31 May 2011

இந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Posted by lavanyan gunalan 10:01 PM, under | No comments

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நாட்டு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு அணுக்கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பவிக்கப்பட்டனர். ஆனாலும், பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் பலருக்கு அணுக்கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்பட்டு ஜப்பான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பல உலகநாடுகள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகின. இதனால், பல நாடுகளில் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. சில நாடுகளில் இனி புதிதாக அணுமின் நிலையம் அமைக்கப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

’மக்களை விழுங்கக் காத்திருக்கும் அணுமின் உலை’

அப்படி அணுமின் நிலையங்கள் மூலம் 23 சதவீத மின்சார உற்பத்தி செய்யும் ஜெர்மன், நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் அத்தனையையும் இழுத்து மூடுவது என்று முடிவு செய்து இருக்கிறது. ஜெர்மன் அரசின் இந்த நடவடிக்கை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜெர்மனியில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக ஒரு அணுமின் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு வரப்பட்டது. ஆனால், ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு புதிதாக அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மட்டும் அல்லாமல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 17 அணு மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாக மூடுவது என்று ஜெர்மன் ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஜெர்மன் பார்லிமெண்டில் முன்வைத்து எதிர்கட்சியினரின் ஒப்புதலையும் பெற்று செயல்படுத்த ஆளும் கூட்டணி அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாகவே ஜெர்மனியில் உள்ள ஒரு அணுமின் நிலையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஜப்பான் பாதிப்புக்குப் பிறகு அனைத்து நிலையங்களையும் மூடவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இது ஆளும் கூட்டணிக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்தது.

மக்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் ஆளும் கட்சியான கிறிஸ்தவ குடியரசுக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அணுமின் நிலையங்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தின. அந்தக் கூட்டத்தில் 2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 17 அணுமின் நிலையங்களையும் படிப்படியாக இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோயட்கென், ‘ஏற்கெனவே 7 நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. செயல்படாமல் 1 நிலையம் இருக்கிறது. 6 நிலையங்கள் 2011 இறுதிக்குள் மூடப்படும். புதிதாகத் துவங்கப்பட்ட 3 நிலையங்கள் 2022ம் ஆண்டுக்குள் மூடப்படும். புதிதாக துவங்க இருந்த ஒரு அணுமின் நிலையத்தின் திட்டம் கைவிடப்படும்’ என்று தெரிவித்தார். அரசின் இந்த முடிவை ஜெர்மன் மக்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

ஜெர்மனியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அணுமின் நிலையங்களை இழுத்து மூடவேண்டும் என்ற மக்களின் எதிர்ப்புக் குரல் அதிகரித்து வருகிறது. அணுமின் நிலையங்கள் மூடுவது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள்.

ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிடும்போது, அணுமின் நிலையங்கள் மூலம் இந்தியாவில் மிகக் குறைந்த அளவே மின்சாரம் பெறப்படுகிறது. ஆனால், அதிகமான அணுமின் நிலையங்கள் இயங்கிவருகின்றன. அதனால், குறைவான மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் மூலமாக இந்தியாவின் மின் பற்றாக்குறையைப் போக்கமுடியாது. அதேநேரத்தில் காற்றலை மூலமாகவும், தண்ணீர், குப்பை, கழிவுகள் மூலமாகவும் மின்சாரம் பெறமுடியும் என்கிறபோது, சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த அணுமின் நிலையங்கள் எதற்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதனால், மாற்று முறையில் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்றும், புதிதாக கட்டப்பட்டும் அடுக்குமாடி மற்றும் கான்க்ரீட் வீடுகளில் சூரியமின்சாரம் தயாரித்து அவர்களுடைய மின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்துகொள்கிற அளவுக்கு குடியிருப்புகளில் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதன் மூலம் மின் தட்டுப்பாட்டை மிக அதிக அளவு போக்க முடியும். பேராபத்து விளைவிக்கக் காத்திருக்கும் அணுக் கதிர்வீச்சிலிருந்து மக்களை காக்கவும் முடியும்.

மாறாக முதலாளிகளுக்கும், அணுமின் நிலைய உபகரணங்களை இந்தியாவின் தலையில் கட்டி காசு பார்க்கத் துடிக்கிற வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளுக்கும் காங்கிரஸ் அரசு துணைபோனால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் நேர்ந்த ஒரு நிலை மத்தியிலும் காங்கிரஸுக்கு ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையங்களை நிரந்தரமாக மூடுவது குறித்து காங்கிரஸ் அரசு பரிசீலிக்க வேண்டும்.

- சா.இலாகுபாரதி

30 May 2011

ரொமான்ஸ் கொஞ்சம் கஷ்டம்: நந்தனா

Posted by lavanyan gunalan 9:48 PM, under | No comments


மை பூசிய கண்களில் சுஜாதா தெரிகிறார்... பல் வரிசையின் பளிச் சிநேகாவை நினைவுபடுத்துகிறது. கன்னங்களின் கதுப்பு மீனாவைப் போலிருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் பக்கத்து வீட்டுப் பெண் போல பரிச்சயமானவராக இருக்கிறார் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பட நாயகி நந்தனா.

எண்பதுகளின் காலகட்டத்தில் உடுமலைப்பேட்டை பஞ்சாலை பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’. அதற்கு ஏற்ற முகமும் அழகும் கொண்டவராகத் தேடியபோது சிக்கியவர்தான் நந்தனா. இந்தக் கதைக்கு இவரைவிட பொருத்தம் யாரும் இருக்கமுடியாது என்பது போல இருக்கிறது அவருடைய நடிப்பு என்று பாராட்டினார் இயக்குனர் தனபால் பத்மநாபன். நந்தனாவின் கழுத்தில் தொங்கும் கருகமணி பாசியும் சாயம் போன சீட்டி பாவாடை தாவணியும் அவர் கருத்து சரிதான் என்று கட்டியம் கூறுகின்றன. தமிழ் சினிமாவுக்கு நாயகிகளை உருவாக்கித் தரும் கேரளாதான் நந்தனாவையும் தந்திருக்கிறது. ஆனால், பேசும்போது தமிழுக்காகவே வார்க்கப்பட்டவர் என்பதை உணரமுடிகிறது.



உங்கள் குடும்பத்தைப் பத்திச் சொல்லுங்க...

அப்பா கவர்ன்மென்ட் எம்ப்ளாயீ. அம்மா ஹவுஸ் வொய்ஃப். சிஸ்டர் பிஎஸ்சி படிக்கிறா. பாட்டி, நான். இதான் எங்க ஃபேமலி.

எப்படி இந்த சினிமா வாய்ப்பு வந்தது?

எங்கக் குடும்ப நண்பர் மூலமாக இயக்குனர் தனபால் சாருக்கு அறிமுகமானேன். எனக்கு முன்னாடி நிறைய பேர் செலக்ஷன் லிஸ்ட்லே இருந்தாங்க. ஆனா, கதைக்கு என்னோட முகம் சரியாக இருக்கும்னு டைரக்டர் முடிவு செய்ததால் என்னை செலக்ட் பண்ணிட்டாங்க.

படத்தின் கதை என்ன?

கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்யுற பெண் தொழிலாளர்களைப் பத்தின கதை. இந்த ஒன் லைன் தவிர, டைரக்டரோட அனுமதி இல்லாமே கதை பத்தி பேச முடியாது.

இந்தப் படத்துலே நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது..?

யூனிட்லே எல்லாரும் ஃபிரெண்ட்ஸா பழகினாங்க. எனக்கு ஜோடியா நடிச்ச ஹேமச்சந்திரன், டைரக்டர், கேமராமேன் எல்லாருமே நல்ல தமிழ் தெரிஞ்சவங்க. அதனாலே மொழி தெரியாம நான் தடுமாறினாகூட உங்களாலே நல்லா பண்ணமுடியும்னு என்கரேஜ் பண்ணுவாங்க. நான் ஷூட்டிங் வந்தது ஒரு வேலையாவே எனக்குத் தெரியலை. காலேஜ் டூர், பிக்னிக் போன மாதிரிதான் இருந்தது. அவ்வளவு ஜாலி.

படத்துலே டான்ஸ், ரொமான்ஸ் பண்ணியிருக்கீங்களா..?

ஒரே பாட்டுக்கு டான்ஸ் பண்ணியிருக்கேன். நான் அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர். கூடவே குச்சுப்புடி, மோகினி ஆட்டம், கேரள நடனம், மோனோ ஆக்ட் எல்லாம் தெரிஞ்சதாலே என்னாலே ஈஸியா டான்ஸ் பண்ண முடிஞ்சது. ஆனா, ரொமான்ஸ்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. (சிரிக்கிறார்.)

எந்தக் கேரக்டர்லே நடிக்கணுங்கிறது உங்களோட ஆசை?

அப்படியெல்லாம் இல்லை. ஆனா, பேர் வாங்கிக் கொடுக்கிற மாதிரி நல்ல கேரக்டர் கிடைச்சா எந்தப் படத்துலேயும் நடிப்பேன்.

உங்களோட பொழுதுபோக்கு என்ன?

டி.வி. பார்க்குறது. புத்தகங்கள் படிக்கிறது. அப்புறம் டான்ஸ்.

யாரோட புத்தகங்கள் பிடிக்கும்..?

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரோட எல்லா நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அவரோட எழுத்திலே ஒரு உயிர் இருக்கும்.

எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க..?

உங்க பாராட்டுக்கு நன்றி... தினமும் காலையிலே அரை மணி நேரம் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவேன். டான்ஸ் ஆடுவதே ஒரு வகையிலே எக்ஸர்சைஸ்தானே! ஷூட்டிங்லே இருக்கும்போது டயட் ஃபாலோ பண்ணுவேன். வீட்டுக்கு வந்துட்டா அம்மா என்ன செய்து கொடுத்தாலும் விரும்பிச் சாப்பிடுவேன். டயட் கன்ட்ரோலெல்லாம் அப்ப கிடையாது.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, மார்ச் 2011
படங்கள்: கிருஷ்ணவேணி பஞ்சாலை

29 May 2011

காஃபி ஷாப் காதல்

Posted by lavanyan gunalan 1:52 PM, under | No comments

...இதற்குமுன்

காஃபி ஷாப்பில் காதலிக்காகக் காத்திருக்கிறான் காதலன்...

இரட்டை நபர் அமரும் இருக்கையில் ஒற்றை ஆளாய் காத்திருக்கிறான் காதலன். கட்ஷூ அணிந்த பணிப்பெண்களின் காலடி ஓசை பட்...பட்...பட்... என்று தேய்வதும் வளர்வதுமாக இருக்கிறது. காதலி இன்னும் வரவில்லையே என்று நுழைவாயிலை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவன் காதில், ’மே ஐ ஃஹெல்ப் யூ சார்’ -_ குல்ஃபி ஐஸ் கடித்துத் தின்றதுமாதிரி ஒரு குரல் காதில் விழுந்ததும் சட்டென்று திரும்பி, ‘நோ தாங்ஸ். ஐயாம் வெய்டிங் ஃபார் மை கேர்ள் ஃப்ரெண்ட். ஸோ அவங்க வந்தபிறகு ஆடர்பண்றனே. டோண்ட் மிஸ்டேக் மீ மிஸ்...’ என்று இழுத்தான். ’மிஸ் கவிதா’ என்று தன் பெயர் சொல்லிவிட்டு நகர்ந்தாள் பணிப்பெண்.

’ச்சே ஆசை ஆசையாக சீக்கிரம் வந்தும் இவளைக் காணோமே. சினிமாக்குவேற நேரமாச்சு. ஃப்ச். இந்தப் பொண்ணுங்களே இப்படிதான். காதலிக்கிறவரைக்கும் அவளுங்க நம்ம பின்னாடி சுத்துவாளுங்க. காதல் சொன்னபிறகு அவளுங்க பின்னாடி நம்மளை சுத்தவிடுவாளுங்க... இதுதான் இந்தப் பொண்ணுங்களோட மெண்டாலிட்டியே...’ நூறு காதலை பார்த்தது மாதிரி புலம்பினான்.

’அவ வர்ற வரைக்கும் என்ன பண்றது...’ யோசித்துக்கொண்டிருந்தவன், சட்டென்று பையிலிருந்து லேப்டாப் எடுத்து திறந்து சுற்றிலும் பார்த்தான். கவிதா வேறொரு டேபிளை கவனித்துக்கொண்டு இருந்தாள்.

’எக்ஸ் க்யூஸ் மீ மிஸ் காவிதா’ - அருகில் வந்தவள், ’வாட் யூ நீட் சார்’ என்றாள் தன்மையாக... ‘இல்லை இங்க வைஃபை இருக்கா’ கொஞ்சம் நெட் யூஸ் பண்ணனும்... ’ஓ இருக்கே... நீங்க தாராளமா யூஸ் பண்ணிக்கலாம்’ ‘தேங்ஸ்’ என்றதும் நகர்ந்தவளை அழைத்து, ‘கப் ஆஃப் காஃபி ப்ளீஸ்’ என்று ஜொள் வடித்துவிட்டு, ஃபேஸ்புக்கில் மேயத் தொடங்கிவிட்டான். காஃபி வந்தது... காதலியும் வந்துவிட்டாள்.



’ஏய் எங்கயா போனே... உனக்காக எவ்வளோ நேரம் வெயிட் பண்றேன் தெரியுமா...’ என்று சொல்லிக்கொண்டிருந்தவன், அவள் காதோரம் வந்து, ‘நீ இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தேன்னா இந்தக் கவிதாவை கரெக்ட் பண்ணியிருப்பேன்’ என்றான்.

’அடப்பாவி உன்னைக் கொல்லாம விடமாட்டேன்...’

காஃபி ஷாப் காதல் ஷாப்பாக மாறிப்போனது!

இடுப்பழகி இலியானா: glamorous Ileana

Posted by lavanyan gunalan 12:30 AM, under | No comments


பெண்களை ரசிப்பதில் ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரு ரசிப்புத் தன்மை உண்டு. ஆனால், இந்தியர்கள் பெண்களிடம் எல்லா விஷயத்தையும் ரசிப்பார்கள். அதில் மத்திய ஸ்தானமான இடுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. 

அதனாலேயே கோயில்களில் உள்ள பெண் சிற்பங்களில்கூட இடுப்பை அழகாக கலை நுணுக்கத்தோடு ரசித்து வடித்து இருப்பார்கள். பெண் சிற்பங்களை வடிப்பதில் இந்திய சிற்பிகள் ரொம்பவே கில்லாடிகள். இந்திய சிற்பக் கலைகளில் கோஹினூர் சிற்பங்கள் எவ்வளவு பிரசித்தமானது என்று சொல்லத் தேவையில்லை. அவை நேரடியாக காமத்தை செப்புவதாக இருந்தாலும் அவற்றிலுள்ள கலை நுணுக்கங்களை யராலும் மறுக்கமுடியாது. அந்த அளவுக்கு நம்முடைய கோயில்களில் கலைக்கும் காமத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆனால், இப்போதெல்லாம் காசு அதிகம் செலவு வைப்பதால் கோயில்களில் சிற்பங்களை செதுக்குவது இல்லை. சிமெண்ட் பொம்மைகளுக்கு பெயிண்ட் அடித்து அழகு பார்க்கிறார்கள். ஆனால், நம்முடைய மன்னர்கள் செதுக்கிவைத்த கற்சிற்பங்களுக்கு ஈடாகுமா இந்த வர்ணச் சிற்பங்கள்.

சரி விஷயத்துக்கு வருவோம். ஒன்றில் போனாலும் இன்னொன்றில் பிடித்துவிடுவது நம்முடைய வழக்கமாயிற்றே... அப்படி கோயில்களில் சிலைகளை வைத்தவர்கள், இப்போது தமிழ் சினிமாவிலும் சிலை வடிவான பெண்களுக்கு வாய்ப்பளித்து தங்கள் ரசனைக்கு தீனிபோட்டுக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் சிம்ரன் (நேருக்கு நேர் படத்தில்), ஸ்ரேயா, ஜெனிலியா, தமன்னா, இலியானா எல்லாம் இடுப்பழகுச் சிலைகள்.

இதோ இடுப்பழகி இலியானா...






















28 May 2011

தோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்...

Posted by lavanyan gunalan 11:44 PM, under | No comments


இந்தியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது லீக் போட்டியின் கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ந்து இரு முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை CSK பெற்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையிலான CSK சனி (மே 28) அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுப்போட்டியில் 205 ரன்களைக் குவித்து அபாரமாக வெற்றிபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜயும் மைக்கேல் ஹஸ்ஸியும் ஜோடி சேர்ந்து அபாராமாக பவுண்ட்ரிகளாக அடித்து ரன் குவித்தனர். விஜய் 95 ரன்களும், ஹஸ்ஸி 63 ரன்களும் எடுத்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார், ரெய்னா, மார்கல் உள்ளிட்டவர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து அவுட் ஆகி மொத்தம் 205 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

டிவெண்டி 20 உலகக் கோப்பையில் தொடங்கிய தோனியின் வெற்றி உலக்கோப்பை, ஐபிஎல் கோப்பை என்று தொடர்ந்து கோப்பைகளையும் வெற்றிகளையும் குவித்து வருகிறார். இதன்மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு சக்தி வாய்ந்த கேப்டனாக தோனி தலைமைதாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூர் அணிக்கு தமிழக வீரர் அஷ்வின் பெரும் நெருக்கடி கொடுத்தார். இந்த ஐபிஎல் கோப்பையைக் சென்னை கைப்பற்றுவதற்கு விஜய், அஷ்வின் இருவரும் முக்கியமான பங்கு வகித்தது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எக்ஸ்க்ளூஸிவ் படங்கள்









சங்கீதா - கிரிஷ் காதல் கதை

Posted by lavanyan gunalan 6:48 PM, under | No comments


நான்கு பொண்ணுகளை சைட் அடி... மூணு பொண்ணுகளை ஃபாலோ பண்ணு... ரெண்டு பேரைக் காதலி... ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணு! இந்த ‘பொன்’மொழியைத் தாண்டி வராத இளைஞனே இருக்கமுடியாது. நான் வேறு ரகம்! நாலு என்ன நாலு என்று எல்லாப் பெண்களையுமே சைட் அடிச்சேன்... காதலிச்சேன்! ஆனா, அதெல்லாம் காதல் இல்லை, வெறும் கவர்ச்சிதான்னு தெரிஞ்சதும் சைலன்டா ஒதுங்கிட்டேன்! வாழ்க்கையிலே கவனம் செலுத்தத் தொடங்கிட்டேன்.

பாட்டுப் பாடுறதுக்காக சினிமாவுக்கு வந்தபிறகு, 2008 மார்ச்சில் நடந்த விஜய் டிவி அவார்ட் பங்ஷன்லே கலந்துக்கிட்டேன். எனக்கு அவார்ட் அறிவிச்சு இருந்தாங்க. விருது வாங்குறதுக்காகக் காத்திருந்தேன். என் பெயரை மைக்ல சொன்னதும் விறுவிறுன்னு ஸ்டேஜுக்கு போனேன். அவார்ட் கொடுத்தது யாருன்னு நினைக்கிறீங்க சாட்சாத் சங்கீதா. ஹலோ சொல்லி கை கொடுத்தேன். ‘உங்க பாட்டை கேட்டிருக்கேன் ஆனா, உங்களை இப்பத்தான் பாக்குறேன்’னு சொன்னாங்க. நானும் அவங்களை சினிமாவுலேதான் பாத்திருக்கேன். ஆனா, அவங்க சொன்ன வார்த்தை நல்ல மரியாதையை அவங்க மேல ஏற்படுத்துச்சு. விருது கிடைச்ச சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது சங்கீதா கையால் அதை வாங்கியதுதான்!

விஜய் அவார்ட்ஸுக்குப் பிறகு நானும் சங்கீதாவும் ஒரு டின்னர்லே சந்திச்சோம். ஹாய் சொன்னோம். செல் நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம். விருந்து நடந்தது. அவங்களைப் பத்தி நானும், என்னைப் பத்தி அவங்களும் தெரிஞ்சுக்கிட்டோம். சகஜமா ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பேச ஆரம்பிச்சோம். எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு எனக்குத் தெரியலை. ஆனா, பிடிக்காமே எப்படி ஃப்ரீயா பழகுவாங்கன்னு யோசிச்சேன். இன்னொண்ணும் தோணுச்சு. இது காதலா... இல்லை டீப்பான ஃப்ரெண்ட்ஷிப்பா..? ரெண்டாவது சந்திப்புலேயே என்னாலே அதை ஜட்ஜ்பண்ண முடியலே.

போன்லே பேச ஆரம்பிச்-சோம். பேச ஆரம்பிச்சோம்ங்கிறதைவிட பேசிட்டே இருந்தோம்னுதான் சொல்லணும். ஒரு நாள் ஷாப்பிங் போலாம்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் மீட்பண்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கிட்டோம். இப்ப சங்கீதா இன்னும் இயல்பா பழகினாங்க. என் மனசுலே இது காதல் ‘சரிகமபதநி’யா இருக்குமோன்னு தோணுச்சு. ஆனா, காதலைச் சொல்லத் தயங்கினேன். ஏன்னா, ‘ஃப்ரெண்ட்லியா பழகுறோம்; இவன் இப்படி பேசிட்டானே’ன்னு அவங்க ஃபீல் பண்ணக் கூடாதேன்னு நினைச்சேன். ஆனா, அவங்க என்னை ஃபீல் பண்ணவெச்சுட்டாங்க.

‘கிரிஷ், உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்கிறேன். நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க...’னு கேட்டாங்க. நான் என்ன பதில் சொல்றது. எதை சொல்லணும்னு நினைச்சிருந்தேனோ அதை அவங்களே சொன்னதும் ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியலை. அமைதியா இருந்தேன். ‘கிரிஷ்...’ மறுபடியும் சங்கீதா குரல் கேட்டபிறகுதான் நினைவு வந்தது. ‘உங்க மனசுல இருந்ததை நீங்க சொல்லிட்டீங்க. என் மனசுல இருக்குறதை நான் சொல்ல வேணாமா’னு கேட்டதும் அமைதியாகிட்டாங்க. அதிர்ச்சி கொடுத்தது போதும்னு உண்மையை சொல்லிட்டேன். ‘எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. நானும் உங்களை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்.’ ரெண்டு பேருக்கும் ஒரே மனசு, ஒரே நினைப்புன்னு சொல்லி ரெண்டு பேருமே சிரிச்சோம். காதல் மணியடிச்சது.

காதலுக்கு ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா போதும். ஆனா, கல்யாணத்துக்கு..? ரெண்டு வீட்டுக்கும் எங்க காதல் தெரிஞ்சது. ரெண்டு பக்கத்திலே இருந்தும் நிறைய எதிர்ப்பு. ஆனா, அப்பவும் நாங்க காதலிச்சிட்டுதான் இருந்தோம். கல்யாணம் பண்ணிக்கிற முடிவுலேயும் எந்த மாற்றமும் இல்லே. கொஞ்சம் கொஞ்சமா எங்க பெற்றோரை நான் சமாதானப்படுத்தினேன். அவங்க பக்கத்திலே சங்கீதா சமாதானம் பண்ணாங்க. ஒருநாள் ரெண்டு வீட்டு பெற்றோரையும் சந்திக்க வெச்சோம். எதிரும் புதிருமா இருந்தவங்க எப்படி அவ்வளவு கலகலப்பா பேசினாங்கன்னு எங்களுக்கே தெரியலை. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க.

2009 பிப்ரவரி 1 கல்யாணம். சங்கீதா கழுத்துலே தாலி கட்டினேன். எங்க காதல் விஜய் அவார்ட்ஸ்லே பூத்து, ஷாப்பிங்லே காய்த்து, கல்யாணத்துலே கனிந்த கதை இப்படிதான்.

நம் தோழி, பிப்ரவரி - 2011

-சா.இலாகுபாரதி

20 May 2011

பிங்க் உதடு

Posted by lavanyan gunalan 9:00 AM, under | No comments


காதல் பருவம்:

காதலின் பல்வேறு பரிமாணங்களை இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். காதலுக்கு முன் நடக்கும் ஆண்-பெண் அறிமுகம், காதல் பகிர்வு, காதல் உணர்வுகள், காதலருக்காகக் காத்திருத்தல், காதல் சண்டை, காதல் கனிந்து கல்யாணமாதல் என்று காதலின் ஒவ்வொரு பருவத்தையும் உணர்வோம். அத்தனைப் பருவங்களையும் காட்சிகளாக எழுத்தில் வடிக்கப்போகிறேன். உங்கள் ஆதரவையும் ஆதங்கத்தையும் பின்னூட்டம் இடுங்கள். வரவேற்கிறேன்...

மிகுந்த அன்புடன்

சா.இலாகுபாரதி

காத்திருப்பு

தினமும் ஏதாவது ஒரு பெண்கள் கல்லூரி வாசலிலாவது யாராவது ஒரு ஆண்மகன் காத்திருக்கிறான். தன் காதலைச் சொல்வதற்காகவோ அல்லது ஒரு காதல் துணையைத் தேடியோ...

தினமும் ஏதாவது ஒரு கோயிலில் யாராவது ஒரு பெண்மகள் தன் காதலன் வரும்வரை நேரத்தைக் கடத்த ஆலயத்தை திரும்பத் திரும்ப வலம் வந்துகொண்டு இருக்கிறாள்.



பேருந்து நிலையம், ரயில் நிலையம், காஃபி டே, பிஸா கார்னர், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், கடற்கரை, பூங்கா, தெருமுனை, டீக்கடை பெஞ்ச் என்று தினமும் யாராவது ஒருவராவது காதலிக்காகவோ காதலனுக்காகவோ காத்துக்கொண்டு இருக்கிறார்கள். வழிமேல் விழி வைத்து.

காதல் செய்ய அப்ளிகேஷன் போடுவதற்கு முன்னும் பின்னும் காத்திருப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. காதலிக்காக/காதலனுக்காக காத்திருப்பது யாருக்கும் அலுப்பதில்லை. காதல் அவர்களை அப்படி மாற்றுகிறது/மாற்றிவிடுகிறது. ஏவாளை கரெக்ட் பண்ணுகிறவரை ஆதாமும் காத்திருந்துதான் அவளை கரெக்ட் பண்ணியதாகக் பழங்கதைகள் இயம்புகின்றன. ஆக, ஆதாம் - ஏவாளே காத்திருந்துதான் காதல் ஆப்பிளை கடித்திருக்கிறார்கள். அப்படி இருக்க இன்று காதலிக்கும் சுப்பனும் சுப்புலட்சுமியும் எம்மாத்திரம். ‘காத்திருத்தல் என்தலைக் கடனே’ என்று காக்க வேண்டியதுதான்! காதல் வேண்டும் அல்லவா?! அப்போது காத்திருந்துதான் தீரவேண்டும்.

காதலில் காத்திருத்தல் சுகம். அது காமத்துக்கு முந்தைய காதலில்தான் என்கின்றனர் சிலர். ஆனால், காமத்துக்கு முன்னும் பின்னும் மெய்யாலுமே காதலித்திருந்தால்/காதலித்துக்கொண்டு இருந்தால் காத்திருத்தல் எப்போதும் சுகம்தான்! இதை அக்மார்க் காதலர் அறிவர்.

காதலில் காத்திருத்தல் சுகம். அது காமத்துக்கு முந்தைய காதலில்தான் என்கின்றனர் சிலர். ஆனால், காமத்துக்கு முன்னும் பின்னும் மெய்யாலுமே காதலித்திருந்தால்/காதலித்துக்கொண்டு இருந்தால் காத்திருத்தல் எப்போதும் சுகம்தான்! இதை அக்மார்க் காதலர் அறிவர்.

சரி, இந்த கணினி (கலி)யுகத்தில் காத்திருக்கும்போது காதலன்/காதலி என்ன செய்துகொண்டு இருப்பார்கள்?

கதைக்கு வருவோம்.

ஒரு ரயில் சந்திப்பில் காதலனுக்காக காதலி காத்துக்கொண்டு இருக்கிறாள்... - இது ஒரு காதல்.

காஃபி ஷாப் ஒன்றில் காதலிக்காக காத்துக்கொண்டு இருக்கிறான் காதலன்... - மற்றுமொரு காதல்.

ரயில் சந்திப்பில் காதலனுக்காக காத்திருக்கும் காதலியிடம் வருவோம்...



மாலை நேரம். சில நிமிடங்களுக்கு ஒருதரம் ரயில்கள் வருவதும் போவதுமான நெருக்கடியான சந்திப்பு அது. பயணிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ரயில் வந்து நிற்கிறது... டொய்ன்ன்ன்... எதிர் டிராக்கில் ஒரு ரயில் புறப்பட எத்தனிக்கிறது... ப்ப்ப்ப்ப்ப்ப்பா...ம்... ப்ளாட்பாரத்தில் இருக்கும் பயணிகள் இருக்கையில் காதலி காத்திருக்கிறாள்... ஐபாடிலிருந்து காதல் பாடல்களை காதில் குடித்துக்கொண்டே, வாயில் மெரிண்டா ஊற்றிக்கொண்டு இருக்கிறாள்... மடியில் தபூசங்கர் தவழ்ந்துகொண்டு இருக்கிறார்... ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்”. டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் ஸ்லீவ்லெஸும் போட்டியிருக்கும் அவளைக் கேட்டால் என்ன தருவாள்! பக்கங்கள் புரளுகின்றன... ஒவ்வொரு கவிதையையும் மெல்ல மெல்ல விழுங்கி இமைக்கின்றன அவள் விழிகள். பிங்க் நிற உதட்டில் ரோஜா புன்னகை! இடது கையை வளைத்து மணி பார்க்கிறாள். சரியாக 6.30.

‘’இன்னும் இவன் வராம எங்க போயிட்டான்... இடியட்... இன்னைக்கு வரட்டும் உண்டு இல்லைன்னு பண்ணிட்றேன்... எவ்ளோ நேரம் வெயிட் பண்றது... ப்ப்ச்...’’ உதட்டிலிருந்து மெரிண்டா சிந்துகிறது.

வொயிட் கலர்
கர்சீப் எடுத்து
ஒற்றிக்கொள்கிறாள்...
கர்சீப்பில் படிந்திருக்கிறது
பிங்க் உதடு!

காஃபி ஷாப்பில் காதலிக்காக காத்திருக்கிறான் காதலன்...

தொடர்ச்சி...

16 May 2011

முதல்வர் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதம்?!

Posted by lavanyan gunalan 7:52 PM, under | No comments


கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, மாலை கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல் வாக்குறுதி: திருமணமாகும் ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் அரை பவுன் தங்கத் தாலி வழங்கப்படும்.
இரண்டாவது: பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த ஏழைப்பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் திருமண நிதியுதவி உதவித் தொகையை 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டு இருக்கிறார்.

அதன்பின்னர், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, இனி தமிழக மக்கள் அச்சப்படாமல் வாழலாம். தமிழக மக்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்கும் என்று கூறினார். டெல்லிக்கு செல்வது பற்றி பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா அடிக்கடி பார்க்கும் இடங்களிலெல்லாம் இப்படி கேள்வி கேட்க வேண்டாம். வாரத்துக்கு ஒருமுறை உங்களைச் சந்திப்பேன். உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். இந்த அரசு உங்களோடு நட்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். அப்போது பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டது. அழைப்பிதழ் கொண்டுவந்திருந்த பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை. காரணம் கேட்டால் இருக்கைகள் இல்லை என்று கூறி மைதானத்தில் அமைத்திருந்த எல்சிடியில் ஒளிபரப்பாகும் நேரடிக் காட்சிகளைப் பார்க்குமாறு போலீஸார் மக்களை தள்ளிவிட்டனர். பல பத்திரிகையாளர்களைக்கூட பதவியேற்பு விழாவைப் பதிவு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. முன்னதாகவே வந்திருக்கவேண்டும் என்று காரணம் கூறி தட்டிக்கழித்தார்கள்.

பல கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள்கூட அரங்கின் பின்புற வழியாகத்தான் அனுமதிக்கப்பட்டனர். சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததே இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம் என்று பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்தனர். இருக்கைகள் பற்றாக்குறை இருக்கும்போது எதற்காக அளவுக்கு அதிகமானவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவேண்டும் என்பது பத்திரிகையாளர்களின் முதல் கேள்வி. அடுத்தது, அழைப்பிதழ் இல்லாத, அரங்கிற்குள் வராத பார்வையாளர்களை கடற்கரை சாலைக்குளேயே அனுமதிக்காமல் இருந்திருந்தால் தள்ளுமுள்ளு, பதட்டம் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும்.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதம் மாதிரி, இன்னொரு அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு துவக்கத்திலியே களங்கம் ஏற்பட்டு இருக்காதா? எதிர்பாராத விதமாக திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் காவல் துறை என்ன செய்து இருக்கும்? இப்படி திட்டமிடாத காவல் துறையின் நடவடிக்கைகள் மக்களையும், அதிமுக தொண்டர்களையும் ஏன் பத்திரிகையாளர்களையும் கூட கடுப்புக்கு உள்ளாக்கியது.

திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால்தான் சட்டகல்லூரி மாணவர்கள் பிரச்னை, கொலை கொள்ளை அதிகர்ப்பு, போக்குவரத்து நெருக்கடி என்று பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அதுபோல் அதிமுக ஆட்சியிலும் நடக்காமல் பார்த்துக்கொள்வது புதிதாக பொறுப்பேற்றிருக்கிற முதல்வர் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.

14 May 2011

பெட்ரோல் லிட்டர் 70 ரூபாய்: காங்கிரஸுக்கு எச்சரிக்கை மணி!

Posted by lavanyan gunalan 10:02 PM, under | 2 comments


ஏற்கெனவே ’மே 13க்குப் பிறகு என்ன நடக்கும்?’ என்ற தலைப்பில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அது சனிக் கிழமை (மே 14) நள்ளிரவிலிருந்து பலிக்கிறது.

ஆம்! நம்முடைய வலைப்பதிவில் தெரிவித்திருந்தபடி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் விலை 70 ரூபாய் நெருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்னும் 3 மாதங்களுக்குள் பெட்ரோல் விலை 70 ரூபாய் வரை உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.


அரசு நிறுவனமாக எண்ணெய் நிறுவனங்கள் இருந்தவரை பெட்ரோல் விலை உயர்வு வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையோதான் உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இப்போது உயர்த்தப்படுகிற 5 ரூபாயையும் சேர்த்து ஒன்பதாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முதலாளித்துவ மற்றும் பாசிஸக் கொள்கையால் இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ரத்த வெறியன் ராஜபக்‌ஷேவால் கொல்லப்பட்டனர். அதேபோல பெட்ரோல் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்ததால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்ந்து, விலைவாசி கிடுகிடுவென்று ஏறுகிறது. இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அப்போதும் காங்கிரஸின் கொட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. இளைஞர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கிவரும் ராகுல் காந்தி இந்தியா முழுக்க ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவருகிறார். ஆனால், மந்திய அரசில் நடக்கும் ஊழலை காங்கிரஸ் பொதுச் செயலாளரான ராகுல் காந்தியால் தடுக்கமுடியவில்லை. ஆனால், மாநிலங்களில் நடக்கும் ஊழலை தடுத்துவிடுவேன், மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிடுவேன் என்றெல்லாம் வாய்கிழியப் பேசித் திரிகிறார்.

தமிழ்நாட்டில் கனிமொழி போராட்டம் நடத்தி, சிறை சென்றது மாதிரி, உபியில் ராகுல் போராட்டம் நடத்தி சிறை செல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. மத்தியில் பெரும் அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டிருக்கும் ராகுலின் நாடகம் கேலிக்குறியதாக இருக்கிறது. இவ்வளவு பேசும் ராகுல் காந்தியால் மக்களுக்கு எதிராக நடக்கும் விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோலிய நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல், இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப் படுவதையெல்லாம் தடுக்க முடிவில்லை. இதையெல்லாம் செய்து கிழிக்காத ராகுல் இந்தியாவை எப்படி ஊழலற்ற நாடாக மாற்றப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இப்படி தொடர் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்படுவது ராகுல்மாதிரி பெரும் பணக்காரர்கள் இல்லை என்பதால், இதையெல்லாம் காங்கிரஸும் ராகுலும் வேடிக்கைப் பார்க்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், மத்தியில் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வருவதால் மக்களால் எதையும் புடுங்க முடியாது என்று காங்கிரஸ் மனப்பால் குடித்துவருவதுதான்.

தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களில் கைவைக்கும் வேலையை காங்கிரஸ் திட்டமிட்டு செய்துவருமேயானால், அடுத்து வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதர மாநிலத் தேர்தல்களிலும், தமிழகத்தில் திமுகவுக்கு நேர்ந்த கதிதான் காங்கிரஸுக்கும் நேரும் என்பதை அந்த கட்சி மறந்துவிடக்கூடாது.

அதேநேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்ட தானே தலைவன் தங்கபாலு மாதிரி, மத்தியில் இருக்கிற காங்கிரஸ் தலைமையும் இருந்துவிடக்கூடாது என்பதும்தான் தமிழகத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமைக்கு சொல்லும் பாடம். இதையும் மறந்துவிட்டால் காங்கிரஸுக்கு ஒரு முடிவுகட்ட இந்திய மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிடவில்லை.

10 May 2011

கைமாறும் ஸ்கைப்

Posted by lavanyan gunalan 8:30 PM, under | No comments

இணையதளத்தில் தீவிரமாகச் சுற்றிவருபவர்கள் ஸ்கைப் சேவையைப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். ஸ்கைப் வழங்கி வரும் கவர்ச்சிகரமான பல சேவைகள் பலரையும் கவர்ந்தவை. ஸ்கைப் மூலம் வாய்ஸ் சேட்டிங், வீடியோ சாட்டிங் என பல சேவைகளை இலவசமாகப் பெறமுடிவதால், பலரும் ஸ்கைப்பை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

2003-ம் ஆண்டு நிக்லஸ் ஜென்ஸ்டீரோம் மற்றும் ஜானஸ் பிரிஸால் உருவாக்கப்பட்ட ஸ்கைப், ஆரம்பக்காலத்தில் பைல் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும், அதன்பிறகு மியூஸிக் சம்பந்தப்பட்ட சேவைகளைப் பெறுவதற்கும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் வாய்ஸ் சேட்டிங், வீடியோ சாட்டிங் என்று பரிணாமங்களைப் பெற்று வளர்ந்தது. இப்போது ஸ்கைப் மிகச்சிறந்த இணையதள தொலைபேசி சேவை வழங்கும் தொழில்நுட்பமாக நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.

ஒருகாலத்தில் ஸ்கைப்பை ஒரே நிறுவனம் மட்டுமே ஆட்சி செய்து வந்தது. 2005-ம் ஆண்டு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ebay ஸ்கைப்பை வாங்கியது. 2009-ம் ஆண்டு வரை ஸ்கைப்பின் ஒரே தலைவராக இருந்த ebay வர்த்தக நிறுவனம், தன்னிடம் இருந்த நூறு சதவீத பங்குகளில் 70 சதவீத பங்குகளை சில்வர் லேக், ஆன்ட்ரிசென் ஹோரோவிட்ஜிற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டது. இதனால், 3 நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்த ஸ்கைப், இப்போது மிகுந்த கடன் சுமைக்கு உள்ளாகி தத்தளித்துவருகிறது. ஸ்கைப்பின் மொத்தக் கடன் சுமை, 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதனால், ஸ்கைப்பின் பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்கத் தொடங்கிவிட்டனர். ஸ்கைப்பின் இந்தப் போதாத காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இணைய உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்துவரும் பல நிறுவனங்கள், ஸ்கைப்பை வாங்கி தங்கள் பைக்குள் போட்டுக்கொள்ள போட்டிப் போடுகின்றன.

