05 June 2011

குலைநடுங்கிய காங்கிரஸ்: ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார் - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்...

Posted by lavanyan gunalan 5:22 PM, under | No comments

டெல்லி ராம் லீலா மைதானத்தில் இரண்டு நாட்களாக ராம்தேவ் நடத்தி வந்த உண்ணாவிரதத்தை திட்டமிட்டு காங்கிரஸ் அரசு கலைத்து இருக்கிறது. ஆனால், ராம்தேவின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக அறிவித்தும், அதை ஏற்காமல் தொடர் போராட்டம் நடத்திவந்ததால்தான் பாதுகாப்பு காரணங்களுக்காக உண்ணாவிரதப் பந்தலில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




ஆனால், மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி முற்றிவந்ததாலேயே உண்ணாவிரதம் கலைக்கப்பட்டது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள். இதைத் தொடர்ந்து குலை நடுங்கிப்போயிருக்கும் காங்கிரஸ், மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாக டெல்லியில் கூட்டியிருக்கிறது.

உண்ணாவிரதத்தைக் கலைத்த போலீஸார், 15 நாட்களுக்கு டெல்லி பக்கம் திரும்ப ராம்தேவுக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்கள். இதற்கு முன்னதாக ராம்தேவ் மீது கறுப்புப் பணம் சேர்த்து வைத்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் தொடர் புகார்களை எழுப்பி வந்தனர். அதனால், விரைவிலேயே ராம்தேவ் மீது கறுப்புப் பணம் தொடர்பான வழக்குப் பாயலாம் என்றும் சட்டவல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதனால், இத்தனை நாட்களாக ராம்தேவ் கறுப்புப் பணம் வைத்திருந்தது காங்கிரஸ் அரசுக்குத் எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

காங்கிரஸின் இந்த நடவடிக்கை, ஊழலை ஒழிக்க வலியுறுத்தி பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் வெற்றிப்பெற்று இருப்பதையே காட்டுகிறது. அதனால், ராம்தேவை தியாகப் பெருந்தகை என்று சொல்லிவிடமுடியாது; ஆர்.எஸ்.எஸ்ஸின் தூண்டுதலின் பேரில்கூட ராம்தேவ் காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால், அந்த நெருக்கடி காங்கிரஸின் கழுத்தை நெறித்து மூச்சுத் திணறவைத்திருப்பதை யாரும் மறுக்கமுடியாது.

முன்னதாக டெல்லி ராம்லீலா மைதானத்தில் ராம்தேவ் நடத்திவந்த உண்ணாவிரதத்தைக் கலைக்க, அந்தப் பகுதி முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்து, ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது கண்ணீர் புகை வீசப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு பாதுகாப்புக் காரணம் என்று கூறி ராம்லீலா மைதானத்தைவிட்டு ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டார்.

ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டபோது எடுத்த படங்கள்... ராம்தேவ் உண்ணாவிரதத்துக்கு ஆதரவாக கூடிய மக்கள் திரள் எக்ஸ்க்ளூஸிவாக...









0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு