14 May 2011

பெட்ரோல் லிட்டர் 70 ரூபாய்: காங்கிரஸுக்கு எச்சரிக்கை மணி!

Posted by lavanyan gunalan 10:02 PM, under | 2 comments


ஏற்கெனவே ’மே 13க்குப் பிறகு என்ன நடக்கும்?’ என்ற தலைப்பில் பெட்ரோல் விலை உயர்வு பற்றி கட்டுரை வெளியிட்டு இருந்தோம். அது சனிக் கிழமை (மே 14) நள்ளிரவிலிருந்து பலிக்கிறது.

ஆம்! நம்முடைய வலைப்பதிவில் தெரிவித்திருந்தபடி பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதன்மூலம் பெட்ரோல் விலை 70 ரூபாய் நெருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்னும் 3 மாதங்களுக்குள் பெட்ரோல் விலை 70 ரூபாய் வரை உயர்த்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.


அரசு நிறுவனமாக எண்ணெய் நிறுவனங்கள் இருந்தவரை பெட்ரோல் விலை உயர்வு வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையோதான் உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஆண்டிலிருந்து இப்போது உயர்த்தப்படுகிற 5 ரூபாயையும் சேர்த்து ஒன்பதாவது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் முதலாளித்துவ மற்றும் பாசிஸக் கொள்கையால் இலங்கைத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ரத்த வெறியன் ராஜபக்‌ஷேவால் கொல்லப்பட்டனர். அதேபோல பெட்ரோல் நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்த்ததால் அடிக்கடி பெட்ரோல் விலை உயர்ந்து, விலைவாசி கிடுகிடுவென்று ஏறுகிறது. இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்கள் நடந்து முடிந்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள்.

ஆனால், அப்போதும் காங்கிரஸின் கொட்டம் அடங்குவதாகத் தெரியவில்லை. இளைஞர் காங்கிரஸுக்கு தலைமை தாங்கிவரும் ராகுல் காந்தி இந்தியா முழுக்க ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தப்போவதாகக் கூறிவருகிறார். ஆனால், மந்திய அரசில் நடக்கும் ஊழலை காங்கிரஸ் பொதுச் செயலாளரான ராகுல் காந்தியால் தடுக்கமுடியவில்லை. ஆனால், மாநிலங்களில் நடக்கும் ஊழலை தடுத்துவிடுவேன், மக்கள் பிரச்னைகளை தீர்த்துவிடுவேன் என்றெல்லாம் வாய்கிழியப் பேசித் திரிகிறார்.

தமிழ்நாட்டில் கனிமொழி போராட்டம் நடத்தி, சிறை சென்றது மாதிரி, உபியில் ராகுல் போராட்டம் நடத்தி சிறை செல்கிறார். வேடிக்கையாக இருக்கிறது. மத்தியில் பெரும் அரசு இயந்திரத்தை வைத்துக்கொண்டிருக்கும் ராகுலின் நாடகம் கேலிக்குறியதாக இருக்கிறது. இவ்வளவு பேசும் ராகுல் காந்தியால் மக்களுக்கு எதிராக நடக்கும் விலைவாசி ஏற்றம், பெட்ரோல் விலை உயர்வு, பெட்ரோலிய நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்ப்பு, ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல், இலங்கை கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொல்லப் படுவதையெல்லாம் தடுக்க முடிவில்லை. இதையெல்லாம் செய்து கிழிக்காத ராகுல் இந்தியாவை எப்படி ஊழலற்ற நாடாக மாற்றப்போகிறார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

இப்படி தொடர் பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்படுவது ராகுல்மாதிரி பெரும் பணக்காரர்கள் இல்லை என்பதால், இதையெல்லாம் காங்கிரஸும் ராகுலும் வேடிக்கைப் பார்க்கிறார்களா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், மத்தியில் தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வருவதால் மக்களால் எதையும் புடுங்க முடியாது என்று காங்கிரஸ் மனப்பால் குடித்துவருவதுதான்.

தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரங்களில் கைவைக்கும் வேலையை காங்கிரஸ் திட்டமிட்டு செய்துவருமேயானால், அடுத்து வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் இதர மாநிலத் தேர்தல்களிலும், தமிழகத்தில் திமுகவுக்கு நேர்ந்த கதிதான் காங்கிரஸுக்கும் நேரும் என்பதை அந்த கட்சி மறந்துவிடக்கூடாது.

அதேநேரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து சிறப்பாக செயல்பட்ட தானே தலைவன் தங்கபாலு மாதிரி, மத்தியில் இருக்கிற காங்கிரஸ் தலைமையும் இருந்துவிடக்கூடாது என்பதும்தான் தமிழகத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமைக்கு சொல்லும் பாடம். இதையும் மறந்துவிட்டால் காங்கிரஸுக்கு ஒரு முடிவுகட்ட இந்திய மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிடவில்லை.

2 comments:

// காங்கிரஸுக்கு ஒரு முடிவுகட்ட இந்திய மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை நான் மறந்துவிடவில்லை.//


இந்திய மக்களும் தயாரைத்தன் இருக்கிறார்கள். சமயம் இன்னும் வாய்க்கவில்லை.

அரசன் அன்று கொல்வான்
( காங். அரசு கொள்வது)

தெய்வம் நின்று கொல்லும்
( மக்கள் தேர்தலில் ஒட்டு போடுவது )

Post a Comment

கோப்பு

கோப்பு