02 July 2011

பேயாட்சி செய்யும் நாடு!

Posted by lavanyan gunalan 9:02 PM, under | No comments


நதிக்கு யாரால் பாதையமைத்து கொடுக்க முடியும்?

சூரியனுக்கு உங்களால் சுற்றுவட்டப் பாதை அமைக்க முடியுமா?

புலியை வளர்த்து புல் திங்கவைக்கத்தான் முடியுமா..?

இல்லையென்றால், கவியரசர் சொன்னது மாதிரி காற்றுக்கும் கடலுக்கும் வேலியும் மூடியும்தான் உங்களால் போட்டுவிட முடியுமா..?

இதையெல்லாம் செய்ய முடியாதபோது இந்த இயற்கையையும் இயற்கையின் படைப்புகளையும் சூறையாடுவதற்கும், சின்னாபின்னப் படுத்துவதற்கும் என்ன உரிமை இருக்கிறது?

கோத்ரா ரயில் பற்றவைக்கப்பட்டு எரிகிறது... 

நதிக்கு உன்னால் பாதையமைத்துக் கொடுக்க முடியாதபோது நதியின் வயிற்றைக் கிழித்து மணல் அள்ளி அதை நாசப்படுத்துவதற்கு என்ன உரிமை இருக்கிறது?

சூரியனுக்கு உன்னால் சுற்றுவட்டப் பாதை அமைத்துக்கொடுக்க முடியாதபோது இந்த வானத்தையும் இந்த வளிமண்டலைத்தையும் சீரழிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?

காக்கை - குருவிகள் போல், காடு - மலைகள் போல், கடலும் - நதியும் போல் மனிதனும் இயற்கையால் படைக்கப்பட்டவன்தானே?!

இல்லை இல்லை இயற்கை என்னைப் படைக்கவில்லை. என் அப்பனும் அம்மையும் சேர்ந்ததால் நான் பிறந்தேன் என்று சிறுபிள்ளைத் தனமாக வாதிடக்கூடியவனிடம் என்ன பேசிவிட முடியும்.

இப்படியே இருந்தால் 2020 -ல் இந்தியா வல்லரசாகிவிடுமா?
’சரி உன் அப்பனும் அம்மையும் எங்கிருந்து வந்தார்கள்..?’

‘தாத்தனும் பாட்டியும் சேர்ந்ததினால்’

‘தாத்தனும் பாட்டியும் எப்படி தோன்றினார்கள்..?’

’பூட்டனும் பூட்டியும் சேர்ந்ததினால்’

’பூட்டனும் பூட்டியும் எங்கிருந்து தோன்றினார்கள்..?’

இப்படியே போனால் கடைசியாக ஒரு கேள்வி வரும்..?

உலகின் முதல் மனிதன் எப்படி வந்தான்?

இதற்கு பல்வேறு அறிஞர்கள், விஞ்ஞானிகள் பதிலளித்துவிட்டார்கள்.

என்னுடைய கேள்வியும் நான் தேடும் பதிலும் அது அல்ல.

அலுவலக கட்டிடமோ, அரசு மாளிகையோ அல்ல
இந்திய பெருமுதலாளி ஒருவர் மனைவிக்கு கட்டிய மாளிகை
இயற்கையால் படைக்கப்பட்ட ஓரறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர் வரை எந்த உயிரும் உலகத்தை அழிக்கவேண்டும். இந்த மரத்தை வெட்ட வேண்டும். இந்த ஆற்றிலிருந்து மணல் திருடி விற்கவேண்டும். இந்தக் காற்றை மாசுபடுத்திப் பார்க்கவேண்டும். இந்த பூமியை தோண்டி பதம் பார்க்கவேண்டும். காட்டில் வாழும் உயிர்களை வேட்டையாடி தின்று கழிக்க வேண்டும். அணு உலை அமைத்து மனிதர்களை நரவேட்டையாட வேண்டும். இலங்கையில் தமிழர்களை கொன்றது மாதிரி, ஆப்கனில்... ஈராக்கில்... பாலஸ்தீனத்தில் அமெரிக்க மற்றும் அதன் ஆதரவுப் துருப்புகள் குண்டு மழை பொழிந்து, மக்களை கொன்றது மாதிரி, கொல்வது மாதிரி கொல்ல வேண்டும் என்று எந்த உயிரும் நினைத்தது இல்லை; நினைப்பதும் இல்லை.

ஆனால், மனிதன், மனிதன் மட்டும்தான் இவையெல்லாம் செய்கிறான். இயற்கையை அழிக்கிறான். இயற்கையால் படைக்கப்பட்ட மரம், செடி, கொடி, காடு, மலை, ஆறு, கடல், விலங்குகள் என்று எல்லாவற்றையும் அழிக்கிறான்.
மனிதனைப் போல் வேறெந்த உயிரனமாவது இயற்கை அழிப்பில் ஈடுபடுகிறதா..?

மணல் கொள்ளை
’பூச்சிகளை தவளை விழுங்குகிறது; தவளையை பாம்பு தின்கிறது; பாம்பை கழுகு காவு வாங்குகிறது; கழுகை நரி சின்னாபின்னப் படுத்துகுகிறது; நரி - புலி, சிங்கத்தால் வேட்டையாடப்படுகிறது. இதெல்லாம் இயற்கை அழிப்பு ஆகாதா..? மனிதன் பாம்பையும், நரியையும் சிங்கத்தையும் வேட்டையாடினால் இயற்கை அழிப்பு ஆகிவிடுமா..?’ - இதுதான் இயற்கை அழிப்பவனுடைய அடுத்த கேள்வி.

கேள்வியே சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

நரியை வேட்டையாடும் சிங்கமும் புலியும் எப்போதும் நரியை வேட்டையாட வேண்டும் என்றே திரிவதில்லை. பசியெடுத்தால் இரை தேடுகிறது. கண்ணில் படுகிற இரையை அடித்து பகிர்ந்து தின்கிறது. ஆனால், மனிதனுடைய வேட்டை அப்படியா நடக்கிறது.

கூடங்குளம் அணு உலை
பசிக்காகவா மனிதன் இயற்கையை வேட்டையாடுகிறான்..?

பசிக்காகவா மணலை கொள்ளையடிக்கிறான்..?

பசிக்காகவா காடுகளை அழிக்கிறான்..?

பசிக்காகவா விளைநிலங்களை கூறுபோட்டு விற்றுக்கொண்டிருக்கிறான்..?

பசிக்காகவா அடுத்தவன் குடியை கெடுக்கிறான்?

பசிக்காகவா குழந்தைகளை கடத்தி பணம் பறிக்கிறான்?

இவையனைத்தையும் பசிக்காகத்தான் மனிதன் செய்கிறான் என்றா சொல்லப் போகிறீர்கள்..?

ஊழலுக்கு இவர் போராடும் அளவுக்கு பரிதாப நிலையில் இந்தியா...
வாழ்க்கைக்கு என்ன தேவை?

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம், வாழும்போது ஒரு துணை; வாழ்க்கைக்குப் பிறகு ஆறடி மனை. இவற்றை இந்த உலகம் மனிதனுக்குத் தரவில்லையா..?

இயற்கை அழித்தொழிப்பில் ஈடுபடுகிறவர்கள் இவை கிடைக்காமல்தான் இருக்கிறார்களா..?

உணவு, உடை, இருப்பிடம், துணை, மனை இல்லாமல் இந்த உலகத்தில் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்? அவர்கள் எல்லாம் இயற்கையை அழிக்கவேண்டும் என்று என்றாவது நினைத்ததுண்டா..? காரியத்தில் இறங்கியதுண்டா..?

அளவுக்கு மீறிய பணம், அளவுக்கு மீறிய இடம், அளவுக்கு மீறிய காமம் இவையெல்லாம்தானே மனிதனை இயற்கையை பாழ்படுத்தச் சொல்கிறது. தேவைக்கு அதிகமான பொருள் ஒருவனிடம் இருக்குமாயின் அது பாழ்பட்டுப் போகும் என்பது நியதி.

தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்த்தி மக்கள் தாலியறுக்கும் காங்கிரஸ் கொள்கை
பாழ்பட்டுப் போகத்தான் இப்படி இயற்கையை பாழ்படுத்துகிறீர்களா..?

சாலையில் பிச்சை எடுப்பவன், வழிப்பறி கொள்ளை அடிப்பவன், சாக்கடை ஓரத்தில் வசிப்பவன், ஒரு வேளை உண்டு விட்டு இரண்டு வேளை பட்டினி கிடப்பவன் என்று தினம் தினம் யாரையாவது ஒருவரை பார்க்கிறோமே அதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள்..?

அவனா, இந்த அரசாங்கமா, இயற்கையைக் கொள்ளையடிப்பவனா..?

இயற்கையை அழித்தொழித்து, அவனுக்கு சேரவேண்டியவற்றையும் பதுக்கி தேவைக்கு அதிகமாக சேர்த்து வைத்திருக்கிறானே அவன் காரணம்..?

தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவனிடம் இருந்து பிடுங்கி, பிச்சை எடுப்பவனுக்கும், ஒரு நாள் முழுமைக்கும் சோறு இன்றி தவிக்கிறவனுக்கு கொடுக்காமல் வேடிக்கைப் பார்க்கிறதே அரசு அது காரணம்..?

இயற்கையை கொள்ளையடிப்பவனையும், தேவைக்கு அதிகமாக வைத்திருப்பவனையும், ஓர் அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற வரைக்கும் அந்த நாட்டும், நாட்டில் வறுமையில் வாடும் ஏழையும் பாழையும் அப்படியேதான் இருக்கமுடியும்.

நாடும் ஏழையும் வளர்ந்து விட்டால் கொள்ளையடிக்க முடியாதே! பேயாட்சி செய்ய முடியாதே!

காங்கிரஸ் அரசு பேயாட்சி செய்கிறது!

- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு