06 May 2011

சொல்லுங்கள் வெல்லுங்கள்!

Posted by lavanyan gunalan 11:00 PM, under | No comments


கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சொல்லுங்கள் வெல்லுங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் பிரியா பத்திரிகையாளர்களிடம் ரொம்ப ஃபிரண்ட்லியாக பேசக்கூடியவர்; அதனால், பத்திரியாளர்கள் மத்தியில் பிரியாவுக்கு நல்ல மரியாதை! அதுமட்டுமல்ல. வேலையில் இருக்கும்போது எப்பவும் ஜாலியாக இருக்கக்கூடியவர். எல்லாரோடும் நட்பாகவே பழகுவதால் பிரியா மீது அனைவருக்கும் பிரியம் அதிகம்.

டிவி, சினிமா நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளினி, ப்யூடிசியன், மாடல், ரேடியோ ஜாக்கி, லைவ் ஸ்டேஜ் ஆன்கர் என்று பிரியாவுக்கு பல முகங்கள் உண்டு. ஃப்ரீயா இருப்பதே பிரியாவுக்கு பிடிக்காதாம்! அதனால்தான் நிறைய விஷயங்களை செய்கிறேன் என்று சொல்லும் பிரியா எஸ்.ஐ.இ.டி கல்லூரி மாணவி. காலேஜ் பற்றி பேசினால், நிறைய நினைவுகளை மலரவைக்கிறார்.

பிரியாவை பார்க்கவேண்டுமானால், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு சொல்லுங்கள் வெல்லுங்கள் நிகழ்ச்சியைப் பாருங்கள்...

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு