19 July 2011

தெய்வத்திருமகள் படைத்த தெய்வத்திருமகன்

Posted by lavanyan gunalan 11:14 PM, under | 3 comments


தெய்வத் திருமகள் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள். இப்படியொரு படம் தமிழில் இதுவரை வந்தது இல்லை. தழுவல் படமாக இருந்தாலும், காப்பி படமாக இருந்தாலும் அதை தமிழில் சோடைபோகாமல் கொடுத்ததற்கு பாராட்டவேண்டும். சீயான் விக்ரமுக்கு தேசிய விருது காத்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்த சாராவுக்கு தமிழக அரசு விருதாவது கொடுக்க வேண்டும். தேசிய விருதுக்கு பரிசீலிக்கலாம்! விக்ரமின் நடிப்பு இளகிய மனம் படைத்தவர்களை அழவைக்கிறது! நானும் அழுதுவிட்டேன். மதராசபட்டணம் படத்துக்குப் பிறகு இப்படியொரு படத்தை கொடுத்த தெய்வத்திருமகன் விஜய்க்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுகள்.




படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் விக்ரமுடைய ஒவ்வொரு ஆக்‌ஷனுக்கும் கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்யும்போது புல்லறிக்கிறது. ’மேல சொல்லு...’னு எம்.எஸ்.பாஸ்கர் கேட்கும்போது வானத்தைப்பார்த்து விக்ரம் சொல்வது ஹைலைட். அனுஷ்காவின் அழகை அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். முத்துகுமாரின் வரிகளுக்கு ஒரு ஷொட்டு வைக்கவேண்டும். சந்தானத்தின் அதிரடி காமெடிகளுக்கு செல்லமாக ஒரு குட்டு. சொல்லமறந்துவிட்டேன் அனுஷ்கா அபாரம்! அதேபோல நாசர், பாண்டி உள்ளிட்ட இதர நடிகர்களும் ஓகேதான்.

3 comments:

நானும் படைத்தைப் பார்த்தேன் லாவண்யன். காட்சிகள் ஒவ்வொன்றும் அவ்வளவு கச்சிதம். அமலா பால் செம க்யூட். விக்ரம் அசத்திவிட்டார். அவரைத் தவிர இந்தக் கேரக்டரை யார் பண்ணியிருந்தாலும் சொதப்பியிருப்பார்கள்...

கண்டிப்பாக விக்ரமிற்கு தேசிய விருது கொடுத்தாக வேண்டும்.................... குழந்தை நட்சத்திரம் தாராவிற்கும் கண்டிப்பா விருது கிடைக்கும்............................

அதைதான் நானும் எதிர்பார்க்கிறேன் நண்பர்களே...

Post a Comment

கோப்பு

கோப்பு