13 July 2011

தொடர் குண்டுவெடிப்பு: மும்பையில் என்ன நடக்கிறது - வீடியோ ரிப்போர்ட்

Posted by lavanyan gunalan 9:51 PM, under | No comments

மும்மையில் தொடர்ந்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மும்பையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து இருப்பதாக இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதனால், ரசிகர்கள் ரஜினியை சந்திப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.


மும்பை குண்டுவெடுப்புக்கு பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் நடப்பது என்ன வீடியோ ரிப்போர்ட்:

video

video


நன்றி: ETV,

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு