09 May 2011

காதல் கல்யாணம் செய்யப்போகிறேன்: சிம்பு திடீர் அறிவிப்பு!

Posted by lavanyan gunalan 9:06 PM, under | No comments


இந்தியில் சல்மான்கான் நடித்து சக்கைப்போடு போட்ட தபாங் படம் தமிழில் ‘ஒஸ்தி’ என்ற பெயரில் இயக்குநர் தரணி இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார். தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோ பாத்பாய் நாயகியாக நடிக்கிறார். உத்மபுத்திரன் படத்தை எடுத்த மோகன் அப்பாராவின் பாலாஜி ரியல் மீடியா பிரைவேட் லிமிட்டெட் ‘ஒஸ்தி’ யைத் தயாரிக்கிறது.

ஒஸ்தி படப்பூஜை திங்களன்று காலை ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் தரணி, “வழக்கமான தமிழ்ப் படங்களில் இருக்கக்கூடிய குடும்ப சென்டிமென்ட், ஆக்‌ஷன், காமெடி எல்லாம் கலந்த போலீஸ் ஸ்டோரியாக இது இருந்தாலும் வழக்கமான போலீஸ் கதையாக இல்லாமல் வித்தியாசமான படமாக இருக்கும். 

இந்தியில் எடுக்கப்பட்ட தபாங் படத்தைவிட தமிழ் ஒஸ்தி ரொம்ப ஒஸ்தியாக இருக்கும். இந்தியில் சல்மான் நடித்த கதாபாத்திரத்துக்கு சிம்புவைத் தவிர வேறு யாரும் தமிழில் ஃபிட்டாக மாட்டார்கள். தொடர்ந்து வெற்றிப்படங்களாகக் கொடுத்துவரும் சிம்புவுக்கு ஒஸ்தியும் மிகப்பெரிய வெற்றியைத் தரும்” என்று கூறினார்.

அதன்பிறகு பேசிய படத்தின் நாயகன் சிம்புவை பத்திரிகையாளர்கள் மடக்கி... ”கல்யாண சாப்பாடு எப்போ போடப்போறீங்க...” என்று கேட்டனர். கேள்விக்கு பதிலளித்துப் பேசிய சிம்பு, ”இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கல்யாணம் செய்வதற்கு இன்னும் நேரம் கூடிவரவில்லை. அப்படியொரு சூழ்நிலைவந்தால் அனைவருக்கும் அறிவித்துவிட்டுதான் திருமணம் செய்துகொள்வேன்” என்று கூறினார்.

நயன்தாரா விஷயத்தில் சிறிதுகாலமாக மனவருத்தத்தில் இருந்து வந்த சிம்பு மனதில் இப்போது மீண்டும் காதல் பூத்திருக்கிறது.

காரணம் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த சிம்பு, தனக்கு திருமணம் நடந்தால் அது காதல் திருமணமாகத்தான் இருக்கும் என்றார். ஆனால், யார் அந்தப் பெண் என்பதை மட்டும் மூடுமந்திரமாக வைத்திருக்கிறார்.

காதலியைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அந்தக் கேள்வியைக் கண்டுகொள்ளாமல் அடுத்தக் கேள்விக்கு பதிலளிக்கத் தாவிவிட்டார்.

சூடுகண்ட பூனையாச்சே!

ஒஸ்தி படத்தில் சிம்பு, ரிச்சா, ஜித்தன் ரமேஷ், ரேவதி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்துவரும் பாய்ஸ் படத்தில் டிரம்மராக நடித்த தமன்.எஸ் இசையமைக்கிறார். தரணி படங்களுக்கு கேமராமேனாக இருக்கும் கோபிநாத்தான் இந்தப் படத்துக்கும் ஒளிப்பதிவாளர்.

சிம்புவும் தரணியும் ஒஸ்தியாக இருப்பதால், அரைச்ச மாவை அரைக்கிறார்களா... துவைச்ச துணியை துவைக்கிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு