சர்வதேச திரைப்பட விழா அறிமுகக் கூட்டத்தில்... |
காலம் காலமாக கோவாவில் நடத்தப்பட்டு வரும் உலகத் திரைப்பட விழாவைப் போல மிகப்பெரிய அளவில் நடத்த தமிழ்த் திரையுலகினர் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை தென்னிந்திய திரைத் துறையினர் செய்து வருகிறார்கள். இந்த விழா டிசம்பவர் 15-லிருந்து 23 வரை 9 நாட்கள் சென்னையில் நடைபெற இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட படங்கள் இந்த விழாவில் பங்கேற்க இருக்கின்றன.
இந்தத் திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு தனது பங்காக 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு இருக்கிறது. இயக்குனர் மணிரத்னமும் தனது பங்காக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார். இருப்பினும் விழாவுக்கு இந்தத் தொகை போதுமானதாக இருக்காது என்றும், இன்னும் நிதி திரட்ட வேண்டும் என்றும் இந்த விழா தொடர்பான கூட்டத்தில் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியிருக்கிறார். முதல்வரை நேரில் சந்தித்து கூடுதல் நிதி கேட்கும் யோசனை இருப்பதாகவும் விழாக்குழு தெரிவித்து இருக்கிறது.
நிறைவு விழாவில் இரண்டு படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக இரண்டு லட்சமும், இரண்டாவது பரிசாக ஒன்றரை லட்சமும் வழங்கப்பட இருக்கிறதாம். இந்த விழாவில் உலக அளவில் புகழ் பெற்ற 7 திரைப்பட இயக்குனர்களும் கலந்து கொள்கிறார்கள். சென்னையில் உள்ள உலகத் திரைப்பட ரசிகர்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது.
0 comments:
Post a Comment