இந்தப் போட்டியில் மூன்று நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், கூகுள் முக்கியமானவை. இந்த மூன்று நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் மட்டும் 7-லிருந்து 8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஸ்கைப்பை விலைபேசி வருகிறது. மற்ற இரண்டு நிறுவனங்களும் இந்த விலைக்கு ஸ்கைப் தகுதியில்லை என்பதால் பேரம் பேசாமல் ஒதுங்கி நிற்கின்றன. ஆனால், இணையதள உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் வர்த்தகம் நடந்த பின்னரே ஸ்கைப் மைக்ரோசாஃப்ட் பையில் விழுந்ததா அல்லது கூகுள் வாயில் விழுந்ததா என்பதை முடிவு செய்யமுடியும்.

09 May 2011

காதல் கல்யாணம் செய்யப்போகிறேன்: சிம்பு திடீர் அறிவிப்பு!

Posted by lavanyan gunalan 9:06 PM, under | No comments


இந்தியில் சல்மான்கான் நடித்து சக்கைப்போடு போட்ட தபாங் படம் தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் இயக்குநர் தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோ பாத்பாய் நாயகியாக நடிக்கிறார். உத்மபுத்திரன் படத்தை எடுத்த மோகன் அப்பாராவின் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிட்டெட் ‘ஒஸ்தி’ யைத் தயாரிக்கிறது.

ஒஸ்தி படப்பூஜை திங்களன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் தரணி, “வழக்கமான தமிழ்ப் படங்களில் இருக்கக்கூடிய குடும்ப சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி எல்லாம் கலந்த போலீஸ் ஸ்டோரியாக இது இருந்தாலும் வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும். 

இந்தியில் எடுக்கப்பட்ட தபாங் படத்தைவிட தமிழ் ஒஸ்தி ரொம்ப ஒஸ்தியாக இருக்கும். இந்தியில் சல்மான் நடித்த கதாபாத்திரத்துக்கு சிம்புவைத் தவிர வேறு யாரும் தமிழில் ஃபிட்டாக மாட்டார்கள். தொடர்ந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்துவரும் சிம்புவுக்கு ஒஸ்தியும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்” என்று கூறினார்.

அதன்பிறகு பேசிய படத்தின் நாயகன் சிம்புவை பத்திரிகையாளர்கள் மடக்கி... ”கல்யாண சாப்பாடு எப்போ போடப்போறீங்க...” என்று கேட்டனர். கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சிம்பு, ”இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கல்யாணம் செய்வதற்கு இன்னும் நேரம் கூடிவரவில்லை. அப்படியொரு சூழ்நிலைவந்தால் அனைவருக்கும் அறிவித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறினார்.

நயன்தாரா விஷயத்தில் சிறிதுகாலமாக மனவருத்தத்தில் இருந்து வந்த சிம்பு மனதில் இப்போது மீண்டும் காதல் பூத்திருக்கிறது.

காரணம் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிம்பு, தனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றார். ஆனால், யார் அந்தப் பெண் என்பதை மட்டும் மூடுமந்திரமாக வைத்திருக்கிறார்.

காதலியைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அந்தக் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அடுத்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தாவிவிட்டார்.

சூடுகண்ட பூனையாச்சே!

ஒஸ்தி படத்தில் சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துவரும் பாய்ஸ் படத்தில் டிரம்மராக நடித்த தமன்.எஸ் இசையமைக்கிறார். தரணி படங்களுக்கு கேமராமேனாக இருக்கும் கோபிநாத்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர்.

சிம்புவும் தரணியும் ஒஸ்தியாக இருப்பதால், அரைச்ச மாவை அரைக்கிறார்களா... துவைச்ச துணியை துவைக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Plust 2 Result here

Posted by lavanyan gunalan 7:08 AM, under | 1 comment


இந்த ஆண்டு நடைபெற்ற பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் (தமிழகம் மற்றும் புதுச்சேரி) 5 ஆயிரத்து 477 பள்ளிகளில் பயின்ற 7 லட்சத்து 23 ஆயிரத்து, 545 மாணவர்கள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 57 ஆயிரத்து 86 பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வுகள் ஆயிரத்து 890 மையங்களில் நடைபெற்றது.



தேர்வு முடிவுகள் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப் படும்என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. முன்பெல்லாம் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வதற்காக மாணவர்கள் பிற்பகல் 2 - 3 மணி வரை காத்திருக்க வேண்டும். மாலை நாளிதழ் வந்தால்தான் தேர்வு முடிகள் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அதன்பிறகு இணையம் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்ற நிலை உருவாகியும் இணையத்தின் வேகம் அதிகப்படியாக இல்லை. அதனால், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மாணர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. ஆனால், இன்று அப்படியில்லை 4 mps வேகத்தையும் தாண்டி இணையத்தின் வேகம் ராக்கெட் வேகத்தில் போய்க்கொண்டு இருக்கிறது. தொட்டாலே போதும் நாம் நினைக்கும் பக்கம் நம் கண் முன்னே தோன்றுகிறது.

அதனால், இந்தாண்டு வெளியாகும் தேர்வு முடிவுகள் காலை 10 மணிக்குள்ளாகவே முழுமையாக தெரிந்துவிடும் என்பதால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

தேர்வு முடிவுகளை கீழ்கண்ட தளங்களை கிளிக் செய்து பார்க்கலாம்.

 1. http://www.tnresults.nic.in/
 2. http://www.pallikalvi.in/
 3. http://www.squarebrothers.com/
 4. http://results.sify.com/
 5. http://indiaresults.com/
 6. http://www.dge1.tn.nic.in/
 7. http://www.dge2.tn.nic.in/
 8. http://www.dge3.tn.nic.in/
 9. http://www.tngdc.in/
10. http://www.collegesintamilnadu.com/
11. http://www.classontheweb.com/
12. http://www.schools9.com/
13. http://www.chennaivision.com/
14. http://www.mygaruda.com/
15. http://www.tnagar.com/
16. http://www.indiacollegefinder.com/
17. http://www.chennaionline.com/
18. http://www.nakkeeran.com/
19. http://www.getyourscore.in/
20. http://www.examresults.net/
21. http://results.webdunia.com/
22. http://www.jayanews.in/
23. http://www.findchennai.com/

மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை 25 அன்று அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் பெற்றுக்கொள்ளலாம். தனித் தேர்வர்கள், தேர்வு எழுதிய மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடைத்தாள் நகல் பெற மற்றும் மறு கூட்டல் செய்ய விருப்பம் உடையவர்கள் 11 முதல் 16-ம் தேதி வரை அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.

விடைத்தாள் நகல் பெறுவதற்கு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும் 550 ரூபாய் கட்டணமும், மற்ற பாடங்களைப் பெற ஒவ்வொன்றுக்கும் தலா 275 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

08 May 2011

குழந்தைகளை ஈஸியாக சாப்பிடவைப்பது எப்படி?

Posted by lavanyan gunalan 11:29 PM, under | No comments


ஓடியாடும் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அம்மாக்களுக்கு ஒரே ஒரு கவலைதான்... ‘குழந்தை எப்பவுமே சாப்பிட மாட்டேங்குது!’ துரத்தித் துரத்தி அடித்தாவது குழந்தையின் வாயில் திணிக்கிற அம்மாக்கள் அநேகம். ‘ ‘ஆனால், குழந்தைகளை சரியான விதத்தில் அணுகினால், அவர்களை ஈஸியாக சாப்பிடவைக்கலாம்’’ என்கிறார் அப்போலோ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஜோதி எஸ்.பார்த்தசாரதி.

‘‘குழந்தைகள் சாப்பிட மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. நீங்கள் சாப்பிட ஏதாவது கொடுக்கும்போது அவர்களுக்குப் பசி இருக்காது. தினமும் ஒரே மாதிரி உணவையே கொடுத்தாலும், அந்தச் சாப்பாட்டு மேல் ஒரு வெறுப்பு வந்து சாப்பிட மறுப்பார்கள். அதனால், தினமும் வெரைட்டியான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதேமாதிரி, குழந்தைகளோடு குழந்தைகளாக இருக்கும்போது அவர்களே விரும்பி, நீங்கள் போதும்ங்கிற அளவுக்கு சாப்பிடுவார்கள். குழந்தைகள் சாப்பிடுறதுக்கு அட்மாஸ்ஃபியரும் முக்கியம்.



வெரைட்டியான உணவை, நல்ல சூழலில் கொடுக்கும்போது சாப்பிட மறுக்க மாட்டார்கள். அதே நேரத்துலே அவங்க பசி என்று கேட்கும்போது சாப்பாடு ஊட்டினாலே போதும். வளரும் இந்த வயதில்தான் குழந்தைகளுக்கு ஹெல்தியான ஃபுட்ஸ் தேவைப்படும். அரியில் கார்போஹைட்ரேட் நிறைந்து இருப்பதால் அரிசியை நுணுக்கி, கஞ்சியாகக் கொடுக்கலாம். அல்லது சோறுவடித்து பருப்பு, நெய் கலந்தும் கொடுக்கலாம். ஆனால், தினமும் இந்த நெய் சாதத்தையே கொடுத்தால் போரடிக்கத்தான் செய்யும். அதனால், அரிசியை நுணுக்கி, அதனுடன் பொட்டுக் கடலை பொடியை போட்டு வேகவைத்தும் கொடுக்கலாம்.

சில நேரங்களில் மில்க் பிஸ்கட், இட்லி, ராகி, ஆரஞ்சு ஜூஸ் என்று மாத்தி மாத்தி கொடுக்கும்போது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். புதிதாக ஒரு உணவை கொடுக்கும்போது டேஸ்ட் பார்க்கும் வரைதான் அடம்பிடிப்பார்கள். டேஸ்ட் பிடித்துவிட்டால் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். அதனால், எந்த உணவைக் கொடுத்தாலும் முதலில் அதில் சுவை இருக்குதான்னு பெற்றோர்
டேஸ்ட் பண்ணிவிட்டு கொடுப்பது நல்லது. உப்பு சப்பு இல்லாத உணவை குழந்தைக்கு கொடுத்தால் அது எப்படி சாப்பிடும்?

டேஸ்ட் இல்லாமல் பெரியவர்களாலேயே சாப்பிட முடியாதபோது குழந்தைகள் மட்டும் என்ன செய்யும்? அதேமாதிரி ஒவ்வொரு வேளைக்கும்
ஒவ்வொரு உணவு என்று சாய்ஸ் வைத்துக்கொள்வது முக்கியம். காலையில் செய்த இட்லியையே மதியத்துக்கும் கொடுக்கக் கூடாது. முட்டை, பால், சிக்கன், மீன் என்று புரோட்டீன், கால்சியம் நிறைந்த உணவுகளை மாற்றி மாற்றி கொடுக்கும்போது அவர்களுடைய வளர்ச்சியும், ஆரோக்கியமும் சரிவிகிதத்தில் இருக்கும்’’ என்கிறார் டாக்டர் ஜோதி எஸ்.பார்த்தசாரதி.

குழந்தைகள் இப்படி சாப்பிட மறுக்கும் விஷயத்தில் வேறு ஏதாவது உளவியல்ரீதியான பிரச்னை இருக்குமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஆனந்த் பாலனை அணுகினேன்.

‘ ‘இந்த விஷயத்தில் பெற்றோர்கள் ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பசியில்லாவிட்டால் எப்படி குழந்தைகள் சாப்பிடும்’ என்பதை முதலில் உணர வேண்டும். உலகத்தில் மனிதன் ‘போதும்’ என்று சொல்கிற ஒரே விஷயம் சாப்பாடுதான். அதுவும் பசி வந்தால்
மட்டும்தான் மனிதன் உணவைத் தேடிப் போவான். மற்ற நேரங்களில் உணவு பற்றிய சிந்தனையே அனுக்கு இருக்காது. இது வளர்ந்த மனிதனுக்கு  மட்டுமல்ல. வளரக்கூடிய குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இரண்டு அல்லது இரண்டரை வயதில் குழந்தைகள் மழலையில் பேசினாலும், அவர்களுடைய பெற்றோருக்கோ அல்லது தாத்தா பாட்டிக்கோ புரிகிற மொழியில்தான் பேசுவார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு பசியெடுத்தால் கேட்கத் தெரியும். அவர்கள் கேட்கும் மொழி எல்லாருக்கும் புரியவில்லை என்றாலும், பெற்றோருக்கு நிச்சயம் புரியும். எனவே,‘பசிக்குது... சாப்பிட வேண்டும்’ என்று குழந்தை கேட்கும்போது மட்டும் உணவு கொடுத்தால் போதும். நாம் நினைக்கும்போதெல்லாம் ‘சாப்பிடு... சாப்பிடு’ என்று திணித்து ஊட்டத் தேவையில்லை. சாப்பிடாத குழந்தையை அடிக்கக் கூடாது. இது தவறான அணுகுமுறை. அப்படி அடித்தால் பசியெடுக்கும்போதுகூட சாப்பிடத் தோன்றாது.

அதேபோல பெரியவர்கள் விரும்பிச் சாப்பிடுகிற உப்பு, எண்ணெய், காரம் கலந்த உணவுகளைத்தான் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.  பெரியவர்கள் என்னவெல்லாம் சாப்பிட விரும்புகிறோமோ அதே உணவையே குழந்தைகளுக்கும் அளிக்கலாம். அப்போதுதான் குழந்தைகளுக்கு வெரைட்டியாகவும் இருக்கும், சுவையாகவும் கிடைக்கும். ஆரோக்கியமான குழந்தை பசி வந்தால், சாப்பிட அடம்பிடிக்காது’’ என்று
அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் ஆனந்த் பாலன்.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, பிப்ரவரி 2011

ரசிகர்கள் மனசுல தல

Posted by lavanyan gunalan 12:20 AM, under | No comments


விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து சக்கைப்போடு போட்ட பில்லா படம் இப்போது பார்ட் 2 சூடாக தயாராகி வருகிறது. பில்லா படம் சூப்பர் ஹிட்டான மகிழ்ச்சியில் விஷ்ணுவர்தன் பார்ட் 2 பண்ணலாம் என்று அஜீத்திடம் பேசியபோது தல உடனே ஓகே சொல்லிவிட்டார்.



அதனால் படவேலைகள் இப்போது ஜரூராக நடந்துகொண்டு இருக்கின்றன. படத்துக்கு இசை அதே யுவன்சங்கர் ராஜாதான். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா டிவிட்டர் சமூகவலைத்தளத்தில், பில்லா பார்ட் 2 படப் பாடல் பதிவு நடந்துவருவதாக கூறியிருக்கிறார்.



பில்லாவைப் போலவே பில்லா பார்ட் 2 படமும் தல ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்படுமா என்பது தெரியவில்லை. மன்றத்தை கலைத்தது அதற்கு காரணமாக இருக்கலாம் என்று கோடம்பாக்க வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

ஆனால், மற்றொரு தரப்போ மன்றம்தான் கலைக்கப்பட்டு இருக்கிறதே தவிர, ரசிகர்கள் மனசுல தல எப்போதும் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.

07 May 2011

மே 13க்குப் பிறகு என்ன நடக்கும்?

Posted by lavanyan gunalan 11:48 PM, under | 1 comment


ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியானதுமே மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது. இந்தமுறை சமையல் எரிவாயு விலையையும் கணிசமாக உயர்த்த இருக்கிறார்கள். அதனால், பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 70 ரூபாய் வரை தொடும் என்று கூறப்படுகிறது.

எதற்காக தேர்தல் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்? அறிவிப்பதென்றால் இப்போதே அறிவிக்கலாமே என்றுதானே கேட்கிறீர்கள். அதில்தான் ஒரு சூட்சமம் இருக்கிறது. 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தால் மட்டுமே விலை உயர்வு கணிசமான அளவில் இருக்கும். இல்லாவிட்டால் பெட்ரோலிய நிறுவனங்கள், ரெண்டையும் பொத்திக்கொண்டு இருக்க வேண்டியதுதான். அப்போது பெயரளவுக்கு 2 ரூபாய் வரைக்கும் உயர்த்தப்படலாம். (அப்போதுதானே அடுத்தகட்ட தேர்தலிலாவது தப்பிப் பிழிக்க முடியும்) வெற்றிப்பெற்றுவிட்டால், பெட்ரோல் - டீசல் விலை 5 ரூபாய் வரை உயர்த்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சமையல் எரிவாயு விலை மாற்றியமைக்கப்படும். அது ரூபாய் நானூரை தாண்டலாம்!

பெட்ரோல் உற்பத்தி செய்யப்படும் துபாய் போன்ற நாடுகளில் 5 லிட்டர் பெட்ரோல் விலை இந்திய ரூபாய் மதிப்பில் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதே 5 லிட்டர் பெட்ரோல் தமிழ்நாட்டில் 325 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சரி ஏற்றுமதி செய்கிற நாட்டைவிட இறக்குமதி செய்கிற நாட்டில் பொருளின் விலை சற்றுக் கூடுதலாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் கிட்டத்தட்ட ஐந்தரை மடங்கு அளவுக்கா கூடதல் விலை இருக்கும் என்பதுதான் என் கேள்வி.

சரி அப்படியே ஐந்தரை மடங்காக பெட்ரோலியப் பொருட்களின் விலை இருந்தாலும்கூட இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யும் அரசாங்கம்தானே அந்தப் பொருளை மாநிய விலையில் வழங்க வேண்டும். அல்லது அது சாத்தியமில்லாத பட்சத்தில் இறக்குமதிக்கான வரி, சுங்க வரி, கலால் வரி என்று என்னென்னவோ வரிகளை பொட்ரோலியப் பொருட்களின் மீது பூசி மக்களிடம் வசூல் வேட்டை நடத்துவதையாவது குறைக்க வேண்டும். ஆனால், இங்கு அப்படித்தான் நடக்கிறதா?

இந்த அரசை நினைத்தால் வெள்ளைக்கார துரைதான் ஞாபகத்துக்கு வருகிறான். அவனாவது அந்நியமக்களை அடிமைப்படுத்தி, வரி வசூல் செய்து, தன்னுடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தான். ஆனால், இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய பொருளாதார மேதாவியான மன்மோகன் தலைமையிலான காங்கிரஸ் அரசு சொந்த நாட்டு மக்களிடமே வரி வசூலித்து ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவோம். உலகப் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது இந்தியா என்ன ஐரோப்பிய நாடுகள் மாதிரி தத்தளிக்கவா செய்தது? பொருளாதாரத்தில் பாதுகாப்புடன் இந்தியா போன்று வேறு எந்த நாடு இருக்கிறது..? அந்நாடுகளில், ஷேர் மார்க்கெட் சரிந்தால் நாட்டின் பொருளாதாரமும் சரிந்துவிடுகிறது. இந்தியாவில் அப்படியா நடக்கிறது... என்றெல்லாம் வாய்க்கிழிய பேசும் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, இப்போது மீண்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரக் காத்திருக்கிறதே, அதற்கு என்ன சொல்லப் போகிறார்..?



பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்தால் எல்லாப் பொருட்களின் விலையும் உயரும் என்பது பொருளாதார மேதாவிகளான மன்மோகனுக்கும் பிரணாப்புக்கும் தெரியாதா?

அதுமட்டுமல்ல, பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களின் வசம் ஒப்படைக்க வேண்டாம்... வேண்டாம் என்று கம்யூனிஸ்ட்டுகள் கரடியாகக் கத்தினார்களே, அதையாவது காதில் போட்டுக்கொண்டதா இந்த காங்கிரஸ் அரசு..?

விளைவு... கடந்த ஆண்டிலிருந்து 8 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு, பணவீக்கம் ஏற்பட்டது. அதனால், அத்தியாவசிப் பொருட்களின் விலை கடகடவென்று உயர்ந்து சாதாரண நடுத்தர மற்றும் ஏழை மக்கள் தவியாய் தவித்தனர்.

விலைவாசி உயர்கிறபோதெல்லாம் நடுத்தர மக்களின் வருமானம் உயர்வதில்லை; உயர்த்தப்படுவதும் இல்லை. அதனால், பட்ஜெட்டில் துண்டு விழுந்து ஒவ்வொரு மாதமும் கடன் வாங்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஒருகட்டத்தில் கடனை அடைக்க முடியாமல் விழிபிதுங்கி தவிக்கிறார்கள். சிலர், கடன் முதலைகளை சமாளிக்க முடியாமல் தற்கொலையும் செய்துகொள்கிறார்கள்.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் ஓட்டுகளைப் பொறுக்கி ஆட்சியைப் பிடிக்கும் அரசு, முதலாளிகளுக்கு சாதகமாகவே எல்லா நேரத்திலும் முடிவெடுக்கிறது. காரணம். அவர்கள்தானே சரியாக வரி ஏய்ப்பு செய்கிறார்கள். முதலாளிகள் ஒருபக்கம் வரி ஏய்ப்பு செய்து நாட்டை ஏமாற்றினால், சாதாரண மக்கள் மீது வரி திணிப்பு செய்கிறது அரசு. அப்போதுதானே முதலாளிகள் கட்டாமல் போன வரிப்பணத்தை ஈடுசெய்யமுடியும். ஆக, எல்லா நேரத்திலும் ஏழை, நடுத்தர மக்கள்தான் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

தேர்தலுக்கு முன்பு எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கட்டுக்கடங்காமல் இருந்தது. காய்கறிகள் கிலோ 100 ரூபாய் வரை விற்றது. அப்போது விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும் என்று பிரணாப் அறிவித்தார். அதேபோல் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்பே எல்லா காய்கறிகளின் விலையும் மளமளவென்று குறைந்தது. தேர்தலுக்கு முன்பு வரை காய்கறிகள் உற்பத்தி குறைவாக இருந்தது. அது எப்படி ஒரு வாரத்துக்கு முன்பு உற்பத்தி அதிகரித்தது என்ற சூட்சமம் யாருக்கும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 13க்குப் பிறகும் அப்படியொரு சூழ்நிலை ஏற்படலாம்.

அழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது!

Posted by lavanyan gunalan 12:16 AM, under | No comments

மாப்பிள்ளை படத்தில் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி இப்போது எங்கேயும் காதல் படத்தில் விளையாடியிருக்கிறார். இன்னொரு நமீதா என்று கோடம்பாக்கம் கிசுகிசுக்கும் அளவுக்கு கொழுக்மொழுக் என்று இருக்கும் ஹன்சிகாவுக்கு ரசிகர்கள் பெருகிவருகிறார்கள்.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரைக்கும் ரொம்பவும் சதைப் பற்று இருந்தால் வாய்ப்புகள் வந்து குவியும் என்று சொல்வார்கள். ஆனால், அப்படி இருந்த பல நடிகைகள் இன்று காணாமல் போயிருப்பது எல்லாருக்கும் தெரியும். ஏன் நமீதா இப்போது எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு தேவைக்கு ஊறுகாய் தொட்டுக்கொள்வது மாதிரிதான் நடிகைகளை தமிழ் சினிமா பயன்படுத்திக்கொள்ளும்.

அதனால், ஹன்சிகா கொஞ்சம் உடலைக் குறைத்துக்கொள்வது நல்லது. இல்லாவிட்டால் போரடிக்குது ஆளை மாத்துப்பா என்பார்கள் கோடம்பாக்கத்து கோவிந்தசாமிகள்! அழகாய் இருக்கிறாய்; பயமாய் இருக்கிறது!

அழகான ஹன்சிகா படங்கள்





























கோப்பு

கோப்பு