29 May 2011

காஃபி ஷாப் காதல்

Posted by lavanyan gunalan 1:52 PM, under | No comments

...இதற்குமுன்

காஃபி ஷாப்பில் காதலிக்காகக் காத்திருக்கிறான் காதலன்...

இரட்டை நபர் அமரும் இருக்கையில் ஒற்றை ஆளாய் காத்திருக்கிறான் காதலன். கட்ஷூ அணிந்த பணிப்பெண்களின் காலடி ஓசை பட்...பட்...பட்... என்று தேய்வதும் வளர்வதுமாக இருக்கிறது. காதலி இன்னும் வரவில்லையே என்று நுழைவாயிலை வெறித்துப் பார்த்துக்கொண்டு இருந்தவன் காதில், ’மே ஐ ஃஹெல்ப் யூ சார்’ -_ குல்ஃபி ஐஸ் கடித்துத் தின்றதுமாதிரி ஒரு குரல் காதில் விழுந்ததும் சட்டென்று திரும்பி, ‘நோ தாங்ஸ். ஐயாம் வெய்டிங் ஃபார் மை கேர்ள் ஃப்ரெண்ட். ஸோ அவங்க வந்தபிறகு ஆடர்பண்றனே. டோண்ட் மிஸ்டேக் மீ மிஸ்...’ என்று இழுத்தான். ’மிஸ் கவிதா’ என்று தன் பெயர் சொல்லிவிட்டு நகர்ந்தாள் பணிப்பெண்.

’ச்சே ஆசை ஆசையாக சீக்கிரம் வந்தும் இவளைக் காணோமே. சினிமாக்குவேற நேரமாச்சு. ஃப்ச். இந்தப் பொண்ணுங்களே இப்படிதான். காதலிக்கிறவரைக்கும் அவளுங்க நம்ம பின்னாடி சுத்துவாளுங்க. காதல் சொன்னபிறகு அவளுங்க பின்னாடி நம்மளை சுத்தவிடுவாளுங்க... இதுதான் இந்தப் பொண்ணுங்களோட மெண்டாலிட்டியே...’ நூறு காதலை பார்த்தது மாதிரி புலம்பினான்.

’அவ வர்ற வரைக்கும் என்ன பண்றது...’ யோசித்துக்கொண்டிருந்தவன், சட்டென்று பையிலிருந்து லேப்டாப் எடுத்து திறந்து சுற்றிலும் பார்த்தான். கவிதா வேறொரு டேபிளை கவனித்துக்கொண்டு இருந்தாள்.

’எக்ஸ் க்யூஸ் மீ மிஸ் காவிதா’ - அருகில் வந்தவள், ’வாட் யூ நீட் சார்’ என்றாள் தன்மையாக... ‘இல்லை இங்க வைஃபை இருக்கா’ கொஞ்சம் நெட் யூஸ் பண்ணனும்... ’ஓ இருக்கே... நீங்க தாராளமா யூஸ் பண்ணிக்கலாம்’ ‘தேங்ஸ்’ என்றதும் நகர்ந்தவளை அழைத்து, ‘கப் ஆஃப் காஃபி ப்ளீஸ்’ என்று ஜொள் வடித்துவிட்டு, ஃபேஸ்புக்கில் மேயத் தொடங்கிவிட்டான். காஃபி வந்தது... காதலியும் வந்துவிட்டாள்.



’ஏய் எங்கயா போனே... உனக்காக எவ்வளோ நேரம் வெயிட் பண்றேன் தெரியுமா...’ என்று சொல்லிக்கொண்டிருந்தவன், அவள் காதோரம் வந்து, ‘நீ இன்னும் கொஞ்சம் லேட்டா வந்திருந்தேன்னா இந்தக் கவிதாவை கரெக்ட் பண்ணியிருப்பேன்’ என்றான்.

’அடப்பாவி உன்னைக் கொல்லாம விடமாட்டேன்...’

காஃபி ஷாப் காதல் ஷாப்பாக மாறிப்போனது!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு