22 June 2011

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தட்டிக்கேட்காத பிரச்னைகள்

Posted by lavanyan gunalan 10:07 PM, under | 1 comment

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பதெல்லாம் சிலப்பதிகார காலம். இப்போதெல்லாம் அரசியல் பிழைத்தோர்க்கு கில்மா கூற்றாகும்... உடான்சு கூற்றாகும்... டகால்டி கூற்றாகும்... தில்லாலங்கடி கூற்றாகும்... டபாய்த்தல் கூற்றாகும்... 420 கூற்றாகும்... ஸீனு கூற்றாகும்... உட்டாலங்கடி கூற்றாகும்... ரவுசு கூற்றாகும்... பீலா கூற்றாகும்... உதாறு கூற்றாகும்... ரீலு கூற்றாகும்... இப்படி சென்னை பாஷையில் பல விஷயங்களை அரசியல் பிழைப்போருக்கு கூற்றாக உரைக்க முடியும்.

அந்த வகையில் ஒரு கூற்றை வைத்துக்கொண்டு மரியாதைக்குரிய ஈ.வெ.கே.எஸ்.இளங்கோவன் மீடியாக்களிடம் டபாய்த்துக்கொண்டு இருக்கிறார். திமுக தலைவர் கருணாநிதி சொன்ன, ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ என்ற வாசகத்தை பிடித்து தொங்கிக்கொண்டு இளங்கோவன் பேசுகிறார்... ’’கருணாநிதி காங்கிரஸோடு கூட்டணி வைத்துக் கொண்டதால்தான் கேடாக முடிந்தது என்று கூறிவருகிறார். ஆனால், திமுகவோடு காங்கிரஸ் கூட்டணி வைத்துக்கொண்டதால்தான் காங்கிரஸ் கட்சி தோற்றது’’

- இதைவிட பெரிய காமெடி வேற இருக்கவே முடியாது.

கருணாநிதி VS இளங்கோவன்


காங்கிரஸ் தனித்தோ அதிமுகவோடு இணைந்தோ போட்டியிருந்தாலும் தோற்றிருக்கும் என்பதுதான் உண்மை. இந்த உண்மையை பிழைப்பு அரசியலுக்காக இளங்கோவன் மறைக்கக் கூடாது; மறுக்கக் கூடாது.

அதேபோல 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கு முழு பொறுப்பும் திமுகதான் என்று முழு பூசணிக்காயை சே(சோ)ற்றில் மறைக்கப் பார்க்கிறார். மத்தியில் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்துகின்ற காங்கிரஸ் தலைமைக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய ஊழலை நிகழ்த்திவிட முடியும் என்று இளங்கோவன் எப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை.

Bharat Rakshak.com

வெளியிட்டுள்ள மதர் போர்டு

இந்த ஊழல் விவகாரம் சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்னதாகவே கம்யூனிஸ்ட்டுகள் நோண்டி நொங்கு எடுத்ததால்தான் இவ்வளவு பெரிய விஸ்வரூபம் எடுத்து மக்கள் முன் மண்டியிட்டு நிற்கிறது. இதில் காங்கிரஸுக்கு பங்கில்லை என்று சொன்னால் நம்புவதற்கு மக்கள் ஒன்று விரல் சூப்பும் குழந்தைகள் இல்லை.

யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன்; யார் தப்பு செய்தாலு தட்டிக்கேட்பேன் என்று சொல்லும் திருவாளர் இளங்கோவன் திரும்பத் திரும்ப இலங்கைக்கு சொம்படிக்கும் காங்கிரஸ் தலைமையை ஏன் தட்டிக்கேட்கவில்லை?

தேர்தலுக்கு முன்புவரைக்கும் திமுகவோடு ஒட்டிப்பிறந்த ரெட்டைப் பிள்ளையாக இருந்துவந்த காங்கிரஸ், இப்போது அசைக்கமுடியாத சக்தியாக ஜெயலலிதா உருவெடுத்த பிறகு அவருடன் கூட்டணி வைத்து அடுத்த மத்திய தேர்தலை சந்திக்க இப்பவே பல ஒத்திகைகளை பார்த்துவரும் தன் கட்சியின் பச்சோந்தி மனப்பான்மையை ஏன் இளங்கோவன் தட்டிக்கேட்கவில்லை?

அன்னா ஹசாரே
ஊழலை ஒழிக்கவேண்டும் என்று காட்டுக்கத்தலாக கத்திவரும் காந்தியவாதி அன்னா ஹசாரே லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகிறாரே... அவருடைய குரலுக்கு செவி சாய்க்காத காங்கிரஸ் அமைச்சரவையை ஏன் இவர் தட்டிக் கேட்கவில்லை?

பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தாரை வார்த்தபிறகு, பெட்ரோல் லிட்டருக்கு 15 ரூபாய்க்குமேல் விலை கூடியிருக்கிறது. இதனால், விலைவாசி ஏற்றம்... பண வீக்கம்... அத்தியாவசிப் பொருட்களின் விலை உயர்வு என்று பெட்ரோல் விலை உயர்வால் ஏழை பாழைகள் முதல் நடுத்தர மக்கள் வரை தகிடுதத்தம் போடுகிறார்களே... இந்த பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை தனியார் வசம் ஒப்படைத்த காங்கிரஸ் அரசை ஏன் இவர் தட்டிக்கேட்கவில்லை.

பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்தால்
இந்த நிலைமைகூட ஏற்படலாம்...

முன்னதாக ஆந்திராவிலும், ஆட்சி மாற்றத்துக்குப் பின் கேரளாவிலும் தமிழகத்துக்கு நீர் பங்கீடு செய்வதில் பிரச்னை நீடித்து வருகிறதே... இதை காங்கிரஸ் தலைமை ஏன் கேள்வி கேட்கவில்லை என்று இவர் தட்டிக்கேட்காமல் மறந்தது ஏன்?

இப்படி பல பிரச்னைகளை அடுக்கமுடியும். கருணாநிதியையோ திமுகவையோ விமர்சிக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் எப்படியாவது விமர்சித்துவிட்டுப் போகட்டும். ஆனால், திமுகவோடு கூட்டணி வைக்காமல் இருந்தால் காங்கிரஸ் தோற்றிருக்காது என்று சிறுபிள்ளை மாதிரி திரும்பத் திரும்ப சொல்லாமல் இருந்தால், காங்கிரஸ் மீது வெறுப்பு இருந்தாலும், இளங்கோவன் மீது இருக்கிற மரியாதையாவது குறையாமல் இருக்கும். இதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்!

1 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு