந்தார். ஆனால், அந்தத் தகவலும் உண்மையில்லை என்று ஒருசாரார் பேசிக் கொள்கிறார்கள்.
அதேநேரத்தில் பாபா டிரஸ்டுக்குச் சொந்தமான சொத்தை யார் நிர்வகிப்பது என்ற தகராறின் காரணமாகத்தான் மரணச் செய்தியை மருத்துவர்களே அறிவிக்காமல் ஒத்திவைத்து இருந்தார்களோ என்ற சந்தேகமும் பக்தர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
எது எப்படியிருந்தாலும் கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வரத்தான் போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் பாபாவின் மரணத்தில் உள்ள முடிச்சுகள் அவிழும்.
2 comments:
Baba's trust property should be taken over by the government since it is not the earned property of the trust. This is the money of the lakhs of poor peoples. It has gone to the trust ia a wrong way.
அந்தக் காலத்து ரஷ்யாவில் அதிபர் மரணம் அடைந்தால் அவர் உடலைக் கொண்டு வந்து கம்யூனிஸ்டு அலுவலகத்தில் வைத்து விட்டு, பொலிட்பீரோ உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாய்க் கூடி அடுத்த அதிபர் யார் என்பதைத் தங்களுக்குள் விவாதித்து முடிவில் இன்னாரென்று முடிவுக்கு வந்த பின்னரே அதிபர் இறந்து விட்டார் என்பதைப் பொது மக்களுக்கு, உலகுக்கு அறிவிப்பார்களாம் ! பெரும்பாலும் அதிபர் இறந்த மறுநாள் தான் மக்களுக்குத் தெரிய வரும் என்று சொல்வார்கள்.
நம்ம ஆட்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து விட்டுக் காசு பண விவகாரங்களைப் பேசி முடித்துக் கொண்டிருப்பார்கள் என்றே தோன்றுகிறது !
நிறையப் பேர்களைக் 'கவனிக்க' வேண்டும் அல்லவா ?
40,000 கோடி ரூபாய் என்றால் சும்மாவா ? !
Post a Comment