23 June 2011

ஹீரோ ஆக்கிய ரஜினி லெட்டர்

Posted by lavanyan gunalan 10:14 PM, under | No comments

மைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 2
ஒருநாள், சாந்தி டீச்சர் தண்ணி குடிக்கிறாங்க. பல்லுலேயிருந்து தண்ணி சிதறி விழுது. நான் கீழே நிக்கிறேன். ஆனா, குடை பிடிச்சி இருக்கேன். இப்படி, ஒரு படம் போட்டு இருந்தேன்.

ஆனா, எதுக்குப் போட்டேன்... ஏன் போட்டேன்னு யாரும் கேட்கலை. இந்தமாதிரி ஓவியத்தின் மூலமா ஒரு விஷயத்தை நிறைவேத்துற மனநிலை எனக்கு அப்பவே இருந்தது.
ஒருகட்டத்துக்குப் பிறகு ஸ்கூல்லே நடக்குற எல்லா பெயின்டிங் காம்பிடேஷன்லேயும் எனக்குத்தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ். அதுக்காகவே என்னை ஸ்கூல்லே வெச்சிருந்தாங்க. ஆனா, ஒவ்வொரு வருஷமும் ஒரு ஸ்கூல் மாறிட்டே இருப்பேன். மதுரை, விருதுநகர், ராஜபாளையம், சிவகாசி, கோவில்பட்டின்னு சுத்திசுத்தி எல்லா ஊர்லேயும் படிச்சேன். கோவில்பட்டியிலே மட்டும் எப்படியோ தப்பித்தவறி மூணு வருஷம் படிச்சிட்டேன். அங்கே ஹாஸ்டல்லே தங்கி படிச்சேன். அந்த சூழல் ரொம்பப் பிடிச்சிருந்தது; ஜாலியாவும் இருந்தது.

அப்போ, சிக்ஸ்த் படிச்சிட்டு இருந்தேன். நாலு வருஷமா ஃபெயிலான ஒரு பையன் அதே வகுப்புலேய இருந்தான். பேர் இசக்கிராஜன். பார்க்க பெரிய ஆள்மாதிரி இருப்பான். கொஞ்சம் ரவுடித்தனமாவே இருப்பான்.

'ம்... சரி, நல்லா படெமல்லாம் வரைவியாமே, இந்தா என் கையிலே சில்க் ஸ்மிதா படம் வரை'ன்னான்.

'சில்க் ஸ்மிதா படமா...'ன்னு, நான் ஏதோ கவர்ச்சியா வரைஞ்சிட்டேன்.

அங்க சரஸ்வதி டீச்சர்னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்க, தமிழ் டீச்சர். கிட்டே வந்து, 'என்னடா பண்றே'ன்னாங்க. நான் அந்தப் பையன் கையிலே வரைஞ்சிட்டு இருக்கிறதை பின்னாலேயிருந்து பார்த்துட்டு, 'எந்திரிடா'ன்னாங்க. 'நீயும் எந்திரிடா'ன்னு சொன்னதும், அவன் தெனாவட்டா நின்னான். அவன் டீச்சரைவிட உயரம். டீச்சர், 'என்னடா'ன்னதும், 'உங்களைத்தான் டீச்சர் வரைஞ்சிட்டான்'னு ஒரே போடா போட்டான்.

எனக்கு பயத்துலே ஒண்ணும் புரியாமே, 'இல்லே டீச்சர். அது சில்க் ஸ்மிதா'.

'சில்க் ஸ்மிதாவை வேற வரையரையா நீ'ன்னு ரெண்டு போடு போட்டு, 'ஹெட்மாஸ்டர்கிட்ட வாடா'ன்னாங்க. நான், இசக்கிராஜன், சரஸ்வதி டீச்சர் மூணுபேரும் ஹெட்மாஸ்டர் அறைக்குள்ளே நுழைஞ்சோம். அதுவரைக்கும் எனக்கு டிராயிங் வரையத் தெரியும்னு அந்த ஸ்கூல்லே யாருக்கும் தெரியாது.

ஹெட்மாஸ்டர் எங்களைப் பார்த்ததும். 'இசக்கிராஜா நீ போடா... இவனை நான் பார்த்துக்கறேன்'னு அவனை அனுப்பிவெச்சிட்டாரு. அவன் ரவுடியாச்சே! டீச்சரையும் அனுப்பிவெச்சிட்டார். என்னை உட்காரச் சொன்னார். சரி ஏதோ பண்ணப்போறாங்கன்னு, 'இல்லை சார், நான் நிக்கறேன்'னேன்.

'உனக்குப் படம் வைரயத் தெரியும். அதை ஏன் கெட்ட வழியிலே பயன்படுத்தறே. ஏன் நல்ல வழியிலே பண்ணக்கூடாது. சில்க் ஸ்மிதா படம் வரைஞ்சா உனக்கு என்ன கிடைக்கும்.'

'இல்லை சார் அதுவந்து சார்...'

'அப்படியெல்லாம் நீ செய்யாதே... ரெண்டு வாரம் கழிச்சி ஓவியப் போட்டி வருது. விவேகானந்தா கேந்திரத்திலேருந்து லெட்டர் போட்டு இருக்காங்க. இப்பதான் அந்த லெட்டரைப் படிச்சேன். படிச்சதும் நீ வந்து நிக்கறே. இனிமே உன்னை நல்வழிப்படுத்திக்கணும்...'னு அட்வைஸ் பண்ணார்.

'சரி சார்'ன்னு சொன்னேன்.

விவேகானந்தா கேந்திரத்திலேருந்து என்னை திருநெல்வேலிக்கு கூட்டிட்டுப் போய், அங்க ஓவியப் போட்டி வெச்சாங்க. எனக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ். ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைச்சதும் கன்னியாகுமரிக்கு கூட்டிப்போனாங்க. மூணு நாள் அங்கேயே தங்கவேண்டியதா போச்சு. அங்க தங்குறதுக்கு ரூமெல்லாம் இல்லை. பெரிய ஹால் இருந்தது. எல்லாரும் படுக்க தனித்தனி ரூம் மாதிரி சாக்பீஸ்லே கோடு போட்டு, எழுதியிருந்தாங்க:

'நீ இதை சுவர்ன்னு நினைச்சா இது சுவர்;
 கோடுன்னு நினைச்சா கோடு.
நீ சுவரா நினை'.

அந்தச் சின்ன வயசுலே அதைப் படிக்கும்போது வித்தியாசமா இருந்தது. அந்த எண்ணம் அப்படியே மனசுலே பதிஞ்சுடுச்சு.

பத்தாவது படிக்கும்போது மூர்த்திங்கிற பையனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. அவன் ரஜினி ரசிகன். ரஜினிக்கு ஒரு லெட்டர் போட்டான். அவரும் பதில் கடிதம் அனுப்பிட்டாரு. அவ்வளவுதான் அவன் ஹீரோ ஆயிட்டான்.


- சா.இலாகுபாரதி

(2010, விகடன்.காம்)

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு