26 June 2011

தேவதைகள் உலா வருகிற நேரம்

Posted by lavanyan gunalan 7:14 AM, under | 1 comment

நீ இல்லாமல் போனதிலிருந்து
தூக்கமும் போய்விட்டது.

இருந்தால்,
தேவதை கதை சொல்வாய்...

நான்
உன் மடி மீது தலை சாய்ப்பேன்.




அடர்ந்த காட்டிலிருந்து
பூக்கள் நிறைந்த தோட்டத்துக்கு
தேவதை வருவாள்...
அப்போது
உன் விரல்களை பிடித்திருப்பேன்.

தேவதையின் வருகையை
பூக்களெல்லாம் கொண்டாடிக்கொண்டு
இருக்கும்போது
என் கூந்தல் நுனி பிடித்து
கண்களை வருடுவாய்...

இப்போது
தோட்டத்தில் அடர்ந்த மழை...
பூக்களோடு சேர்ந்து தேவதையும்
நனைவாள்.

அடர்ந்த மழை சாரலாகப் பெய்யும்.
சாரலில் நனைந்து பூக்கள் சிரிக்கும்.
மகிழ்ச்சியைக் கண்டு
தேவதையும் ஆனந்திப்பாள்.



வானத்திலிருந்து
தேவதைகளின் தோழிகள்
அவளை காட்டிற்கு அழைக்க
பூக்களிடம் முத்தம் சிந்திவிட்டு
தேவதை பறந்துவிடுவாள்.

நான் தூங்கிக்கொண்டிருப்பேன்.
என் ஆழ்ந்த உறக்கத்தைப் பார்த்து
கொலுசை வருடியபடியே
நீயும் தூங்கிப்போவாய்

காத்திருக்கிறேன்...
எப்போது வருவாய்
தேவதை கதை சொல்ல..?

- சா.இலாகுபாரதி

தேவதைகள் உலா வருகிற நேரம்
கவிதைத் தொகுப்பிலிருந்து...

ஆன்லைனில் புத்தகம் வாங்க கிளிக் செய்யுங்கள்...

1 comments:

காத்திருக்கிறேன்...
எப்போது வருவாய்
தேவதை கதை சொல்ல..?

vetha.Elangathilakam.
http://kovaikkavi.wordpress.com

Post a Comment

கோப்பு

கோப்பு