கிருஷ்ணவேணி பஞ்சாலை
80களில் இருந்த பஞ்சாலை மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியிருக்கிறார்

கிருஷ்ணவேணி பஞ்சாலை
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் இணைந்திருக்கும் இசையமைப்பாளர் என்.ஆர்.ரஹ்நந்தன்தான் இந்தப் படத்தின் இசையமைப்பாளர்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை
ஆஹா படத்தில் ஹீரோவாக அறிமுகமான ராஜீவ் கிருஷ்ணா இந்தப் படத்தில் பஞ்சாலை முதலாளி பாத்திரத்தில் பந்தாகாட்டுகிறார்

31 July 2011
குத்துப்பாட்டுக்கு ஏத்த அந்த நடிகை
Posted by lavanyan gunalan
6:44 PM, under கேலரி | No comments
நல்ல குத்துப்பாட்டுகளில் அடையாளம் தெரியாத நடிகைகள் அல்லது கவர்ச்சி காட்டத்தெரியாத நடிகைள் அல்லது Old ஹீரோன்களைப் போட்டு ஒப்பேத்தும் சில தமிழ் சினிமா இயக்குனர்கள் சுவாதி வர்மா மாதிரியான நடிகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சம்பளமும் கம்மி, தாராளமான கவர்ச்சி, ஏ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான முகம் என்று சுவாதிக்கு பல குவாலிஃபிகேஷன்ஸ் உண்டு. ஆனால், ஏனோ தெரியவில்லை அவர் அந்தமாதிரி படங்களில் அல்லது அப்படியும் இப்படியுமான கேரக்டர்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவரைப் போன்ற நடிகைகளை குறை சொல்லி மட்டும் என்ன பிரயோஜனம்? நல்ல கேரக்டர் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி பலான படங்களில் சிக்கவைத்துவிடும் புரோக்கர்களைத்தான் வாய்வலிக்கத் திட்டவேண்டும்!
30 July 2011
சிறுமிகள் விபச்சாரம்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!
Posted by lavanyan gunalan
6:25 PM, under கட்டுரை | 3 comments

ஆண்வர்க்கத்தால் நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக வன்மையான தொடர் நடவடிக்கைகள், இதுவரை எந்த மன்னராட்சியோ மக்களாட்சியோ எடுத்ததாக தெரியவில்லை. ஆனால், இப்படி மைனர் பெண்களை விபசாரத்திலும் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுத்துகிறவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், காவல் துறையினர் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியேறும் அளவுக்கு அசிரத்தையாக நடந்துகொள்கின்றனர். சில நீதிமன்றங்களும்கூட அவர்களுக்கு ஜாமீன் வழங்கி மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதற்கு வழி வகை செய்கின்றன.
28 July 2011
ஓவியத்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்பு
Posted by lavanyan gunalan
10:30 PM, under history | 3 comments
ஒரு விஷயத்தைச் சொன்னா, சில நிமிஷத்திலே படம் கொடுக்கிற மாதிரி வெச்சுக்கிட்டேன். அது அவங்களுக்கு ரொம்பப் புடிச்சது. இப்பவரைக்கும் அப்படிதான் வரையிறேன். ஒருத்தர் சொன்ன, அஞ்சாவது நிமிஷத்துலே அவங்க கையில் நான் வரைஞ்ச படம் இருக்கும். குமுதம் ஆபீஸுக்கு கூட்டி வந்த டிரைவரைப் பார்த்தேன், 'பார்த்தியா நான் சொன்னபடி நல்ல சம்பளத்துலே வேலை கிடைச்சிடுச்சு, அதேமாதிரி ஆனந்த விகடன், கல்கி, வாரமலர்... எல்லாப் பத்திரிகைக்கும் போய் பாரு'ன்னார். அஞ்சுநாள் ஆச்சு. சொல்லாமலேயே வந்துட்டதாலே ஊர்லே என்னை தேடுறாங்க.
அம்புலிமாமா ஆபிஸ்லே நான். இன்டர்வியூ எடுத்தவர் என்னை கூப்பிட்டாரு. கூப்பிட்டவரு பிரசாத் ரெட்டி. உள்ளே போனா எல்லா பத்திரிகை ஆபீஸ்லேருந்தும் லெட்டர் வந்திருக்கு. ரெட்டி கேக்கறாரு... 'ஈயந்த்தா ஏமி' 'என்ன... தெரியலையே...'னு சொன்னேன். 'என்ன தெரியலையா....' பத்திரிகை பேர் எல்லாம் சொல்லி, 'இங்கிருந்தெல்லாம் உனக்கு லெட்டர் வந்திருக்கு'ன்னார். 'ஆமா சார் அங்கெல்லாம் போனேன்; டிராயிங்க்ஸ் கொடுத்துட்டு வந்தேன். லெட்டர் வந்திருக்கா'ன்னேன். 'இந்த மாதிரி எல்லாரும் பண்றாங்கன்னுதானே உனக்கு முன்பணமா 350 ரூபா கொடுத்தேன். நீங்க எல்லாருமே இப்படிதான் இருப்பீங்களா... இங்க சம்பளம் கொடுக்கிறேன் வெளியே வேலை பார்க்குறீயே... என்ன அர்த்தம்...?'ன்னு எரிச்சலா கேட்டாரு. 'உனக்கு இதைவிட வெளியே சம்பளம் ஜாஸ்தின்னா தாராளமா வெளியே போகலாம்...' 'எனக்கு குமுதத்துலே 2 ஆயிரம் ரூபா தரேன்னு இருக்காங்க. அங்கே போகப் போறேன்னேன்'. 'போ... போ...'ன்னார். வெளியே வந்துட்டேன்.
அம்புலிமாமா ஆபிஸ்லே நான். இன்டர்வியூ எடுத்தவர் என்னை கூப்பிட்டாரு. கூப்பிட்டவரு பிரசாத் ரெட்டி. உள்ளே போனா எல்லா பத்திரிகை ஆபீஸ்லேருந்தும் லெட்டர் வந்திருக்கு. ரெட்டி கேக்கறாரு... 'ஈயந்த்தா ஏமி' 'என்ன... தெரியலையே...'னு சொன்னேன். 'என்ன தெரியலையா....' பத்திரிகை பேர் எல்லாம் சொல்லி, 'இங்கிருந்தெல்லாம் உனக்கு லெட்டர் வந்திருக்கு'ன்னார். 'ஆமா சார் அங்கெல்லாம் போனேன்; டிராயிங்க்ஸ் கொடுத்துட்டு வந்தேன். லெட்டர் வந்திருக்கா'ன்னேன். 'இந்த மாதிரி எல்லாரும் பண்றாங்கன்னுதானே உனக்கு முன்பணமா 350 ரூபா கொடுத்தேன். நீங்க எல்லாருமே இப்படிதான் இருப்பீங்களா... இங்க சம்பளம் கொடுக்கிறேன் வெளியே வேலை பார்க்குறீயே... என்ன அர்த்தம்...?'ன்னு எரிச்சலா கேட்டாரு. 'உனக்கு இதைவிட வெளியே சம்பளம் ஜாஸ்தின்னா தாராளமா வெளியே போகலாம்...' 'எனக்கு குமுதத்துலே 2 ஆயிரம் ரூபா தரேன்னு இருக்காங்க. அங்கே போகப் போறேன்னேன்'. 'போ... போ...'ன்னார். வெளியே வந்துட்டேன்.
27 July 2011
தமிழ் சினிமா பார்க்காத கதை
Posted by lavanyan gunalan
6:20 PM, under பேட்டி | 2 comments
ஆரம்பமே ஆஹா என்று சொல்லும்படியான வாய்ப்பு எல்லா ஹீரோக்களுக்கும் கிடைக்காது. ஆனால், ராஜீவ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருடைய முதல் படமே ஆஹா..! சின்ன இடைவெளிக்குப் பிறகு சில படங்களில் நடித்தார். மீண்டும் இடைவெளி! இப்போது அந்த இடைவெளி மொத்தத்தையும் இட்டு நிரப்பும் வகையில் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கியிருக்கிறார் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின்மூலம்!
கேரளத்துப் பைங்கிளி
மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை தனபால் பத்மநாபன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது. படத்தில் புதுமுகங்கள் நந்தனா, ஹேமச்சந்திரன் கதாநாயகி, நாயகனாக வலம் வருகிறார்கள். முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து இருக்கிறார்கள். 80களில் இருந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படம், தமிழ் சினிமா இதுவரை பார்க்காத கதைக் களன். இந்தப் படத்தில் அறிமுகமாகும் நந்தனா இன்னொரு கேரளத்துப் பைங்கிளி. குடும்பப் பாங்கான தோற்றமும் சரசரக்கும் மல்லிகையும் வைத்திருக்கும் நந்தனாவைப் பார்த்தால் லவ் பண்ணத் தோன்றும். கிருஷ்ணவேணி பஞ்சாலைப் படத்தில் நந்தனாவை காதலிக்கும் கதாநாயகன் ஹேமச்சந்திரன்.
செக்ஸி ஷில்பா!
Posted by lavanyan gunalan
6:52 AM, under history | No comments
மைல்கல்: 1
ஓவியர் ஸ்யாம்: 3

ஸ்கூல்லே எவனும் என்னை மதிக்கலை. இந்தமாதிரி ரஜினி கிட்டேருந்து லெட்டர் வந்தா நம்பளை யார் மதிப்பா..? அப்போ பரீட்சை வேற நடந்துட்டு இருந்தது. முடியட்டும்னு இருந்தேன். முடிஞ்சதும், கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் போகவேண்டியவன் மெட்ராஸுக்கு பஸ் ஏறிட்டேன். கையில் ஒரு முன்னூறு ரூபா. அப்புறம் ரஜினி, கமல், சத்தியராஜ் இப்படி நிறைய ஹீரோக்கள். படங்களாக இருக்கிறார்கள்; அவ்வளவுதான்.
எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து நடந்தே ஏவி.எம். ஸ்டூடியோ வந்தேன். உள்ளே போனா, 'குற்றவாளிகள்'னு ஒரு படம் ஷூட்டிங். வேடிக்கைப் பார்க்கலாம்னு அங்கிருந்த ஒரு கல்லு மேலே உட்கார்ந்தேன். கல்லு டபக்குன்னு உள்ளே போயிடுச்சு. எழுந்து ஒரு திண்ணையிலே உட்கார்ந்தேன். திண்ணை பொதக்குன்னு போயிடுச்சு. 'ஏய்... ஏய்... அங்கே உட்காராதப்பா, எல்லாம் செட்டு'ன்னு சொல்லிட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் வந்தாரு, 'யாரு நீ... எல்லாத்தையும் உடைச்சிட்டு இருக்கே'ன்னார். 'இல்லைங்க டிராயிங் வரைஞ்சிருக்கேன் ரஜினிகாந்தைப் பார்க்கணும்.' 'என்னது ரஜினிகாந்தை பார்க்கணுமா.' 'அட்லீஸ்ட் கமல், சத்தியராஜையாவது பார்க்கணும்; ஆட்டோகிராஃப் வாங்கணும்'னேன். 'ஊர்லேருந்து கிளம்பி வந்திருக்கியா... எங்க படத்தைக் காட்டு'ன்னார். பார்த்துட்டு, 'எதுக்குப்பா இதெல்லாம் உனக்கு, எதிர்லேதான் 'அம்புலிமாமா' பத்திரிகை இருக்கு அங்க போனாலும் எதாச்சும் வேலை கொடுப்பாங்க'ன்னு சொன்னாரு.
26 July 2011
ரஜினியின் வெளிவராத படங்கள்
உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ரஜினி இருந்தது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வேதனையாக இருந்தது. அதனால், கோயிலுக்குப் போவதும் கடவுளிடம் வேண்டுவதுமாக இருந்துவந்தார்கள். அதன்பிறகு அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனபோதுகூட மிகவும் வேதனையோடு இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் பற்றிய தவறான செய்திகளே கசிந்துகொண்டிருந்தன. அவருடைய படங்களோ, வீடியோ காட்சிகளோ வெளிவராமலேயே இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ரஜினியின் மகிழ்ச்சியான தருணங்களை இப்போது அவருடைய ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.
25 July 2011
24 July 2011
சக்தி கொடு!
Posted by lavanyan gunalan
8:11 AM, under பேட்டி | 3 comments
வியாசர்பாடி ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் சக்தி ஈஸ்வரி வீட்டுக்கு வழி சொல்கிறார்கள். வீடு நிறைய மெடல்களையும் கோப்பைகளையும் குவித்து வைத்திருக்கிறார் இந்த கால்பந்தாட்ட வீராங்கனை. கோப்பைகளுக்கும் மெடல்களுக்கும் இணையாக சக்தியின் வீட்டில் வறுமையும் நிறைந்திருக்கிறது.
“இந்த ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் ஹோம்லெஸ் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நான் நிச்சயம் பங்குபெறுவேன்... போனமுறை பிரேசில் போட்டியை மிஸ் பண்ணிய மாதிரி இந்தமுறை விடமாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொல்லும் சக்தியிடம், “ஏன் போனமுறை கலந்துக்கலை... ஃபிட்னஸ் இல்லாமல் போயிடுச்சா” என்றால் வேதனையோடு சிரிக்கிறார்.
சக்தி ஈஸ்வரி |
23 July 2011
ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி...
வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானை அடுத்து இசையமைப்பாளர் என். ஆர். ரஹ்நந்தன் சேர்ந்து இருக்கிறார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இவருடைய இசையில் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு தாயே...’ பாடல்தான் தேசிய விருதை வென்றிருக்கிறது. அதே உற்சாகத்தோடு இருவரும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆலைக்காரி அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றதும் துள்ளலாகப் பேசத் தொடங்கினார்.
![]() |
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில்... |
19 July 2011
தெய்வத்திருமகள் படைத்த தெய்வத்திருமகன்
Posted by lavanyan gunalan
11:14 PM, under | 3 comments
தெய்வத் திருமகள் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள். இப்படியொரு படம் தமிழில் இதுவரை வந்தது இல்லை. தழுவல் படமாக இருந்தாலும், காப்பி படமாக இருந்தாலும் அதை தமிழில் சோடைபோகாமல் கொடுத்ததற்கு பாராட்டவேண்டும். சீயான் விக்ரமுக்கு தேசிய விருது காத்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்த சாராவுக்கு தமிழக அரசு விருதாவது கொடுக்க வேண்டும். தேசிய விருதுக்கு பரிசீலிக்கலாம்! விக்ரமின் நடிப்பு இளகிய மனம் படைத்தவர்களை அழவைக்கிறது! நானும் அழுதுவிட்டேன். மதராசபட்டணம் படத்துக்குப் பிறகு இப்படியொரு படத்தை கொடுத்த தெய்வத்திருமகன் விஜய்க்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுகள்.
18 July 2011
வெண்ணிலா - முருகேஷ் காதல் கதை
Posted by lavanyan gunalan
10:32 PM, under ரொமான்ஸ் | 3 comments
கவிஞர் அ.வெண்ணிலாவின் கனவிருந்த கூடு புத்தகத்தைப் புரட்டியபோது ‘நன்றி இந்திய தபால்துறை’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான்... அவருக்கும் கவிஞர் மு.முருகேஷுக்குமான காதலில் முக்கிய பங்கு இந்திய தபால் துறைக்கு இருக்கிறது. அவர்களுடைய காதலுக்காக இந்திய அரசாங்கமே ஓடி ஓடித் தூது சென்றிருக்கிறது. அந்த வகையில் அவர்களுடைய காதல், கடிதங்களால் ஆனது! கல்யாணத்துக்காகக் காதலிப்பவர்களின் பெயர்களை எழுதிக்கொண்டே இருக்கலாம்! காதலிப்பதற்காகக் கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் பட்டியல் மிகச் சிறியது. அதில் முன் வரிசையில் இருப்பவர்கள் அ.வெண்ணிலா - மு.முருகேஷ். இலக்கிய நண்பர்களாகிக் காதலரானவர்கள். காதலித்துக் கொண்டிருந்தபோது நாள் தவறாமல், வெண்ணிலா முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் கவிதை. முருகேஷ் எழுதிய கவிதைகள் அத்தனையும் வெண்ணிலாவுக்கான கடிதம். தங்களுடைய காதல் வாழ்க்கையை முருகேஷ் பேசுகிறார்...
வெண்ணிலா - முருகேஷ் |
17 July 2011
16 July 2011
அழகுக் குறிப்புகள்: பாதம் நகம் பராமரிப்பு
Posted by lavanyan gunalan
10:38 PM, under ஹெல்த் | 4 comments
அடுத்தவர் கண்களுக்கு அத்தனை எளிதில் தெரியாது என்பதால், பாத பராமரிப்பு பல பெண்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தவிர, பாதப் பிரச்னையில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு, பாதத்தில் வலி, குடைச்சல் ஏற்படும். தோல் வெடிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும். “உங்கள் கைக்கெட்டும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்”
என்கிறார் சித்த மருத்துவர் பொன்.ராமச்சந்திரன்.
என்கிறார் சித்த மருத்துவர் பொன்.ராமச்சந்திரன்.
15 July 2011
13 July 2011
தொடர் குண்டுவெடிப்பு: மும்பையில் என்ன நடக்கிறது - வீடியோ ரிப்போர்ட்
Posted by lavanyan gunalan
9:51 PM, under வீடியோ | No comments
மும்மையில் தொடர்ந்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து இருப்பதாக இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதனால், ரசிகர்கள் ரஜினியை சந்திப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.
மும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு
Posted by lavanyan gunalan
7:32 PM, under பாப்கார்ன் | No comments
மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால், பெரிய உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் காவல்துறை திணறிவருகிறது. தொடர்ந்தும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்பதால் மும்பை மாநகரமே அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. இதற்குமுன் பல முறை மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் இந்தமுறை நிகழ்ந்த சம்பவம் பெரிய அளவில் இருக்குமோ என்று தெரிகிறது.
![]() |
கோப்புப் படம் |
12 July 2011
பூனை ரோமம் போயே போச்சு!
Posted by lavanyan gunalan
10:35 PM, under health | 2 comments
பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம்... ஆனால், அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக்கொண்டே வாழும் பெண்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக் கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குகிறார்கள். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டே வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற ‘ஹேர் ரிமூவிங் க்ரீம்’களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சித்தமருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.
10 July 2011
பேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனம்
Posted by lavanyan gunalan
10:27 PM, under கட்டுரை | 4 comments
சமீபகாலமாக பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு பேருந்து ஓட்டுனர்களே மூலகாரணமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை பெரிய அளவில் பேருந்து விபத்துகள் நடந்துள்ளன. இந்த இரண்டு விபத்துகளில் இருந்தும் பேருந்து ஓட்டுனர்கள் உயிர்தப்பி விட்டார்கள். உயிர் இழந்ததும், காயமுற்றதும் பயணிகள்தான். பாதிக்கப்பட்டதும் அவதிப்பட்டதும் பயணிகள்தான். அங்காங்கே இப்படி விபத்துகள் நடப்பதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்திகள், காட்சிகள் வெளியிட்டாலும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையும் பொறுப்பற்றத்தன்மையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
![]() |
கிசு கிசு: பில்டப் கொடுக்கும் நடிகைகளின் அம்மாக்கள்
Posted by lavanyan gunalan
3:57 PM, under | No comments
ஹீரோவுக்காக மோதும் அக்கா, தங்கை
Posted by lavanyan gunalan
11:02 AM, under கேலரி | No comments
இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவில் வட்டமடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேபோல அவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். இப்போது விமலுக்கு ஜோடியாக தமிழிலும் நிஷா குதிக்கப் போகிறார். பெயர் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தை, பிரேம் நிஸார் இயக்குகிறார். பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் சார்பில் ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்.
இந்தப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் தன் கனவு நனவாகி இருப்பதாக சொல்லும் நிஷா பார்ப்பதற்கு இன்னொரு காஜல் மாதிரியே இருக்கிறார். ஒருவேளை அக்கா தங்கை ரெண்டுபேரும் ஒரே படத்தில் ஹீரோவுக்காக மோதிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழ் சினிமாவில்தான் என்னவேண்டுமானாலும் நடக்குமே!
அவன் இவன் - அத்தனையும் என் வசனங்கள்தான்!
தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் வாயிலாக வெகுஜனங்களுக்கும் பழக்கப்பட்டவர். பாபா தொடங்கி அவன் இவன் வரைக்கும் பத்து படங்கள் வரை இதுவரை வசனம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் ராமகிருஷ்ணன் அவன் இவன் படம் பற்றி வருகிற விமர்சனங்கள் குறித்தும் அந்தப் படத்தைப் பற்றியும் தெனாலிக்காக பகிர்ந்துகொண்டார்.
![]() |
எஸ்.ராமகிருஷ்ணன் |
09 July 2011
ஈழ இலக்கியத்தின் இறுதிக் குரல்
![]() |
பேராசிரியர் சிவதம்பி |
மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவதம்பி ஜூலை 6 அன்று இரவு இலங்கையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் மொழித் துறைக்காக பல்வேறு ஆய்வுகளை சிவதம்பி அளித்திருக்கிறார். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து மாணவர்களோடு கலந்துரையாடல், ஆய்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வற்றாத தமிழ் அறிவை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அடிக்கடி அவர் தமிழகத்துக்கு வரக் காரணமானவர்களில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு ஒருவர். சிவதம்பியோடு மொழி ரீதியாகவும் மன ரீதியாகவும் நெருங்கிப் பழகியிருக்கும் பேராசிரியர் வீ.ரசிடம் சிவதம்பியின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளச் சொன்னோன். அருவியாகக் கொட்டிவிட்டார்.
07 July 2011
கா.சிவதம்பி நினைவுகள்...
Posted by lavanyan gunalan
11:21 PM, under பேட்டி | No comments
மறைந்த மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை கூட்டாஞ்சோறு காலாண்டிதழுக்காக 2006 ஆண்டு நானும் வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் அவர்களும் நேர்காணல் நடத்தினோம். தமிழ் எழுத்து சீரமைப்பு குறித்து அப்போது வ.செ.குழந்தைசாமி ஆய்வுநடத்திக்கொண்டிருந்தார். தமிழ் வழிக் கல்வி சீரழிந்து வருவது பற்றியும் அப்போது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதேபோல அன்றைய சூழலில் இருந்த தமிழ் கல்வி, தமிழ் இலக்கியம் குறித்தும் சிவத்தம்பியோடு விவாதித்தோம். அதில் முக்கியமான சில கேள்வி-பதிலை மட்டும் கூட்டாஞ்சோறு இதழில் வெளியிட்டோம். கூட்டாஞ்சோறு வெளிந்துகொண்டு இருந்தபோது பத்திரிகை நிர்வாகத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன்.
தமிழ் மொழிக்கு சிவத்தம்பி ஆற்றிய பணிகள் ஏராளம். அவருடைய ஆய்வுகள் பல கல்லூரிகளிலும் பல்கலைகளிலும் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்ந்துவந்த அவர் நேற்று இரவு காலமானார். இதற்குமுன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள சிவத்தம்பி வந்தபோது விமானநிலையத்திலேயே அவரை திருப்பியனுப்பியது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடைசியாக கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்கு சிவத்தம்பிக்கு கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். கடைசிவரைக்கும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், பழைய சம்பவங்களை யெல்லாம் மறந்துவிட்டு செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி கலந்துகொண்டு ஆய்வுரையாற்றியது கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளித்தது. மறைந்த கா.சிவதம்பிக்கு இரங்கல் தெரிவிக்கும் முகத்தான் அவருடைய பழைய நேர்காணலை செய் அல்லது செய் வலைப்பூவில் வெளியிட்டு பழை நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
![]() |
கா.சிவதம்பிக்கு அஞ்சலி |
இலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .
குழந்தை வளர்ப்பது எப்படி?
Posted by lavanyan gunalan
5:00 PM, under ஹெல்த் | No comments
”டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு... எதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...
பெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை” - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.
03 July 2011
மெழுகுச் சிலை தமன்னா: Vengai stills
Posted by lavanyan gunalan
7:33 PM, under கேலரி | No comments
பையா படத்துக்குப் பிறகு தமன்னாவுக்கு தமிழ் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் பத்து படங்கள் வந்தால், ஒரு படத்திலாவது தமன்னா ஒய்யாரம் காட்டுகிறார். சிம்ரனுக்குப் பிறகு அழகு, உடற்கட்டு, டான்ஸ், நடிப்பு, காமெடி, ரொமான்ஸ் என்று எல்லாவற்றிலும் தூள் கிளப்பும் நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைக்கவில்லை. அந்த இடத்தை தமன்னா நிரப்பிவிட்டார். ஹரி இயக்கத்தில் திரைக்கு வர காத்திருக்கும் வேங்கைப் படத்தில் தனுஷுக்கு ஜோடி போட்டு டூயட் பாடும் மெழுகுச் சிலை தமன்னாவின் அழகு படங்கள்.
அழுமூஞ்சி கேரக்டர் வேண்டாம்: ரேணுகா
Posted by lavanyan gunalan
12:47 PM, under பேட்டி | No comments
படபடவென்று பேசும் ரேணுகா படு அமைதியாக இருந்தார். “நான் இப்போ ரேணுகா இல்லை... ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை...’ பூங்கோதையின் அம்மா... அதனால், இப்படித்தான் இருக்கணும்...” என்றார். அதுதான் ரேணுகா.
படத்தின் கதாபாத்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு சுயத்தை மறந்து நடிக்கும் மிகச்சில நடிகைகளில் அவரும் ஒருவர்.
”நான் போட்ட கண்டிஷனே அதுதான். ஏன்னா பத்தோடு பதினொன்னா வந்து நடிச்சுட்டுப் போறதில் என்ன லாபம் இருக்கு சொல்லுங்க... நம்ம பேரு நிக்கற மாதிரி நடிக்கவேண்டாமா..?” என்றவர், நம் கேள்விகளை நிதானமாக உள்வாங்கிப் பேசுகிறார்.
![]() |
கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்திலிருந்து... |
02 July 2011
பேயாட்சி செய்யும் நாடு!
Posted by lavanyan gunalan
9:02 PM, under கட்டுரை | No comments
நதிக்கு யாரால் பாதையமைத்து கொடுக்க முடியும்?
சூரியனுக்கு உங்களால் சுற்றுவட்டப் பாதை அமைக்க முடியுமா?
புலியை வளர்த்து புல் திங்கவைக்கத்தான் முடியுமா..?
இல்லையென்றால், கவியரசர் சொன்னது மாதிரி காற்றுக்கும் கடலுக்கும் வேலியும் மூடியும்தான் உங்களால் போட்டுவிட முடியுமா..?
இதையெல்லாம் செய்ய முடியாதபோது இந்த இயற்கையையும் இயற்கையின் படைப்புகளையும் சூறையாடுவதற்கும், சின்னாபின்னப் படுத்துவதற்கும் என்ன உரிமை இருக்கிறது?
![]() |
கோத்ரா ரயில் பற்றவைக்கப்பட்டு எரிகிறது... |
01 July 2011
இதயம் டிவென்டி 20: எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை

"அதுதான் கஷ்டமாக இருக்கு... நாங்க பிஸியாக இருந்தா நோய்களெல்லாம் ஓவர் டைம் பண்ணுதுன்னுதானே அர்த்தம்... அப்படி இருந்தா நல்லது இல்லையே... நம்ம உடம்பை நாமேதான் நோய்க்கு பரிசாகக் கொடுத்துடறோம்... சில பழக்கங்களால்!” என்று ஜாலியாகப் பேசிய சிவகடாட்சத்திடம் அவருடைய நேரத்தை வீணாக்காமல் ஒரு டிவெண்டி 20 பேட்டியை முடித்தேன்.