28 May 2011

சங்கீதா - கிரிஷ் காதல் கதை

Posted by Show Now 6:48 PM, under | No comments


நான்கு பொண்ணுகளை சைட் அடி... மூணு பொண்ணுகளை ஃபாலோ பண்ணு... ரெண்டு பேரைக் காதலி... ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணு! இந்த ‘பொன்’மொழியைத் தாண்டி வராத இளைஞனே இருக்கமுடியாது. நான் வேறு ரகம்! நாலு என்ன நாலு என்று எல்லாப் பெண்களையுமே சைட் அடிச்சேன்... காதலிச்சேன்! ஆனா, அதெல்லாம் காதல் இல்லை, வெறும் கவர்ச்சிதான்னு தெரிஞ்சதும் சைலன்டா ஒதுங்கிட்டேன்! வாழ்க்கையிலே கவனம் செலுத்தத் தொடங்கிட்டேன்.

பாட்டுப் பாடுறதுக்காக சினிமாவுக்கு வந்தபிறகு, 2008 மார்ச்சில் நடந்த விஜய் டிவி அவார்ட் பங்ஷன்லே கலந்துக்கிட்டேன். எனக்கு அவார்ட் அறிவிச்சு இருந்தாங்க. விருது வாங்குறதுக்காகக் காத்திருந்தேன். என் பெயரை மைக்ல சொன்னதும் விறுவிறுன்னு ஸ்டேஜுக்கு போனேன். அவார்ட் கொடுத்தது யாருன்னு நினைக்கிறீங்க சாட்சாத் சங்கீதா. ஹலோ சொல்லி கை கொடுத்தேன். ‘உங்க பாட்டை கேட்டிருக்கேன் ஆனா, உங்களை இப்பத்தான் பாக்குறேன்’னு சொன்னாங்க. நானும் அவங்களை சினிமாவுலேதான் பாத்திருக்கேன். ஆனா, அவங்க சொன்ன வார்த்தை நல்ல மரியாதையை அவங்க மேல ஏற்படுத்துச்சு. விருது கிடைச்ச சந்தோஷத்தை இரட்டிப்பாக்கியது சங்கீதா கையால் அதை வாங்கியதுதான்!

விஜய் அவார்ட்ஸுக்குப் பிறகு நானும் சங்கீதாவும் ஒரு டின்னர்லே சந்திச்சோம். ஹாய் சொன்னோம். செல் நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம். விருந்து நடந்தது. அவங்களைப் பத்தி நானும், என்னைப் பத்தி அவங்களும் தெரிஞ்சுக்கிட்டோம். சகஜமா ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பேச ஆரம்பிச்சோம். எனக்கு அவங்களை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அவங்களுக்கு என்னைப் பிடிச்சிருக்கான்னு எனக்குத் தெரியலை. ஆனா, பிடிக்காமே எப்படி ஃப்ரீயா பழகுவாங்கன்னு யோசிச்சேன். இன்னொண்ணும் தோணுச்சு. இது காதலா... இல்லை டீப்பான ஃப்ரெண்ட்ஷிப்பா..? ரெண்டாவது சந்திப்புலேயே என்னாலே அதை ஜட்ஜ்பண்ண முடியலே.

போன்லே பேச ஆரம்பிச்-சோம். பேச ஆரம்பிச்சோம்ங்கிறதைவிட பேசிட்டே இருந்தோம்னுதான் சொல்லணும். ஒரு நாள் ஷாப்பிங் போலாம்னு முடிவு பண்ணி ரெண்டு பேரும் மீட்பண்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கிட்டோம். இப்ப சங்கீதா இன்னும் இயல்பா பழகினாங்க. என் மனசுலே இது காதல் ‘சரிகமபதநி’யா இருக்குமோன்னு தோணுச்சு. ஆனா, காதலைச் சொல்லத் தயங்கினேன். ஏன்னா, ‘ஃப்ரெண்ட்லியா பழகுறோம்; இவன் இப்படி பேசிட்டானே’ன்னு அவங்க ஃபீல் பண்ணக் கூடாதேன்னு நினைச்சேன். ஆனா, அவங்க என்னை ஃபீல் பண்ணவெச்சுட்டாங்க.

‘கிரிஷ், உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. நான் உங்களை காதலிக்கிறேன். நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க...’னு கேட்டாங்க. நான் என்ன பதில் சொல்றது. எதை சொல்லணும்னு நினைச்சிருந்தேனோ அதை அவங்களே சொன்னதும் ஒரு நிமிஷம் என்ன பேசுறதுன்னு தெரியலை. அமைதியா இருந்தேன். ‘கிரிஷ்...’ மறுபடியும் சங்கீதா குரல் கேட்டபிறகுதான் நினைவு வந்தது. ‘உங்க மனசுல இருந்ததை நீங்க சொல்லிட்டீங்க. என் மனசுல இருக்குறதை நான் சொல்ல வேணாமா’னு கேட்டதும் அமைதியாகிட்டாங்க. அதிர்ச்சி கொடுத்தது போதும்னு உண்மையை சொல்லிட்டேன். ‘எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. நானும் உங்களை காதலிக்கிறேன். கல்யாணம் பண்ணிக்கலாம்.’ ரெண்டு பேருக்கும் ஒரே மனசு, ஒரே நினைப்புன்னு சொல்லி ரெண்டு பேருமே சிரிச்சோம். காதல் மணியடிச்சது.

காதலுக்கு ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தா போதும். ஆனா, கல்யாணத்துக்கு..? ரெண்டு வீட்டுக்கும் எங்க காதல் தெரிஞ்சது. ரெண்டு பக்கத்திலே இருந்தும் நிறைய எதிர்ப்பு. ஆனா, அப்பவும் நாங்க காதலிச்சிட்டுதான் இருந்தோம். கல்யாணம் பண்ணிக்கிற முடிவுலேயும் எந்த மாற்றமும் இல்லே. கொஞ்சம் கொஞ்சமா எங்க பெற்றோரை நான் சமாதானப்படுத்தினேன். அவங்க பக்கத்திலே சங்கீதா சமாதானம் பண்ணாங்க. ஒருநாள் ரெண்டு வீட்டு பெற்றோரையும் சந்திக்க வெச்சோம். எதிரும் புதிருமா இருந்தவங்க எப்படி அவ்வளவு கலகலப்பா பேசினாங்கன்னு எங்களுக்கே தெரியலை. கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டாங்க.

2009 பிப்ரவரி 1 கல்யாணம். சங்கீதா கழுத்துலே தாலி கட்டினேன். எங்க காதல் விஜய் அவார்ட்ஸ்லே பூத்து, ஷாப்பிங்லே காய்த்து, கல்யாணத்துலே கனிந்த கதை இப்படிதான்.

நம் தோழி, பிப்ரவரி - 2011

-சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு