10 May 2011

கைமாறும் ஸ்கைப்

Posted by lavanyan gunalan 8:30 PM, under | No comments

இணையதளத்தில் தீவிரமாகச் சுற்றிவருபவர்கள் ஸ்கைப் சேவையைப் பயன்படுத்தாமல் இருக்கமாட்டார்கள். ஸ்கைப் வழங்கி வரும் கவர்ச்சிகரமான பல சேவைகள் பலரையும் கவர்ந்தவை. ஸ்கைப் மூலம் வாய்ஸ் சேட்டிங், வீடியோ சாட்டிங் என பல சேவைகளை இலவசமாகப் பெறமுடிவதால், பலரும் ஸ்கைப்பை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.

2003-ம் ஆண்டு நிக்லஸ் ஜென்ஸ்டீரோம் மற்றும் ஜானஸ் பிரிஸால் உருவாக்கப்பட்ட ஸ்கைப், ஆரம்பக்காலத்தில் பைல் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கும், அதன்பிறகு மியூஸிக் சம்பந்தப்பட்ட சேவைகளைப் பெறுவதற்கும் பயன்பட்டு வந்தது. நாளடைவில் வாய்ஸ் சேட்டிங், வீடியோ சாட்டிங் என்று பரிணாமங்களைப் பெற்று வளர்ந்தது. இப்போது ஸ்கைப் மிகச்சிறந்த இணையதள தொலைபேசி சேவை வழங்கும் தொழில்நுட்பமாக நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.

ஒருகாலத்தில் ஸ்கைப்பை ஒரே நிறுவனம் மட்டுமே ஆட்சி செய்து வந்தது. 2005-ம் ஆண்டு 2.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ebay ஸ்கைப்பை வாங்கியது. 2009-ம் ஆண்டு வரை ஸ்கைப்பின் ஒரே தலைவராக இருந்த ebay வர்த்தக நிறுவனம், தன்னிடம் இருந்த நூறு சதவீத பங்குகளில் 70 சதவீத பங்குகளை சில்வர் லேக், ஆன்ட்ரிசென் ஹோரோவிட்ஜிற்கு 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்றுவிட்டது. இதனால், 3 நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் வந்த ஸ்கைப், இப்போது மிகுந்த கடன் சுமைக்கு உள்ளாகி தத்தளித்துவருகிறது. ஸ்கைப்பின் மொத்தக் கடன் சுமை, 8.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதனால், ஸ்கைப்பின் பங்குகளை வைத்திருப்பவர்கள் அவற்றை விற்கத் தொடங்கிவிட்டனர். ஸ்கைப்பின் இந்தப் போதாத காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இணைய உலகில் ஜாம்பவானாகத் திகழ்ந்துவரும் பல நிறுவனங்கள், ஸ்கைப்பை வாங்கி தங்கள் பைக்குள் போட்டுக்கொள்ள போட்டிப் போடுகின்றன.

இந்தப் போட்டியில் மூன்று நிறுவனங்கள் முன்னணி வகிக்கின்றன. அதில் பில்கேட்ஸின் மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், கூகுள் முக்கியமானவை. இந்த மூன்று நிறுவனங்களில் மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் மட்டும் 7-லிருந்து 8 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஸ்கைப்பை விலைபேசி வருகிறது. மற்ற இரண்டு நிறுவனங்களும் இந்த விலைக்கு ஸ்கைப் தகுதியில்லை என்பதால் பேரம் பேசாமல் ஒதுங்கி நிற்கின்றன. ஆனால், இணையதள உலகில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால் வர்த்தகம் நடந்த பின்னரே ஸ்கைப் மைக்ரோசாஃப்ட் பையில் விழுந்ததா அல்லது கூகுள் வாயில் விழுந்ததா என்பதை முடிவு செய்யமுடியும்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு