20 May 2011

பிங்க் உதடு

Posted by Gunalan Lavanyan 9:00 AM, under | No comments


காதல் பருவம்:

காதலின் பல்வேறு பரிமாணங்களை இந்தத் தொடரில் பார்க்கப் போகிறோம். காதலுக்கு முன் நடக்கும் ஆண்-பெண் அறிமுகம், காதல் பகிர்வு, காதல் உணர்வுகள், காதலருக்காகக் காத்திருத்தல், காதல் சண்டை, காதல் கனிந்து கல்யாணமாதல் என்று காதலின் ஒவ்வொரு பருவத்தையும் உணர்வோம். அத்தனைப் பருவங்களையும் காட்சிகளாக எழுத்தில் வடிக்கப்போகிறேன். உங்கள் ஆதரவையும் ஆதங்கத்தையும் பின்னூட்டம் இடுங்கள். வரவேற்கிறேன்...

மிகுந்த அன்புடன்

சா.இலாகுபாரதி

காத்திருப்பு

தினமும் ஏதாவது ஒரு பெண்கள் கல்லூரி வாசலிலாவது யாராவது ஒரு ஆண்மகன் காத்திருக்கிறான். தன் காதலைச் சொல்வதற்காகவோ அல்லது ஒரு காதல் துணையைத் தேடியோ...

தினமும் ஏதாவது ஒரு கோயிலில் யாராவது ஒரு பெண்மகள் தன் காதலன் வரும்வரை நேரத்தைக் கடத்த ஆலயத்தை திரும்பத் திரும்ப வலம் வந்துகொண்டு இருக்கிறாள்.பேருந்து நிலையம், ரயில் நிலையம், காஃபி டே, பிஸா கார்னர், ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர், கடற்கரை, பூங்கா, தெருமுனை, டீக்கடை பெஞ்ச் என்று தினமும் யாராவது ஒருவராவது காதலிக்காகவோ காதலனுக்காகவோ காத்துக்கொண்டு இருக்கிறார்கள். வழிமேல் விழி வைத்து.

காதல் செய்ய அப்ளிகேஷன் போடுவதற்கு முன்னும் பின்னும் காத்திருப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. காதலிக்காக/காதலனுக்காக காத்திருப்பது யாருக்கும் அலுப்பதில்லை. காதல் அவர்களை அப்படி மாற்றுகிறது/மாற்றிவிடுகிறது. ஏவாளை கரெக்ட் பண்ணுகிறவரை ஆதாமும் காத்திருந்துதான் அவளை கரெக்ட் பண்ணியதாகக் பழங்கதைகள் இயம்புகின்றன. ஆக, ஆதாம் - ஏவாளே காத்திருந்துதான் காதல் ஆப்பிளை கடித்திருக்கிறார்கள். அப்படி இருக்க இன்று காதலிக்கும் சுப்பனும் சுப்புலட்சுமியும் எம்மாத்திரம். ‘காத்திருத்தல் என்தலைக் கடனே’ என்று காக்க வேண்டியதுதான்! காதல் வேண்டும் அல்லவா?! அப்போது காத்திருந்துதான் தீரவேண்டும்.

காதலில் காத்திருத்தல் சுகம். அது காமத்துக்கு முந்தைய காதலில்தான் என்கின்றனர் சிலர். ஆனால், காமத்துக்கு முன்னும் பின்னும் மெய்யாலுமே காதலித்திருந்தால்/காதலித்துக்கொண்டு இருந்தால் காத்திருத்தல் எப்போதும் சுகம்தான்! இதை அக்மார்க் காதலர் அறிவர்.

காதலில் காத்திருத்தல் சுகம். அது காமத்துக்கு முந்தைய காதலில்தான் என்கின்றனர் சிலர். ஆனால், காமத்துக்கு முன்னும் பின்னும் மெய்யாலுமே காதலித்திருந்தால்/காதலித்துக்கொண்டு இருந்தால் காத்திருத்தல் எப்போதும் சுகம்தான்! இதை அக்மார்க் காதலர் அறிவர்.

சரி, இந்த கணினி (கலி)யுகத்தில் காத்திருக்கும்போது காதலன்/காதலி என்ன செய்துகொண்டு இருப்பார்கள்?

கதைக்கு வருவோம்.

ஒரு ரயில் சந்திப்பில் காதலனுக்காக காதலி காத்துக்கொண்டு இருக்கிறாள்... - இது ஒரு காதல்.

காஃபி ஷாப் ஒன்றில் காதலிக்காக காத்துக்கொண்டு இருக்கிறான் காதலன்... - மற்றுமொரு காதல்.

ரயில் சந்திப்பில் காதலனுக்காக காத்திருக்கும் காதலியிடம் வருவோம்...மாலை நேரம். சில நிமிடங்களுக்கு ஒருதரம் ரயில்கள் வருவதும் போவதுமான நெருக்கடியான சந்திப்பு அது. பயணிகள் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு ரயில் வந்து நிற்கிறது... டொய்ன்ன்ன்... எதிர் டிராக்கில் ஒரு ரயில் புறப்பட எத்தனிக்கிறது... ப்ப்ப்ப்ப்ப்ப்பா...ம்... ப்ளாட்பாரத்தில் இருக்கும் பயணிகள் இருக்கையில் காதலி காத்திருக்கிறாள்... ஐபாடிலிருந்து காதல் பாடல்களை காதில் குடித்துக்கொண்டே, வாயில் மெரிண்டா ஊற்றிக்கொண்டு இருக்கிறாள்... மடியில் தபூசங்கர் தவழ்ந்துகொண்டு இருக்கிறார்... ‘வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்”. டைட் ஜீன்ஸ் பேண்ட்டும் ஸ்லீவ்லெஸும் போட்டியிருக்கும் அவளைக் கேட்டால் என்ன தருவாள்! பக்கங்கள் புரளுகின்றன... ஒவ்வொரு கவிதையையும் மெல்ல மெல்ல விழுங்கி இமைக்கின்றன அவள் விழிகள். பிங்க் நிற உதட்டில் ரோஜா புன்னகை! இடது கையை வளைத்து மணி பார்க்கிறாள். சரியாக 6.30.

‘’இன்னும் இவன் வராம எங்க போயிட்டான்... இடியட்... இன்னைக்கு வரட்டும் உண்டு இல்லைன்னு பண்ணிட்றேன்... எவ்ளோ நேரம் வெயிட் பண்றது... ப்ப்ச்...’’ உதட்டிலிருந்து மெரிண்டா சிந்துகிறது.

வொயிட் கலர்
கர்சீப் எடுத்து
ஒற்றிக்கொள்கிறாள்...
கர்சீப்பில் படிந்திருக்கிறது
பிங்க் உதடு!

காஃபி ஷாப்பில் காதலிக்காக காத்திருக்கிறான் காதலன்...

தொடர்ச்சி...

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு