30 June 2011

சினிமாவுக்கு முழுக்கு போட்ட சர்ச்சை நாயகி

Posted by lavanyan gunalan 6:49 AM, under | 1 comment

பிரபல நடிகை திரையுலகைவிட்டு பிரிந்தார். பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து, பல பிரச்னைகளையும் சந்தித்தனர். முதல் மனைவி இருக்கும்போதே நயன்தாராவுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று பிரபுதேவா மனைவி ரமலத் குற்றம்சாட்டி கோர்ட் வரைக்கும் சென்றார். 

ஒருகட்டத்துக்கு மேல் பிரபுவின் நடவடிக்கைகளை ரமலத்தால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அதனால், தன்னுடைய போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகாகிவிடக்கூடாது என்பதற்காக பிரபுவோடு சுமுகமாக போகத் தொடங்கியவர், விவாகரத்து பெற்றுக்கொள்வது என்றும், தனக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும், சொத்தில் பங்கு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.



பிரபுதேவா அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விட்டால் போதும் என்ற கணக்கில் சொத்தில் பங்கு தருவதாகக் கூறிவிட்டார். விவாகரத்து வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. ஒருசில நாட்களில் விவாகரத்து கிடைத்துவிடும். அதன்பிறகு இரண்டாவது காதலர் பிரபு தேவாவுக்கும் இரண்டாவது காதலி நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கப்போகிறது.

முன்னதாக ஸ்ரீராமராஜ்யம் தெலுங்கு படத்தில் நடித்துக்கொண்டிருந்த நயன்தாரா, அந்தப் படத்தோடு சினிமா உலகத்துக்கே முழுக்கு போட்டுவிட்டார். இத்தனைப் படங்கள் நடித்து எவ்வளவு ரசிகர்களை கவர்ந்திருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு நடிக்கக் கூடாது என்று பிரபுதேவா கூறிவிட்டதால் நயன்தாராவால் சினிமா உலகில் தொடர்ந்து இருக்க முடியவில்லை. இந்த விஷயம் அவரை மிகவும் பாதித்து இருக்கிறது. அதனால், கடைசி நாள் படப்பிடிப்புக்குப் பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே குலுங்கிக் குலுங்கி அழுதிருக்கிறார் நயன்தாரா. அவருடைய ஆற்றாமையைப் பார்த்துவிட்டு யூனிட்டே கலங்கிவிட்டதாம். அதன்பிறகு கலங்கிய கண்களும் கலங்கிய மனசுமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு எல்லாரிடமிருந்தும் பிரியா விடைபெற்றிருக்கிறார் நயன்தாரா.

இதற்குமுன் சிம்புவை காதலித்தது, முத்தக்காட்சியில் நடித்தது, 2 பீஸ் அணிந்து நடித்தது, பிரபுதேவா காதல், ரமலத்துடன் மோதல், சீதையாக நடித்தது வரை சர்ச்சையின் நாயகியாகவே வலம் வந்த நயன்தாரா சினிமாவுக்கு முழுக்கு போட்டது சினிமா ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்புதான்.

ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அவர் அறிமுகமானபோது பக்கத்து வீட்டு பெண் போலவே இருந்ததுதான் நயந்தாராவை தமிழ் சினிமாவில் வெற்றி நாயாகியாக வலம் வரவைத்தது. அதன்பிறகு அவர் நடித்த பெரும்பாலான தமிழ் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா சினிமாவை விட்டு விலகியது ’மசாலா சினிமா’ ரசிகர்களுக்கு ஒரு பேரிழப்புதான்.

1 comments:

ஐயோ நயன் இல்லாத தமிழ் சினிமாவை நெனச்சிப் பாக்கமுடியலப்பா... நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணு வரலாம்... ஆனா, திரும்பவும் நயன்தாரா வரமுடியுமா... பிரபுதேவா இப்பவே வேலைய காட்ட ஆரம்பிச்சுட்டாரா...

Post a Comment

கோப்பு

கோப்பு