ஏப்ரல் 13: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிற தினம். நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுக்கிற நாள். யாரைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் பிரச்னைகள் தீரும் என்று தீர்மானிக்கக் கூடிய நிலையில் தமிழக அரசியல் நிலை இல்லை. ஒருத்தர் அயோகியன் என்றால், இன்னொருத்தர் பரம அயோகியனாக இருக்கிறார். அதனால், பரம அயோக்கியனைவிட அயோகி யனை தேர்ந்தெடுப்பதே மேல் என்ற முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
நம்முடைய வரிப்பணத்தை அரசுக்கு செலுத்துகிறோம். நம்முடைய வரிப் பணத்தில் இருந்துதான் தேர்தல் நடக்கிறது; அரசியல்வாதிகளின் கொள்ளை நடக்கிறது. நம்முடைய வரியிலிருந்துதான் நமக்கு வேண்டிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது.சில அரசியல்வாதிகள் அவர்களுடைய தேவை களையும் நமது வரி பணத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே நம்முடைய பணத்தை செலவழிக்கிற அதிகாரத்தை வேறொருவரிடம் கொடுக் கப்போகிற தினம் ஏப்ரல் 13.
ஒருநாள் இன்பத்துக்காக அரசியல் தரகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, 5 ஆண்டு காலம் அல்லல்பட வேண்டாம்.
- கடந்த காலங்களில் யார் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள்?
- யார் மக்களுக்கு தீங்கு விளைவித்து இருக்கி றார்கள்?
- யார் மக்களை பிச்சையெடுக்க வைத்திருக்கிறார்கள்?
- விலைவாசி பிரச்னைகளுக்கு யார் காரணம்?
- பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்?
- இலங்கைத் தமிழர் படுகொலைகளுக்கு யார் காரணம்?
- ரௌடிகள் அட்டகாசத்துக்கு யார் காரணம்?
- எல்லா துறைகளிலும் மக்களைச் சுரண்டும் ஆட்சி யாருடைய ஆட்சி?
- நடிகர்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறவர்கள் யார்?
- எந்த அரசியல் தலைவர் சிறந்த நடிகராக மக்களை ஏமாற்றுகிறார்?
- எந்த நடிகர் சிறந்த அரசியல் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
இப்படி பல்வேறு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு பதில் தேடுங்கள். அப்போது, எந்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியும்.
ஏப்ரல் 13 உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயிக்கும் நாள்!
நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை! வாக்களிப்பது நம் கடமை!
சிந்திப்பீர்! செயல்படுவீர்!
1 comments:
நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை!...:))
வாக்களிப்பது நம் கடமை!... :((
Post a Comment