04 November 2008

தில்லுமுல்லு... தில்லுமுல்லு...

Posted by Gunalan Lavanyan 1:59 PM, under | No comments

நீண்ட நாட்களுக்குப் பிறகு 3.11.2008 திங்களன்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களைச் சந்தித்தார். தலைவர் கட்சியைத் தொடங்குவாரா..? தொடங்கினால் அதில் தமக்கு ஒரு 'வால்' பதவியாவது கிடைக்குமா? என்ற ஏக்கங்களோடும், முகத்தில் பல கேள்விக் குறிகளோடும் ஆயிரக்கணக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் திடீரென்று ரஜினி கூட்டிய கூட்டத்திற்கு வந்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக...

25 October 2008

இயக்குனர் அமீரும் இயக்குனர் சீமானும் தீவிரவாதிகளா..?

Posted by Gunalan Lavanyan 9:16 AM, under | No comments

இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுவரும் தமிழ் இன மக்களுக்காக குரல் கொடுத்தால், காட்டு மிராண்டி ராஜபக்சேவுக்கு எதிராக குரல் கொடுத்தால், இந்திய காங்கிரசின் அக்கிரமத்தையும் அராஜகத்தையும் கண்டித்தால்... கண்டிக்கும் தமிழ் இன உணர்வாளன் மீது இந்திய பிரிவினை வாதச் சட்டம் பாய்கிறது... இது எந்தவிதத்தில் நியாயம்? தெரியவில்லை. சிங்கள இன வெறி அரசுக்கு ஆயுத சப்ளை செய்யும் காங்கிரஸ் தியாகிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தால் மத்தியில் 'கூத்து' ஆட்சி புரியும்...

16 October 2008

தமிழில் கலை விமர்சன புத்தகங்கள் தனிநபர் துதிபாடிகளாக இருக்கின்றன

Posted by Gunalan Lavanyan 9:43 AM, under | No comments

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான கல்லூரி அது. சென்னையின் மிகப் பிரதான இடமான சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நடந்து போகும் தூரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. இது கலைகளை விதைத்து கலைகளை வளர்க்கிற -அரசு கவின் கலைக் கல்லூரி. சில ஆண்டுகளுக்கு முன் மிகவும் சிதிலமடைந்த நிலையில் தொய்ந்துப்போயிருந்த கல்லூரி, இன்று திரும்பிய பக்கமெல்லாம் பச்சைப் பசுமையாகவும், ஓவியமாகவும் சிற்பமாகவும் தென்படுகிறது. அதற்குக் காரணமானவர்களில்...

08 September 2008

கொலை வாளினை எடடா!

Posted by Gunalan Lavanyan 9:38 AM, under | 3 comments

வலியோர் சிலர் எளியோர் தமைவதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளுதல்நிலையாம் எனும் நினைவா? உலகாள உமது தாய் மிகஉயிர்வாதை அடைகிறாள்; உதவாது இனி ஒரு தாமதம்உடனே விழி தமிழா! கலையே வளர்! தொழில் மேவிடு! கவிதை புனை தமிழா! கடலே நிகர் படை சேர்; கடுவிட நேர் கருவிகள் சேர்! நிலமே உழு! நவதானியநிறையூதியம் அடைவாய்; நிதி நூல்விளை! உயிர் நூல் உரை நிச நூல் மிக வரைவாய்! அலை மாகடல் நிலம் வானிலுன் அணிமாளிகை ரதமே அவை ஏறிடும் விதமே உனததிகாரம் நிறுவுவாய்! கொலைவாளினை எடடா மிகு கொடியோர் செயல் அறவே குகை வாழ் ஒரு புலியே உயர் குணமேவிய தமிழா! தலையாகிய அறமே புரி சரி நீதி பொருள்...

04 September 2008

புழக்கடையில் மேய்ந்துத்திரியும் பன்றி

Posted by Gunalan Lavanyan 7:50 PM, under | 1 comment

வா... எனது ஒவ்வோர் அசைவையும் கண்காணி. வந்தெனது அந்தரங்கத்தை உன் சவுகரியம் ஆக்கிக்கொள். சம்பந்தமின்றி என் சுயத்தில் தலையிடு. எச்சில் கையால்கூட காக்கை நீ பகிர்தலையும் அன்பையும் பற்றி முழுக்கப் பேசு! உன் சூத்து நாறும்போது அடுத்தவன் சூத்து நாறுவதாய் புரளிசெய்! சாதியாலும் மதத்தாலும் என் சனங்களையும் என் ஈனச்சாமியையும் கேலிக்குள்ளாக்கு... புழக்கடையில் மேய்ந்துத்திரியும் என் புழக்கடைச் சங்கதிகளை வயிறு புடைக்கத்தின்று செறிக்காமல் திரி... செறிக்க வேண்டுமெனில் கண்ணாடியில் உன் பிம்பத்தைப் பார்... காரித்துப்பு... செரிக்கத்தொடங்கும் இப்போத...

01 September 2008

நதியான காதல்கள்

Posted by Gunalan Lavanyan 1:39 PM, under | 2 comments

அது மலைகளால் நிறைந்த கிராமம். குழந்தைகள் வட்டமாக நின்று கை கோர்த்து ஆடும் ஆட்டத்தைப்போல அந்த கிராமத்தைச் சுற்றி மலைகள் கைகோர்த்து நின்று ஆடும் ஆட்டம் அலாதியானது. பனிக்காலத்தில்தான் அதன் அழகை தரிசிக்க முடியும். அப்போது மலை பனி ஆடை கட்டிய தேவதையாக காட்சியளிக்கும்.மார்கழித் திங்களில் பனி படர்ந்த இரவுகளில் ஊரின் தெருக்களெங்கும் கோல மழையில் நனைந்துகொண்டிருக்கும்... பெண்கள் ஒன்றுகூடி இன்று நான் இந்தக் கோலம் போடுகிறேன். நீ எந்தக் கோலம் போடுவதாக உத்தேசம்..? அவள் மயில் கோலம் போடப்போகிறாளாம்..! அக்கா நீங்கள்... என்று குழுவாகக் கூடி நின்று, விளித்துப் பேசும்...

Pages 271234 »