30 June 2011

சர்ச்சை படங்களும் சர்ச் பண்ணும் படங்களும்...

Posted by lavanyan gunalan 7:18 AM, under | 1 comment

நயந்தாராவின் சர்ச்சைக்கு உள்ளான சில படங்களும்
அதிகம் சர்ச் பண்ணும் சில படங்ளும்


சினிமாவுக்கு முழுக்கு போட்ட சர்ச்சை நாயகி

Posted by lavanyan gunalan 6:49 AM, under | 1 comment

பிரபல நடிகை திரையுலகைவிட்டு பிரிந்தார். பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து, பல பிரச்னைகளையும் சந்தித்தனர். முதல் மனைவி இருக்கும்போதே நயன்தாராவுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று பிரபுதேவா மனைவி ரமலத் குற்றம்சாட்டி கோர்ட் வரைக்கும் சென்றார். 

ஒருகட்டத்துக்கு மேல் பிரபுவின் நடவடிக்கைகளை ரமலத்தால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அதனால், தன்னுடைய போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகாகிவிடக்கூடாது என்பதற்காக பிரபுவோடு சுமுகமாக போகத் தொடங்கியவர், விவாகரத்து பெற்றுக்கொள்வது என்றும், தனக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும், சொத்தில் பங்கு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

29 June 2011

தங்கம் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்

Posted by lavanyan gunalan 6:56 PM, under | No comments

சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் கலைமகள் ஹவுஸை கும்பகோணமாக்கி பரபரப்பாக சுட்டுக் கொண்டிருந்தார்கள் தங்கம் சீரியல் அணியினர்.

‘‘எப்படி சார் இருக்கு தங்கம் குடும்பம்?’’ என்ற கேள்வியோடு சீரியல் இயக்குனர் நக்கீரனைப் பிடித்தோம்.

தங்கம் ஷூட்டிங் ஸ்பாட்

28 June 2011

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

Posted by lavanyan gunalan 11:58 PM, under | No comments

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்தபிறகு தொடர்ந்து 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.

எல்லாம் தருது இயற்கை விவசாயம்!

Posted by lavanyan gunalan 7:39 PM, under | No comments

இல்லத்தரசி சிவகாமி பெண்களுக்கு மட்டுமல்ல... விவசாயத்தில் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்று சோர்ந்து போயிருக்கும் ஆண்களுக்கும் சரியான உதாரணமாக இருக்கிறார். கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்தில் இருக்கிற நாதிபாளையம் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் சிவகாமியின் வீட்டுக்கு வழி சொல்லும் அளவுக்கு ஏரியாவில் ரொம்பப் பிரபலம். அதற்குக் காரணம், இயற்கை விவசாயம்!

ஒன்பது ஏக்கர் நிலத்தில் பயிர் செய்திருந்தார்கள். அதில் ஆறு ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை இருந்தது. இரண்டுக்கும் நடுவே ஊடுபயிராக தானியப் பயிர்கள். மீதமுள்ள மூன்று ஏக்கரில் காய்கறிகள், நெல், வளர்ப்பு கால்நடைகளுக்கு வேண்டிய தீவனப் பயிர்கள் இருந்தன.

27 June 2011

வாய்க்கவில்லை ஒரு தோழி

Posted by lavanyan gunalan 8:17 PM, under | 2 comments

எனக்கென்று ஒரு தோழியிருந்தாள்
மழலைப் பருவத்தில்
அம்மா என்று அழைக்க.
26 June 2011

தேவதைகள் உலா வருகிற நேரம்

Posted by lavanyan gunalan 7:14 AM, under | 1 comment

நீ இல்லாமல் போனதிலிருந்து
தூக்கமும் போய்விட்டது.

இருந்தால்,
தேவதை கதை சொல்வாய்...

நான்
உன் மடி மீது தலை சாய்ப்பேன்.


25 June 2011

உலகிலேயே செக்ஸியான பெண்ணாக காத்ரீனா கைஃப் தேர்வு

Posted by lavanyan gunalan 8:54 PM, under | 1 comment

பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகையான இருந்துவரும் காத்ரீனா கைஃப் உலகிலேயே செக்ஸியான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

பிரபல லைஃப் ஸ்டைல் பத்திரிகையான FHM நடத்திய கருத்துக்கணிப்பில் காத்ரீனா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்தக் கருத்துக்கணிப்பில் 35 ஆயிரம் பேர் பங்குகொண்டனர்.


24 June 2011

கிரேஸ் - கருணாஸ் காதல் கதை

Posted by lavanyan gunalan 8:32 PM, under | No comments


‘‘இப்படி எதிரே வந்து ‘உங்கள் காதலைப் பற்றிச் சொல்லுங்க’னு நீங்க உட்கார்ந்து இருக்கீங்க பார்த்தீங்களா... அதுதான் எங்க காதலுக்குக் கிடைச்ச வெற்றியாக நான் பார்க்கிறேன்...’’ என்று ஆரம்பிக்கும்போதே கிரேஸ் படு எமோஷனலாக இருந்தார். காதல் அவரை அவ்வளவு உணர்வுபூர்வமாக ஆக்கியிருக்கிறது.

‘‘நான் கலந்துகொண்ட கல்லூரி நிகழ்ச்சிக்கு நடுவராக வந்தார் கருணாஸ். அந்தப் போட்டியில் பரிசு வென்றதோடு அந்த நிகழ்ச்சியை நான் மறந்துவிட்டேன். ஆனால், இரண்டு நாட்களுக்குப்பிறகு கருணாஸ் என் கல்லூரி தேடிவந்து முதல்வரிடம் என்னைப் பாடவைக்கப் போவதாகச் சொல்லி பேசிவிட்டு தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்துவிட்டுச் சென்றார். 


23 June 2011

ஹீரோ ஆக்கிய ரஜினி லெட்டர்

Posted by lavanyan gunalan 10:14 PM, under | No comments

மைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 2
ஒருநாள், சாந்தி டீச்சர் தண்ணி குடிக்கிறாங்க. பல்லுலேயிருந்து தண்ணி சிதறி விழுது. நான் கீழே நிக்கிறேன். ஆனா, குடை பிடிச்சி இருக்கேன். இப்படி, ஒரு படம் போட்டு இருந்தேன்.

ஆனா, எதுக்குப் போட்டேன்... ஏன் போட்டேன்னு யாரும் கேட்கலை. இந்தமாதிரி ஓவியத்தின் மூலமா ஒரு விஷயத்தை நிறைவேத்துற மனநிலை எனக்கு அப்பவே இருந்தது.


22 June 2011

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தட்டிக்கேட்காத பிரச்னைகள்

Posted by lavanyan gunalan 10:07 PM, under | 1 comment

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதெல்லாம் சிலப்பதிகார காலம். இப்போதெல்லாம் அரசியல் பிழைத்தோர்க்கு கில்மா கூற்றாகும்... உடான்சு கூற்றாகும்... டகால்டி கூற்றாகும்... தில்லாலங்கடி கூற்றாகும்... டபாய்த்தல் கூற்றாகும்... 420 கூற்றாகும்... ஸீனு கூற்றாகும்... உட்டாலங்கடி கூற்றாகும்... ரவுசு கூற்றாகும்... பீலா கூற்றாகும்... உதாறு கூற்றாகும்... ரீலு கூற்றாகும்... இப்படி சென்னை பாஷையில் பல விஷயங்களை அரசியல் பிழைப்போருக்கு கூற்றாக உரைக்க முடியும்.

அந்த வகையில் ஒரு கூற்றை வைத்துக்கொண்டு மரியாதைக்குரிய ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவன் மீடியாக்களிடம் டபாய்த்துக்கொண்டு இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி சொன்ன, ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற வாசகத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இளங்கோவன் பேசுகிறார்... ’’கருணாநிதி காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொண்டதால்தான் கேடாக முடிந்தது என்று கூறிவருகிறார். ஆனால், திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டதால்தான் காங்கிரஸ் கட்சி தோற்றது’’

- இதைவிட பெரிய காமெடி வேற இருக்கவே முடியாது.

கருணாநிதி VS இளங்கோவன்

21 June 2011

ஷேம் ஷேம்... பப்பி ஷேம்!

Posted by lavanyan gunalan 8:52 PM, under | No comments


ஒவ்வொரு துறையிலும் சிலர் முத்திரை பதித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கை பலருக்கு மைல்கல். அந்தச் சாதனை யாளர்களின் வாழ்க்கையை சாமானியர்களுக்கும் அறிமுகப் படுத்துவதன் நோக்கம்தான் இந்த மைல்கல்.

மைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 1

'வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவனே
வெற்றி பெறுகிறான்;
வெற்றிப் பெற்றவர்கள் எல்லாரும்
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்களே!'

- யாரோ அறிஞன்


ஸ்யாம். முழுப்பெயர் ஸ்யாம்சங்கர். தன் வாழ்க்கையில் நடந்த எல்லா பாதக நிகழ்வுகளையும் பாஸிட்டிவாக அணுகி, வெற்றிகளாக மாற்றிக்கொண்டவர். 15 வயதில், தனியாக சென்னைக்கு வந்து, சில நாட்களிலேய பிரபல பத்திரிகைகளில் வேலை பார்க்கத் தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர ஆங்கிலப் பத்திரிகை உலகிலும் இவரது ஓவியங்கள் பேசுகின்றன. இமைத் துள்ளும் இவரது ஓவியங்களுக்கு ரசிகப் பட்டாளம் ஏராளம். கவர்ச்சியையும் வசீகரத்தையும் குழைத்து யூத்ஃபுல்லாகவும் கலர்ஃபுல்லாகவும் கொடுப்பது ஸ்யாம் ஸ்பெஷல்.

இனி ஸ்யாம் மொழியில்...

ஸ்யாம்

20 June 2011

பாலா என்கிற யானை

Posted by lavanyan gunalan 11:35 PM, under | 2 comments

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதேநேரத்தில், அவருடைய மற்றப் படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்ற தகுதியோடும், வலைதளங்களில் பலரும் பலவிதமாக அவன் இவன் படத்தின் கதையையும் பாலாவின் இயக்கத்தையும் விமர்சித்து எழுதிவருவதை சில நாட்களாக வாசித்து வருகிறவன் என்ற தகுதியோடும், எது நல்ல சினிமா எது போலியான சினிமா என்று பகுத்தாயும் பக்குவம் உடையவன் என்ற தகுதியோடும் அவன் இவன் படத்தின் மீது வைக்கப்படுகிற விமர்சனங்கள் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.

19 June 2011

ரொமான்ஸ் ராஜா

Posted by lavanyan gunalan 8:25 PM, under | 2 comments

சண்முக ராஜா’ - இந்தப் பெயரைச் சொன்னதுமே கண்களை உருட்டி பிடிங்கடா அவனை என்று ஹீரோவை நோக்கி அடியாட்களை ஏவும் வில்லன் முகமோஅல்லது நீ சொல்றபடி எல்லாம் கேட்கறதுக்கு நான் ஆளில்லை… உன்னால் முடிஞ்சதைப் பார்த்துக்கோ என்று ஹீரோவிடம் சொல்லிவிட்டு வில்லனிடம்நான் உங்கபக்கம்தான் ஐயா… என்று போலி பணிவு காட்டும் போலீஸ் அதிகாரி முகமோதான் நினைவுக்கு வரும்.

18 June 2011

திருநங்கைகளை கொச்சைப்படுத்துகிறார்கள் இயக்குனர்கள்: கல்கி தடாலடி!

Posted by lavanyan gunalan 8:21 PM, under | No comments

ர்த்தகி படத்தின் மூலம் திருநங்கைகளுக்கும் சமூகத்துக்கும் உள்ள இடைவெளியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் திருநங்கை கல்கி. கலை, படைப்புகள், திருநங்கைகளுக்கான இயக்கம் என்று சுற்றிவரும் கல்கி, நர்த்தகி படத்தில் கல்கியாகவே நடித்து தன்னுடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். அவரோடு உரையாடியதிலிருந்து...

17 June 2011

அவள் இடை ஞாபகம்!

Posted by lavanyan gunalan 6:43 PM, under | No commentsஎன் பார்வைக் கணைகள்
தீண்டும் நேரங்களில்
பட்டாம்பூச்சியாகிவிடுகின்றன
அவள் விழிகள்

16 June 2011

தங்கம் வாங்கப் போறீங்களா... ஒன் மினிட் ப்ளீஸ்!

Posted by lavanyan gunalan 5:05 PM, under | No comments

முன்பதிவு, பழைய விலையில் புதிய தங்கம் என்று பல தூண்டில்களைப் போட்டு அட்சய திருதியை அன்று தங்கம் விற்கிறார்கள் நகைக் கடைக் காரர்கள். முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இப்படி கொஞ்சம் கொஞ்ச மாக நகை வாங்கி சேமிப்பது நல்ல பழக்கம்தான். ஆனால், அதைவிட லாபகரமான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியோடு பிரபல முதலீட்டு ஆலோசகரான நாகப்பனை அணுகினோம்.

ஆஹா தங்கம்!ஆச்சர்யம்! ஆனால் உண்மை!

Posted by lavanyan gunalan 6:55 AM, under | 1 comment

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகள் கோபிகாவை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். தருமபுரி ஆட்சியராக இருந்தபோது மகள் கோபிகாவை அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் சேர்த்திருந்த ஆனந்தகுமார், ஜூன் 3இல் ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு கலெக்டர் பங்களாவிற்கு அருகிலுள்ள குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்து இருக்கிறார்.

பாடம் படிக்கும் ஆட்சியர் மகள்

13 June 2011

கிளுகிளுப்பு மீனாள்

Posted by lavanyan gunalan 10:11 PM, under | No comments

இயக்குனர் சேரனின் தவமாய் தவமிருந்து படத்தின் மூலம் குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் அறிமுகமான நடிகை மீனாள், அதன்பிறகு சொல்லிக் கொள்ளும்படியாக வாய்ப்புகள் வராததால் சோர்ந்துபோய் இருந்தார். இப்போது மீண்டும் தமிழ் சினிமாவில் இரண்டாவது ரவுண்ட் வர முடிவெடுத்து தன்னுடைய புதிய படங்களை பத்திரிகைகளுக்கும் இணையதளங்களுக்கும் அனுப்பி வருகிறார். இதன்மூலம் தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் தன் பக்கம் திருப்பிவிட முடியும் என்று நம்புகிறாராம் மீனா....

12 June 2011

cave restaurant: குகை உணவகம்

Posted by lavanyan gunalan 8:10 PM, under | No comments


சென்னை அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருக்கிறது கேவ் ரெஸ்டாரண்ட். பேருக்கு ஏற்ப குகை வடிவிலேயே இந்த ரெஸ்டாரண்டை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கு சாப்பிடுவதற்கு போவதைவிட ரெஸ்டாரண்ட் அழகை ரசிப்பதற்காகவே போகலாம். வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தி. அதேபோல அங்கு பரிமாறப்படும் உணவுகளும் கூட ரொம்ப வித்தியாசமானவை. குகை என்ற பேருக்கு ஏற்ப இந்த ரெஸ்டாரெண்டில் பழங்குடிகளின் பிரியாணி, ஆப்பிரிக்கர்களின் உணவு வகைகள் என்று மெனுவில் அசத்துகிறார்கள்.


சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு குட்டு!

Posted by lavanyan gunalan 6:49 PM, under | No comments

சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிவைக்கக் கூடாது. இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேநேரத்தில் அரசு சமச்சீர் கல்வியை ஒத்திவைப்பதற்கும் உயர்நீதிமன்றம் இடைகால தடைவிதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.Spicy Stills

Posted by lavanyan gunalan 12:52 AM, under | No comments

என் பெயர் குமாரசாமி


11 June 2011

ஆண்மைத் தவறேல்

Posted by lavanyan gunalan 10:21 PM, under | No comments

கமல் நயன் மூவிஸ் சார்பில் குழந்தை வேலப்பன் இயக்கத்தில் சம்பத் புதுமுகங்கள் ஸ்ருதி, ஹனி, சோனம், தீபிகா ஆகியோர் நடித்து இருக்கின்றனர். ‌சென்னையில் ஆரம்பித்து கோவாவில் முடிகிறது படத்தின் கதை. வித்தியாசமான கதைக்களத்துடன், திரில்லர் நிறைந்த படமாகவும் ஆண்மைத் தவறேல் உருவாகி இருக்கிறது. 


தமிழக ஆளுநர் வெண்ணிலாவுக்கு விருது வழங்கினார்

Posted by lavanyan gunalan 9:15 PM, under | No comments


கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘இரவு வரைந்த ஓவியம்’ கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.


05 June 2011

குலைநடுங்கிய காங்கிரஸ்: ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார் - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்...

Posted by lavanyan gunalan 5:22 PM, under | No comments

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இரண்டு நாட்களாக ராம்தேவ் நடத்தி வந்த உண்ணாவிரதத்தை திட்டமிட்டு காங்கிரஸ் அரசு கலைத்து இருக்கிறது. ஆனால், ராம்தேவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தும், அதை ஏற்காமல் தொடர் போராட்டம் நடத்திவந்ததால்தான் பாதுகாப்பு காரணங்களுக்காக உண்ணாவிரதப் பந்தலில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


காசுக்கு விற்பதல்ல கலை!

Posted by lavanyan gunalan 1:02 PM, under | No comments


கலைகள் எல்லாம் காசாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் பரதக் கலையை இலவசமாகக் கற்றுத் தருகிறார் இந்த நடனக் கலைஞர். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் ‘விநாயகா நாட்டியாலயா’ பள்ளியை நடத்திவரும் மீனாட்சி ராகவன், தன்னிடம் நாட்டியம் கற்க வருகிற பிள்ளைகளிடம் ‘காசு இருக்கிறதா?’ என்று கேட்பதில்லை; ‘ஆர்வம் இருக்கிறதா?’ என்று மட்டும் கேட்கிறார்.

கோப்பு

கோப்பு