25 July 2011

லடாய்: நமீதா vs சோனா

Posted by Show Now 2:31 PM, under | No comments


கவர்ச்சி நடிகைகள் சோனாவுக்கும் நமீதாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு இருக்கிறது. கோ படத்தில் நமீதாவை இமிடேட் செய்து சோனா நடித்ததற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் கவர்ச்சி நடிகை நமீதா.


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த கோ படத்தில் நமீதா மாதி சோனா நடித்து இருந்தார். தன்னுடைய நடிப்பு குறித்து நமீதாவை தொடர்பு கொண்டு பேசியதாகவும், எஸ்.எம்.எஸ். அனுப்பியதாகவும், ஆனால், நமீதா தன்னை கண்டுகொள்ளவே இல்லை என்று பத்திரிகையாளர்களிடம் சோனா தெரிவித்து இருந்தார். ஏற்கெனவே வாய்ப்புகள் இல்லாமல் ஓரங்கட்டப்பட்டு இருக்கும் நமீதாவுக்கு சோனாவின் நடவடிக்கைகள் வெந்தப்புண்ணில் எதையோ பாய்ச்சியது போல் ஆகிவிட்டது. அதனால், சூடாகிப் போன நமீதா டென்ஷனில் சோனாவை கடித்துவைக்காத குறையாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். 

நமீதா அறிக்கை

“இந்த ஆண்டு மட்டுமே இதுவரை ஐந்தாறு படங்களில் நான் நடிக்காமலேயே, என் பெயர், போஸ்டர் அல்லது ரசிகர் மன்றம் என என்னைச் சம்பந்தப்படுத்தி காட்சிகளை வைத்துள்ளனர். என்னைப் போன்ற பிரபல நடிகைகளுக்கு நேரும் வழக்கமான சங்கடம் இது என்பதை நான் புரிந்து கொண்டு இத்தனை நாள் அமைதி காத்தேன். அதற்காக இதுவரை யாரையும் குற்றம் சொன்னதில்லை. ஆனால் இப்போது நடிகை சோனா என் பெயரைப் பயன்படுத்தி செய்து வரும் செயல் அநாகரீகமானது.

சமீப காலமாக என்னை இமிடேட் செய்வது போலவும், கிண்டலடிப்பது போலவும் சில படங்களில் நடித்து வருகிறார் சோனா. நானும் போனால் போகட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டேன். ஆனால் ஆங்கில நாளிதழ் ஒன்றில், நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பினேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. என்னை அவர் பாராட்டவில்லை என்றெல்லாம் பேட்டி கொடுத்துள்ளார். இதற்கு முன்பும் கூட சில பத்திரிகைகளில் அவர் இப்படிச் சொன்னதாக தெரியவந்துள்ளது.

முதலில் இவர் என் நம்பருக்குத்தான் எஸ்எம்எஸ் அனுப்பினாரா என்று பார்க்கட்டும். அதுபோன்ற எஸ்எம்எஸ் எதுவும் எனக்கு அவரிடமிருந்து வந்ததில்லை. யார் இந்த சோனா? நான் பதில் சொல்லும் அளவுக்கு இவர் ஒரு நடிகையே அல்ல. நான் எதற்காக இவரிடம் பேச வேண்டும்? முதலில் அவருக்கு அடிப்படை நாகரீகம், மரியாதை ஏதாவது தெரிகிறதா?

தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையான என்னை கொச்சைப்படுத்தும் விதத்தில் கோ படத்தில் கேவலமான காட்சியில் நடித்ததற்காக அவரல்லவா வெட்கப்பட வேண்டும்உண்மையிலேயே இவருக்கு என் மீது மரியாதை இருந்தால், இப்படி ஒரு காட்சியில் நடிக்கச் சொன்னபோதே கோ பட இயக்குநர் கே.வி.ஆனந்திடம் இவர் மறுத்திருக்க வேண்டும் அல்லவா? அந்தப் படத்தில் வருவதுபோல நான் எந்த தேர்தலில் பிரச்சாரம் செய்தேன்...? எந்த அரசியல் கட்சிக்காவது ஆதரவு காட்டினேனா...? அப்படியிருக்கும்போது, என்னை எப்படி இந்த மாதிரி இழிவுபடுத்தலாம்?

என்னைப் பற்றி இதற்கு முன் எத்தனையோ படங்களில் காட்சி வைத்துள்ளனர். அந்தப் படங்களின் இயக்குநர்கள் அல்லது சம்பந்தப்பட்ட ஹீரோக்கள் யாரிடமும் நான் அதுபற்றி பேசியது கூட இல்லை. அந்த அளவு நான் உண்டு என் வேலை உண்டு என அமைதியாக இருக்கும் என்னை தேவையில்லாமல் சீண்டுவது ஏன்?

ஆனால் சோனாவின் செயல், இந்த முறை என் பொறுமையை சோதித்துவிட்டது. இத்தனை தவறுகளை, தனிமனித தாக்குதலை செய்துள்ள சோனா மீது நான்தான் கோபப்பட வேண்டும். இந்த லட்சணத்தில் நான் அவர் எஸ்.எம்.எஸ்., க்கு பதில் தரவில்லை என்று கூறியுள்ளார் சோனா. இந்த மாதிரி மலிவான விளம்பரம் தேடிக் கொள்வதை சோனா இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.”

ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு சொல்லுவாங்க; இங்க என்னடான்னா கூத்தாடிகளே ரெண்டுபட்டு இருக்காங்க. அதுவும் ரெண்டு கவர்ச்சி பாம் ரெண்டு பட்டா என்ன ஆகும். ஒரு பாமுக்கே கோடம்பாக்கம் தாங்காது. ரெண்டு பாம் சேர்ந்து வெடிச்சா..?

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு