16 June 2011

ஆச்சர்யம்! ஆனால் உண்மை!

Posted by lavanyan gunalan 6:55 AM, under | 1 comment

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆனந்தகுமார் தன் மகள் கோபிகாவை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். தருமபுரி ஆட்சியராக இருந்தபோது மகள் கோபிகாவை அங்குள்ள மெட்ரிக் பள்ளியில் சேர்த்திருந்த ஆனந்தகுமார், ஜூன் 3இல் ஈரோடு ஆட்சியராக பொறுப்பேற்ற பிறகு கலெக்டர் பங்களாவிற்கு அருகிலுள்ள குமலன்குட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் சேர்த்து இருக்கிறார்.

பாடம் படிக்கும் ஆட்சியர் மகள்

கலெக்டரின் இந்த நடவடிக்கை ஈரோடு மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுக்க மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவருடைய இந்த செயலால் நெகிழ்ச்சியடைந்த பலர் ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால், உண்மையாகவும் இருக்கிறதே என்று மோவாயில் கைவைத்துப் பேசாத குறைதான்!

அன்றாடம் கூலி வாங்கும் தொழிலாளி முதல் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மாதச் சம்பளக்காரர் வரை தன்னுடைய குழந்தையை (தனியார்) மெட்ரிக் அல்லது சிபிஎஸ்இ பள்ளியில் சேர்த்து அழகுபார்க்க வேண்டும் என்றே நினைப்பது வழக்கம். ஆனால், இந்த மிடில் கிளாஸ் மனப்பான்மையை தூக்கியெறிந்து விட்டு தன்னுடைய மகளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்த்திருப்பதன் மூலம் பலருடைய பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் ஈரோடு ஆட்சியர் ஆனந்தகுமார்.

ஆனந்தகுமார்
புதனன்று (ஜூன் 16) திடீரென்று குமலன்குட்டை பள்ளிக்கு வந்த ஆட்சியரைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போன பள்ளியின் தலைமை ஆசிரியை ராணி ஆனந்தகுமாரை வரவேற்று தன்னுடைய இருக்கையில் அமருமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், அதை மறுத்துவிட்ட ஆனந்தகுமார் தலைமை ஆசிரியரை அவருடைய இருக்கையில் அமரச்சொல்லிவிட்டு பெற்றோர் அமரும் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார்.

அப்போது தன்னுடைய மகளுக்கு இலவச சீருடை வழங்கப்படுமா என்று தலைமை ஆசிரியரிடம் ஆனந்தகுமார் கேட்டார். அதற்கு, சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு மட்டும் பள்ளி மூலம் இலவச சீருடை வழங்கப்படும். மற்ற குழந்தைகளுக்கு வழங்கப்படமாட்டாது என்று கூறினார் ராணி.

அப்படியா, என் குழந்தையும் பள்ளி சத்துணவு சாப்பிடும். அதற்கான பட்டியலில் சேர்த்து, பள்ளி சீருடை வழங்குங்கள் என கேட்டுக்கொண்டிருக்கிறார் ஆனந்தகுமார். அதன்பின் பள்ளியில் மகள் கோபிகாவை விட்டுவிட்டு அலுவலகம் திரும்பிவிட்ட ஆட்சியர் ஆனந்தகுமாரை நிருபர்கள் அணுகி இதுகுறித்து கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர், இது என்னுடைய சொந்த விஷயம் இதைப் பற்றி சொல்ல எதுவுமில்லை என்றுகூறியிருக்கிறார்.

கால் நடை மருத்துவத்தில் முதுகலை பயின்றிருக்கும் ஈரோடு ஆட்சியர் ஆனந்தகுமாருடைய இந்த எளிமை பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது பாராட்டுக்குரிய விஷயமாக இருந்தாலும் இந்த எளிமையும் பக்குவமும் கடைசிவரை தொடரவேண்டும்.

1 comments:

இதில் சிந்திப்பதுக்கோ அல்லது விமர்சனம் செய்து அவரை புகல்வதுக்கோ ஒன்றும் இல்லை காரணம் மனிதர்கள் எல்லோரும் சமமே ஆனால் ஒரு விடையத்தை அங்கே அவதானிக்க முடிந்தது அதாவது அவர் பாடசாலைக்கு சென்றபோது தலைமை ஆசிரியர் தன்னுடைய இருக்கையை கொடுக்க முயன்றது ஒரு முட்டாழ்த்தனமே காரணம் அந்த இடத்தில் அவர் தலைமை ஆசிரியர் அந்த எடம் அவருக்குரிய பதவிக்குக் கொடுத்த மதிப்பு அதை அவர் யால்ரா பிடிப்பதுக்காக விட்டுக்கொடுக்க முயன்றது தப்பே

இப்படி ஆரம்பிப்பதே தவறுகள் வருவதுக்கு சாத்தியங்கள் உருவாகும் உருவானது தன தொழிலை சரியாக சேவின் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை ஏன் அப்போது ஜனாதிபதி வந்திருந்தாலும் அவர் ஒரு பெற்றோர் என்ற அடிப்படையில் கொடுக்க வேண்டிய மரியாதையைத்தான் கொடுக்க வேண்டும் அதாவது அவர் நாட்டுக்கு அதிபதியாக இருக்கலாம் ஆனால் அவர் அங்கு வந்தது பெற்றோராகவே

அடுத்தது அவர் தன வசதிக்கி ஏற்றாப்போல் பிள்ளையை பள்ளியில் சேர்த்தது ஒன்றும் விசித்திரம் இல்லை ஆனால் எதை அவர் சிந்திக்காவிட்டாலும் ஊடாகங்கள் பெரிதாக்கி அவரை கோப்பில் ஏர்த்தி பின் அங்கிருந்து அவர் தப்பு செய்வதுக்கு வலிகொல்லுகின்றனர்
நன்றி

Post a Comment

கோப்பு

கோப்பு