28 May 2011

தோனியால் சென்னைக்கு மீண்டும் கோப்பை - எக்ஸ்க்ளூஸிவ் படங்களுடன்...

Posted by lavanyan gunalan 11:44 PM, under | No comments


இந்தியன் பிரீமியர் லீக்கின் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது லீக் போட்டியின் கோப்பையைக் கைப்பற்றியது. இதன்மூலம் தொடர்ந்து இரு முறை ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றிய அணி என்ற பெருமையை CSK பெற்றிருக்கிறது. இந்திய அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையிலான CSK சனி (மே 28) அன்று நடைபெற்ற ஐபிஎல் இறுப்போட்டியில் 205 ரன்களைக் குவித்து அபாரமாக வெற்றிபெற்றது.

முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதைத் தொடர்ந்து துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய தமிழக வீரர் முரளி விஜயும் மைக்கேல் ஹஸ்ஸியும் ஜோடி சேர்ந்து அபாராமாக பவுண்ட்ரிகளாக அடித்து ரன் குவித்தனர். விஜய் 95 ரன்களும், ஹஸ்ஸி 63 ரன்களும் எடுத்து சென்னையின் வெற்றியை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தோனி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார், ரெய்னா, மார்கல் உள்ளிட்டவர்களும் ஒற்றை இலக்க ரன்களை எடுத்து அவுட் ஆகி மொத்தம் 205 ரன்கள் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.

டிவெண்டி 20 உலகக் கோப்பையில் தொடங்கிய தோனியின் வெற்றி உலக்கோப்பை, ஐபிஎல் கோப்பை என்று தொடர்ந்து கோப்பைகளையும் வெற்றிகளையும் குவித்து வருகிறார். இதன்மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய அணிக்கு சக்தி வாய்ந்த கேப்டனாக தோனி தலைமைதாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 16 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி பெங்களூர் அணிக்கு தமிழக வீரர் அஷ்வின் பெரும் நெருக்கடி கொடுத்தார். இந்த ஐபிஎல் கோப்பையைக் சென்னை கைப்பற்றுவதற்கு விஜய், அஷ்வின் இருவரும் முக்கியமான பங்கு வகித்தது தமிழக கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

எக்ஸ்க்ளூஸிவ் படங்கள்









0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு