
’ஐயய்யோ பிடிச்சிருக்கு’ என்ற தன் பாட்டின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த மஹதி, சினிமா, கர்நாடக இசை மேடை ஆகிய இரண்டிலும் பிசியாக இருக்கிறார். சங்கீதக் குடும்பத்தைச் சேர்ந்த மஹதியை சந்தித்தபோது நல்ல மழை. ‘மஹதி அகாடமி ஆஃப் மியூஸிக் அண்ட் டான்ஸ்’ பள்ளியில் நடந்தது இந்த மழை நாள் சந்திப்பு.
‘‘நாங்க இசைக் குடும்பம். அப்பா – திருவையாறு சேகர். பாடகர்; இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் சிஷ்யர். அம்மா, புல்லாங்குழல் வித்வான் வசந்தி. புல்லாங்குழல்...