11 June 2011

தமிழக ஆளுநர் வெண்ணிலாவுக்கு விருது வழங்கினார்

Posted by lavanyan gunalan 9:15 PM, under | No comments


கவிஞர் அ.வெண்ணிலா எழுதிய ‘இரவு வரைந்த ஓவியம்’ கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு விருது கிடைத்திருக்கிறது. இந்த விருதை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா வழங்கினார்.


ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து அ.வெண்ணிலா விருது பெற்றார். உடன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் த.உதயசந்திரன், எழுத்தாளர் ஜெயந்தனின் புதல்வர் சீராளன், தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் ம.இராஜேந்திரன்.
2010ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலாக இரவு வரைந்த ஓவியம் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்த விருது வழங்கப்பட்டு இருக்கிறது. ஆளுநர் மாளிகையில் நடந்த விருது வழங்கும் விழாவில் விருதையும் பரிசுத் தொகையையும் பர்னாலா வழங்கி கவுரவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மு.ராஜேந்திரனும் அ.வெண்ணிலாவும் இணைந்து வந்தவாசிப் போர் - 250 என்ற தலைப்பில் வரலாற்று நூல் எழுதி வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு