07 August 2011

நாகம்மா: ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்

Posted by Show Now 5:01 PM, under | No comments

அமானுஷ்ய கதைகளா... கூப்பிடுங்கள் ஜெரால்டை என்று சொல்லும் அளவுக்கு சின்னத்திரை வட்டாரத்தில் பேர் எடுத்திருக்கிறார் ஜெரால்டு! தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா மொழி பேய்களையும் டீல் பண்ணும் அமானுஷ்ய ஜெரால்டை சன் டி.வி. நாகம்மா ஷூட்டிங்கில் சந்தித்தபோது மந்திர பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்தார்.


“நாகம்மா சீரியல் முழுக்க ஆந்திராவின் அடர்ந்த காடுகளில்தான் படமாக்குகிறோம். இரவு நேரக் காட்சிகளை எடுக்க வனத்துறை அனுமதி அளிக்காததால், நடுநிதிக் காட்சிகளை மட்டும் தரமணி ஃபிலிம் சிட்டியில் எடுக்கிறோம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சன் டி.வியில் சீரியல் பண்றதாலே சீரியலுக்கு நல்ல ரேட்டிங் கிடைச்சிருக்கு. அமானுஷ்யமான விஷயங்களைப் பார்க்கும்போது எப்பவும் மக்கள் விரும்புவாங்க. அதனாலே, அமானுஷ்ய விஷயங்களைப் படமாக்குவது எனக்கு அல்வா சாப்பிடுற மாதிரி! நிறைய விஷயங்களை இந்த சீரியலுக்காக பண்ணியிருக்கேன். பாம்புகள் பத்தி ரிசர்ச் ஒர்க்கும் பண்ணினோம். இப்படி எல்லா உழைப்பையும் சாப்பிட்டுதான் வளர்ந்து வருகிறாள் நாகம்மா!” என்று சொல்லும்போது சாயாசிங் வர, அவரைக் கைகாட்டிவிட்டு அடுத்த வேலைக்குச் சென்றுவிட்டார்.நாகம்மாவாகவும் நந்தினியாகவும் இரு வேடங்களில் சாயாசிங் பட்டையைக் கிளப்புகிறார். “ரொமான்ஸ் நாயகியாக திரைப்படங்களில் வலம் வந்துவிட்டு, திடீரென்று எப்படி சீரியல் பக்கம் வந்தீர்கள்?’’ என்று சாயாவிடம் கேட்டால் மசாலா பால் மாதிரி சுவையாகப் பேசுகிறார்.


சாயா சிங்
“ஆர்டிஸ்டுக்கு சீரியல், சினிமா ரெண்டும் ஒண்ணுதான். டி.வி. ரொம்ப பவர்ஃபுல் மீடியம். மக்கள் குடும்பத்தோடு சீரியலை பார்க்குறாங்க. அதேநேரத்துல எனக்கு நல்ல கதை கிடைச்சது. அதுவும் டபுள் ஆக்ட். சர்க்கரையும் வெல்லமும் சேர்ந்து வரும்போது வேணாம்னா சொல்ல முடியும். அதான் ஓகே சொல்லிட்டேன். இதுக்கு முன்னாடி ‘ஆனந்தபுரத்து வீடு’ படத்துல நடிச்ச அனுபவம், நாகம்மாவில் நடிக்கிறதுக்கு ரொம்ப உதவியா இருக்கு. ஃபேண்டஸி ஸ்டோரி பண்ணும்போது வித்தியாசமாவும் இருக்கு, அதை ஸ்க்ரீன்ல பார்க்கும்போது த்ரில்லிங்காவும் இருக்கு.

ஃபேண்டஸி கதைகளில் நடிக்கும்போது நிறைய கற்பனை பண்ணவேண்டியிருக்குது. காரணம், எல்லா விஷயத்தையும் ஷூட் பண்ணமாட்டாங்க. சிலதை போஸ்ட் புரொடக்‌ஷன்லதான் சரிபண்ணுவாங்க விஎஃப்எக்ஸ் சேர்ப்பாங்க. அதனாலே நிறைய விஷயத்தை கற்பனை பண்ணிதான் நடிக்க வேண்டியிருக்கும். டைரக்டரோட கற்பனைக்கு ஈடுகொடுத்து நடிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குது; நிறைய கத்துக்க முடியுது. தினமும் எதாவது கத்துக்கிட்டே இருக்கணும்னு நினைக்கிற எனக்கு, நாகம்மா செம தீனியா இருக்கு.”

“அப்புறம் டைரக்டர் ஆகிட்டீங்கன்னு கேள்விப்பட்டோம்...”

“ஆமாம். பெங்கால் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன். போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் போயிட்டு இருக்கு. அது முடிஞ்சதும், படம் சீக்கிரமே வெளிவந்துடும்” என்று சொல்லிவிட்டு சீனுக்கு ஷிப்ட் ஆனார் நாகம்மா! கண்களில் தெரிந்த வெறியைப் பார்த்தபோது அம்மம்மா!

- சா.இலாகுபாரதி
நம் தோழி, ஜூன், 2011

0 comments:

Post a Comment