04 May 2011

கஸ்தூரிரங்கன் காலமானார்

Posted by lavanyan gunalan 3:16 PM, under | No comments

தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும் கணையாழி பத்திரிகையை தொடங்கி நடத்தியவருமான கஸ்தூரிரங்கன் இன்று (04-05-11) சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை இயற்கை எய்தினார். அவருக்கு வயது 78.

பத்திரிகை வாழ்க்கையை புதுதில்லியில் தொடங்கிய கஸ்தூரிரங்கன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் புதுதில்லி நிருபராக பணியாற்றினார். அதன்பிறகு தினமணி நாளிதழின் ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாகச் செயல்பட்டார்.

புதுதில்லியில் இருக்கும்போது 1965ஆம் ஆண்டு கணையாழி பத்திரிகையை தொடங்கிய ரங்கன், ஒரு தீவிரமான இலக்கிய வாசகர். அதனால், தான் நடத்திவந்த பத்திரிகையில் தீவிர எழுத்தாளர்கள் எழுதவேண்டும் என்று விரும்பி பல எழுத்தாளர்களை கணையாழியில் பங்களிக்கச் செய்தார்.

அப்படி தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜெகந்நாதன், பாலகுமாரன்,இந்திரா பார்த்தசாரதி, சுஜாதா, க.நா.சுப்பிரமணியன், திருப்பூர் கிருஷ்ணன் என்று முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் பலர் கணையாழியில் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறார்கள்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளில் நாட்டம் கொண்டிருந்த ரங்கன் காந்தி மிஷன் என்றஅமைப்பைத் தொடங்கி, அதன் நிறுவன செலாளராகவும் இருந்தார் என்பது
குறிப்பிடத்தக்கது.
- சா.இலாகுபாரதி
- தெனாலி .காம்

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு