இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் அதிரடி ஆட்டக்காரர் சங்ககாரா விலகினார். உலகக் கோப்பை போட்டியில் இந்தியா விடம் தோல்வியடைந்ததையடுத்து, சங்ககாரா கேப்டன் விலகிக் கொண்டார்.
![]() |
sangakara |
ஜெயவர்தனேவுக்குப் பிறகு 2009இல் கேப்டன் பொறுப்புக்கு வந்த சங்ககரா (33) செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசினார்:
”இரண்டு ஆண்டுகளாக, இலங்கை அணியின் கேப்டனாக இருந்ததற்கு, பெருமைப்படுகிறேன். உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது வரை மகிழ்ச்சிதான்.
ஆனால், கோப்பையை கைப்பற்றாமல், தோல்வியடைந்தது, மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இதனால், அணியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, ஒருநாள் மற்றும் ’டுவென்டி-20' போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். இதன் மூலம் புதிய கேப்டனை நியமித்து, 2015 தொடருக்குள் சிறப்பாக தயார் செய்ய முடியும்” என்று கூறினார்.
0 comments:
Post a Comment