12 June 2011

cave restaurant: குகை உணவகம்

Posted by lavanyan gunalan 8:10 PM, under | No comments


சென்னை அண்ணா சாலையில் காமராஜர் அரங்கத்துக்கு பக்கத்தில் இருக்கிறது கேவ் ரெஸ்டாரண்ட். பேருக்கு ஏற்ப குகை வடிவிலேயே இந்த ரெஸ்டாரண்டை வடிவமைத்து இருக்கிறார்கள். இங்கு சாப்பிடுவதற்கு போவதைவிட ரெஸ்டாரண்ட் அழகை ரசிப்பதற்காகவே போகலாம். வடிவமைப்பு அவ்வளவு நேர்த்தி. அதேபோல அங்கு பரிமாறப்படும் உணவுகளும் கூட ரொம்ப வித்தியாசமானவை. குகை என்ற பேருக்கு ஏற்ப இந்த ரெஸ்டாரெண்டில் பழங்குடிகளின் பிரியாணி, ஆப்பிரிக்கர்களின் உணவு வகைகள் என்று மெனுவில் அசத்துகிறார்கள்.






சங் யங் குங்க் என்ற பெயரில் ஒரு உணவின் பெயரை பட்டியலில் பார்த்ததும் அசந்தேவிட்டேன். இவ்வளவு மெனக்கெடுவார்களா என்று நினைத்து ஆச்சரியப்பட்டேன். அதேபோல தமிழ்நாட்டின் பிரபல உணவு வகைகளையும் ஆங்கிலத்தில் படிக்கும்போது இன்பமாக இருந்து. வெளிச்சமும் மிதமான இருக்கிறது. (இது ஒரு பாராக இருந்தால் குடிமகன்களுக்கு கேவ் ரெஸ்டாரண்டை கொண்டாடுவார்கள்!) ஆனால், ஏசி, டைனிங் டேபிள், மின் விளக்குகள், கண்ணாடி என்று எல்லா ஹோட்டல்களிலும் இருப்பது மாதிரி வழக்கமான விஷயங்களையும் சேர்த்து குகை ரெஸ்டாரண்டின் அழகை கொஞ்சம் கெடுத்து இருக்கிறார்கள்.

காற்று (ஏசி) இல்லாமல் குகைக்குள் எப்படி இருக்கமுடியும் என்பது உண்மைதான். ஆனால், ஸ்பிலிட் ஏசி வைப்பதற்கு பதிலாக விண்டோ ஏசிவைத்து மறைத்திருக்கலாம். அதேபோல மின் விளக்குக்கை குகையின் கூரையில் பொருத்தியிருப்பதன் மூலம் கூரை கருங்கற்களால் ஆனது அல்ல என்பதை காட்டிக்கொடுத்து விட்டார்கள். அதேபோல டைனிங் டேபிளுக்கு பதிலாக நிஜமான பாறையைப் போட்டிருக்கலாம். ஒரு ஆறுதலாக பீங்கான் தட்டுகளை பயன்படுத்துகிறார்கள். என்னைக் கேட்டால் அதைக்கூட தவிர்த்துவிட்டு, மண் ஓட்டில் மந்தார இலை விரித்து பரிமாறினால் அந்த அட்மாஸ்ஃபியருக்கு ஒத்துபோகும். குகைகளில் ஏது கண்ணாடி. அதனால் கண்ணாடியையும் வைக்காமல் இருந்திருக்கலாம்.

புதுசாக ஒரு யோசனையை அமல்படுத்தும்போது அதில் இப்படியெல்லாம் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட பார்த்துப் பார்த்து செய்தால் செய்கிற வேலை இன்னும் அழகாகும். அதேநேரத்தில் அதனுடைய தரமும் கூடும். கேவ் ரெஸ்டாரண்ட் விஷயத்திலும் இதுதான். குகை வடிவில் அமைத்துவிட்டு இப்படி பல குறைகளோடு இருப்பது அதனுடைய தரத்தை குறைத்துவிட்டது!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு