27 June 2011

வாய்க்கவில்லை ஒரு தோழி

Posted by lavanyan gunalan 8:17 PM, under | 2 comments

எனக்கென்று ஒரு தோழியிருந்தாள்
மழலைப் பருவத்தில்
அம்மா என்று அழைக்க.




வாடி போடி என்பதற்கும்
கூட்டாக ஆடுவதற்கும்
பள்ளிப் பிராயத்தில் 
இரண்டு தோழிகள்.

சண்டையிடவும்
அரட்டையடிக்கவும்
பள்ளிக்குப் பிந்தைய
நாட்களில் இருவர்.

கல்லூரிக் காலத்தில்
மரியாதைக்குரியவளாய்
வழிநடத்திச் செல்பவளாய்
ஒருத்தி.

வாலிபத்தை மென்று விழுங்கும்
வேலையற்ற நாட்களில்
வாய்க்காமல் போனது குறித்து
ஜீரணிக்க இயலவில்லை
காதல் செய்யவும்
கடுந்துயர் உரைக்கவும்
ஒரு தோழி.

- சா.இலாகுபாரதி

’மழை இரவு ’
புத்தகத்திலிருந்து...


2 comments:

vaalthukal laavanyan.
Vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

வாலிபத்தை மென்று விழுங்கும்
வேலையற்ற நாட்களில்
வாய்க்காமல் போனது குறித்து
ஜீரணிக்க இயலவில்லை
காதல் செய்யவும்
கடுந்துயர் உரைக்கவும்
ஒரு தோழி.
>>>>
தோழியை பிரிந்து வாடும் தோழனின் உணர்வை புரிந்து கொண்டேன் நன்றி சகோ

Post a Comment

கோப்பு

கோப்பு