17 June 2011

அவள் இடை ஞாபகம்!

Posted by lavanyan gunalan 6:43 PM, under | No comments



என் பார்வைக் கணைகள்
தீண்டும் நேரங்களில்
பட்டாம்பூச்சியாகிவிடுகின்றன
அவள் விழிகள்


மெல்ல நடக்கிறாள் சலங்கை சிரிக்கிறது
தேவதையை தழுவி லயித்த மகிழ்ச்சி.

ஒரேயொருமுறை
என் தோட்டம் வந்துபோயேன்
மலர்கள் உன்னிடம்
சிரிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமாம்...

பாதங்கள் நோக
நீ ஏன் நடக்க வேண்டும்
என் தோள்கள் இருக்கும்போது...


ரயிலைப் பார்க்கும் போதெல்லாம்
எனக்கு அவள் இடை ஞாபகம்


ஒருபோதும் என்னை
யாரும் வீழ்த்திவிடமுடியாது
மௌனத்தை அவள் விரும்பாதவரைக்கும்


அவளிடம்
காதலை சொல்ல இயலாத என்னை
கேலிப் பேசும் கால்கொலுசே
நீ அவளை இழந்து
கழன்றுப் போகக் கடவது...



Poems: Sa.Elaagubharathy
photos courtesy: Lakshmanaraja Kannan and Sowmya



0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு