07 December 2011

மதுர கீதமான கீதம் மதுரம்

Posted by lavanyan gunalan 3:10 PM, under | No comments


காற்றோடு கலந்துவரும் பனி மாதிரி இசையோடு கலந்துவிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்காகவே ஒரு இசை உற்சவம் நடந்தால் எப்படி இருக்கும்?! ராக சஞ்சாரத்தில் அந்த அரங்கமே லயித்து பிரமித்துப்போய்விடும் இல்லையா?! அப்படியொரு இசை நிகழ்ச்சியை ‘கீதம் மதுரம்’ என்ற பெயரில் ‘உத்சவ் மியூஸிக்’ அமைப்பு சென்னை பாரதிய வித்யாபவனில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸோடு இணைந்து நடத்தியது. நவம்பர் 17 மாலை 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி ரெண்டு மணிநேரம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. மார்கழி இசைத் திருவிழா களைகட்டுவதற்கு முன்பாகவே முழுக்க முழக்க 5 பெண் பாடகிகள், 4 பெண் வாத்தியக்காரர்களே நடத்திய இந்தக் கச்சேரியில் அன்&ப்ளக்டு பாடல்களாக பல்லவி ஒரு சரணம் என்று ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டும் பாலம் கட்டினார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் அவ்வளவு அப்ளாஸ். இசை ஞானமே இல்லாதவர்களுக்குக்கூட எம்.எஸ்.ஸின் பாடல்களைக் கேட்டால் இசையார்வம் பிறந்துவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி பெரிய உதாரணம்.

31 August 2011

ரஜினிக்கு பாட்ஷா: அஜீத்துக்கு மங்காத்தா

Posted by lavanyan gunalan 11:39 PM, under | No comments

வெங்கட்பிரபு - அஜீத் கூட்டணிக்கு 100/100 மார்க் போடலாம்! அஜீத்தின் 50வது படம் அவருடைய திரையுலக வாழ்க்கையில் பெரிய மாஸ்! ரஜினிக்கு ஒரு பாட்ஷா மாதிரி, அஜீத்துக்கு மங்காத்தா!

15 August 2011

இலங்கையின் முக்கியமான ஆவணங்கள்: ஆர்.ஆர்.சீனிவாசன்

Posted by lavanyan gunalan 7:21 AM, under | No commentsமைல்கல்: 4

தெரு புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்: 1"மனிதர்களின் உணர்ச்சிகளை
அப்படியே படப்பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு லைட்டிங் மற்றும்
போட்டோகிராஃபிக்கு உரிய
மற்ற விதிகள் தேவையற்றவை.'
                                                                     - பிரிசோன்


ஆர்.ஆர்.சீனிவாசன்... தெரு புகைப்படக் கலைஞர் (Street Photographer). இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படக் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். 'காஞ்சனை திரைப்பட இயக்கம்' ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில் 17 அப்பாவி தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவராக வலம் வரும் இவர், தனது பயணத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

படப் பிடிப்பில் சீனிவாசன்

11 August 2011

கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை

Posted by lavanyan gunalan 10:13 PM, under | No comments


மைல்கல்: 3

அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 2

தொடர்ச்சி...


மீண்டும் அழகு சம்பந்தமா படிக்கத் தொடங்கினேன். நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸ் படிச்சேன். ஒவ்வொரு இடத்தில் படிக்கும்போதும் நிறைய ஐடியா வந்தது. லண்டனுக்குப் போய் 'அட்வான்ஸ்ட் சி அண்ட் ஜி பியூட்டி தெரபி - ஹேர் டிரஸ்சிங்' பி.ஜி. டிப்ளமா படித்தேன். சென்னையில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பிராக்டிக்கல், தியரி எல்லாம் முடிந்தது. பரீட்சை எழுதினேன். சர்டிஃபிகேட் வாங்கினேன். லண்டன் போய் வந்ததில் இன்னும் கிளாரிட்டி கிடைத்தது. இப்போ அதே கோர்ஸ் எங்க அகாடமியில் பாடமாக இருக்கிறது. நான் என்ன படித்தேனோ, அதையே என் மாணவர்களும் படிக்கிறார்கள். இங்கிலாந்து பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர், தாய்லாந்து, பிரேசில் என என் பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.

இப்படி உலகெங்கும் அழகுக் கலை சம்பந்தமாகவும் அழகுபடுத்துவது சம்பந்தமாகவும் என்னவெல்லாம் படிப்பு இருக்கிறது; என்னவெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுக்கின்றன என்று தாகமெடுத்து தேடினேன்; தேடிக்கொண்டே இருக்கிறேன்.

கத்தரிக்கோலும் சீப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் 'ஹேர் கட்டிங்' செய்யமுடியும் என்று இங்கு நினைக்கிறார்கள். அதிலும் தொழில்நுட்பம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; புதிய உத்திகள் தேவை இருக்கிறது. அதையெல்லாம் படிக்க வேண்டும்; பயிற்சி எடுக்க வேண்டும் என்ற தாகம் தனியாமல் இருக்க வேண்டும். அந்த தாகம் இப்போதுகூட என்னிடம் அப்படியே இருக்கிறது.

நான் என்ன கற்றுக்கொள்கிறேனோ, அதையெல்லாம் என் மாணவர்களுக்கும் கற்பிக்கிறேன். இப்படி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று நிறைய செமினார் வகுப்புகள் நடத்தியதில் நல்ல வரவேற்பு. இலங்கையில் சற்று அதிகம். அங்குதான் ஒரே நேரத்தில் 600 பேர் செமினார் பயிற்சி வகுப்பில் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அதேவேளையில் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வந்து கற்றுக்கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவதை அந்த செமினார் வகுப்புகளில் என்னால் பார்க்க முடிந்தது.

அழகுக் கலைக்கு வெளிநாடுகளில் இல்லாத பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் அப்படி என்ன இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இருக்கிறது. இந்தியாவில் மூலிகை இருக்கிறது. வெளிநாடுகளில் கெமிக்கல்களில் இருந்துதான் அழகு சாதனப் பொருட்கள் தயாராகின்றன. ஆனால், மூலிகையிலிருந்து நிறைய அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி அழகு படுத்துவதால், அழகுபடுத்திக்கொள்வதால் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், நிறைய நன்மைகள்தான் கிடைக்கின்றன.


அழகுக்கான ஆரோக்கியமான பாதை இந்தியாவில் இருப்பதால், நிறைய வெளிநாட்டினர் இங்கு வந்து அழகுக் கலையைப் படிக்கிறார்கள். இப்படி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று எல்லா கண்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள்.

இந்தத் துறையில் ஆர்வத்துடன் சேர்ந்து கற்கும் மாணவர்கள் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் வேலையில் முழு திருப்தியும் இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்களுடைய வாழ்க்கையை சாதகமான சூழலுக்கு மாற்றக்கூடிய வல்லமை இந்தத் துறைக்கு உண்டு. இதில், எனக்கு நேரடி அனுபவம் நிறைய இருக்கிறது.

அட்வான்ஸ்டான 'மேக்கப்' எல்லாம் இப்பதான் வந்தது. அந்தக் காலத்தில் மருதாணியைத்தான் லிப்ஸ்டிக்காக உபயோகித்தார்கள். அதேமாதிரி அவுரி விதையை அரைத்து அதிலிருந்து வருகிற கலரை ஹேர் கலராக பூசினார்கள். குங்குமப் பூவை அரைத்து உடல் முழுக்கத் தடவினார்கள். அதிலிருந்து வெளிப்படும் நிறங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், நீண்ட நாளைக்கு நீடிக்காது. குளிக்கக் குளிக்க காணாமல் போய்விடும்.

எந்த மேக்கப் போட்டாலும் அதற்கான தேவை முடிந்ததும் அதைக் கலைத்துவிடணும். குறைந்தபட்சம் தூங்கப்போகிற நேரத்திலாவது முகத்தை கழுவிட்டுவிட்டு படுக்கணும். இல்லாமல்போனால் பக்கவிளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாளாக நாளாக மேக்கப் ரத்தத்தில் கலக்கும்.

மேக்கப் போடும்போது நல்ல பிராண்ட்டட் அயிட்டமா யூஸ் பண்ணி மேக்கப் போடணும். விலை கம்மியாக கிடைக்கிறது; ரொம்ப சீப்பா பிளாட்பாரத்தில் வாங்கிடலாம் என்று நினைத்து தப்பு கணக்குப் போடக்கூடாது. அப்புறம் இன்னும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஆகிடும். இதெல்லாம், அழகுக் கலையில் அடிப்படையில் விஷயங்களுள்.

மத்திய தொழில் துறை அமைச்சகத்துக்காக அழகு சம்பந்தப்பட்ட 9 புத்தகங்களை தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்திலேயும் அழகு தொடர்பான ஒவ்வொரு சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லியிருக்கோம். ஹேர் கலரிங், ஹேர் கட்டிங், ஸ்பா, அரோமா இப்படி எல்லாமே இருக்கு. நல்லாவும் இருக்கு. அரசு இதை அங்கீகரித்து இருப்பதில் மகிழ்ச்சி.

அழகுக் கலைப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதற்குரிய பாடங்களைப் படிப்பதோடு, வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும்; எப்படி பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். எல்லா மொழி வாடிக்கையாளர்களிடமும் சுலபமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு, ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் படிக்கும்போதெல்லாம் இந்த அளவுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. இப்போது நிறைய வசதி - வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வகை பாடத்திட்டங்களில் ஒரு பிரிவாக, 'கலர் காமினி' என்று ஒரு கோர்ஸ். அதில் உயரம் குறைந்தவர்களுக்கு எந்தக் கலர், உயரமானவர்களுக்கு எந்தக் கலர் செட்டாகும்; கல்யாணப் பெண்ணுக்கு எந்த மாதிரி மேக்கப் போடணும், எந்த டிரஸ் போட்டா மேட்சாகும். வெயில் காலம், மழைக் காலம், குளிர்காலம்... இப்படி எந்தெந்தக் காலங்களில் எந்த மாதிரியான கலர் டிரஸ் போடணும். கூல் கலர்ஸ்னா என்ன..? வார்ம் கலர்ஸ்னா என்ன..? என்பதையெல்லாம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

அதேமாதிரி மேக்கப்பில் நிறைய வெரைட்டி இருக்கு. டே மேக்கப், ஈவினிங் மேக்கப், சினிமா மேக்கப், போட்டோகிராஃபி மேக்கப். இந்த மேக்கப்பிலே எல்லா ஷேப்பும் இருக்கு. ஆனால், ஓவல் ஷேப்தான் பெஸ்ட். டைமண்ட் ஷேப்பைக்கூட ஓவலா மாற்றமுடியும். இப்படி மேக்கப்லேயே நிறைய டைப்ஸ். ஆயில் மேக்கப் எப்படி பண்ணணும்; மேட் பினிஷிங், ஹை டெஃபினிஷியன் மேக்கப், கேமரா மேக்கப், லைட் மேக்கப் (வெயிட்டே இல்லாம எப்படி மேக்கப் பண்றது) எப்படி பண்ணணும்... இப்படி எல்லா வகையான மேக்கப்பையும் கற்றுகொள்ளும் வாய்ப்பு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன.

அதேபோல், வேலை உத்தரவாதமும் உண்டு. எளிதில் தனியாக தொழில் தொடங்கி வெற்றி பெறவும் முடியும். இந்தத் துறையில் இவ்வளவுதான் படிப்புன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நம்மை நாமே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இந்தக்காலத்தில் ஸ்கின் அண்ட் ஹேர் பிராப்ளம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால், எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக அணுகவேண்டிய தேவை அதிகமாகிவிட்டது. அதேநேரத்தில் பொருட்களும் இயந்திரங்களும் முன்னேற்றம் அடைந்துகொண்டே இருக்கு. அதனால், பியூட்டிஷியன் எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டும்.

இந்தத் துறைக்கு வருகிறவர்கள், சும்மா யாரிடமாவது கற்றுக்கொண்டோமா கடையை விரித்தோமா என்று இல்லாமல், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக் கலை நிபுணராக வலம் வரலாம்."

கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை என்பதில் சந்தேகம் இல்லை!

வசுந்தராவின் வலைதளம்

- சா.இலாகுபாரதி

அடுத்த மைல்கல் புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்

10 August 2011

அழகுக் கலை

Posted by lavanyan gunalan 11:05 PM, under | No comments
அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 1முகம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க, ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளப்பாகும்.
- அழகுக் குறிப்பு


வசுந்தரா. அழகுக் கலை நிபுணர். மூலிகைப் பொருட்களின் மூலம் அழகு சிகிச்சை அளிப்பதில் கைத்தேர்ந்தவர். சன் டி.வி.யின் 'மலரும் மொட்டும்', 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சிகளின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். அழகுக் கலையின் நுணுக்கங்களை பல்வேறு நாடுகளுக்கும் சென்று அறிந்து வருவதில் ஆர்வம் உடையவர். ஒருபுறம் பியூட்டி கிளினிக்கை நடத்திக் கொண்டு, மறுபுறம் தனது அகாடெமி மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களை அழகுக் கலை நிபுணர்களாக உருவாக்கி வருவது அழகுக் கலைத் துறையில் ஒரு மைல்கல். இதோ தனது அனுபவங்கள் மூலமாக அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறார் வசுந்தரா...


07 August 2011

நல்ல சமையல்காரனாக என்ன செய்ய வேண்டும்? - கற்று தருகிறார் செஃப் ஜேக்கப்

Posted by lavanyan gunalan 6:18 PM, under | No comments

மைல்கல்: 2

செஃப் ஜேக்கப்: 3


என்னோட தலைமையில நிறைய ரெஸ்டாரெண்ட்ஸுக்கு கிச்சன் கசல்டன்சி கொடுத்திட்டு இருக்கேன். என்ன மெனு போடலாம்... எந்தமாதிரி ரெசிபீஸ் பண்ணலாம்னு கசல்டேஷன் கொடுக்குறோம். கிருஷ்ணா ஸ்வீட்ஸோட ரசம் ரெஸ்டாரன்ட் சென்னையில மொத்தம் மூணு இருக்கு. நான் பண்ண கொங்கு நாட்டு ஆராய்ச்சியைதான் 'ரசம்'ங்கிற பேர்லேயே கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநர் முரளி ரெஸ்டாரெண்டா கொண்டுவந்தார். இதுக்கு அசாதாரணமான துணிச்சல் வேணும். ஊரே இட்லி, தோசைன்னு சுத்திட்டு இருக்கும்போது 'ரசம்'னு பேர் வெச்சி அதை வெற்றியடைய வைக்கிறதுங்கிறது சாதாரண காரியம் இல்லை. இது அவர் பண்றதுக்குக் காரணம், மைசூர்பாவையே மாத்தியமைச்ச பரம்பரை இல்லையா அவர்..? அந்தப் பாரம்பரியம் உள்ளவர் இதைப் பண்றது பொருத்தமான விஷயமாகவும் இருக்கு.

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளியுடன்...

நாகம்மா: ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்

Posted by lavanyan gunalan 5:01 PM, under | No comments

அமானுஷ்ய கதைகளா... கூப்பிடுங்கள் ஜெரால்டை என்று சொல்லும் அளவுக்கு சின்னத்திரை வட்டாரத்தில் பேர் எடுத்திருக்கிறார் ஜெரால்டு! தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எல்லா மொழி பேய்களையும் டீல் பண்ணும் அமானுஷ்ய ஜெரால்டை சன் டி.வி. நாகம்மா ஷூட்டிங்கில் சந்தித்தபோது மந்திர பூஜைக்கான ஏற்பாடுகளில் இருந்தார்.

04 August 2011

சங்க கால சமையல்: செஃப் ஜேக்கப்

Posted by lavanyan gunalan 10:08 PM, under | No commentsமைல்கல்: 2

செஃப் ஜேக்கப்: 2


தொடர்ச்சி...

இருபது வருஷத்துக்கு முன்னாடிதான் செட்டிநாட்டு சமையலை ஊக்கப்படுத்தினாங்க. இன்னைக்கு 3 நட்சத்திர ஹோட்டலில் இருந்து 5 நட்சத்திர ஹோட்டல்கள் வரைக்கும் செட்டிநாட்டு சமையல் வந்திருக்கு. லண்டனில் இரண்டாவது இடத்தில் செட்டிநாட்டு சமையல் இருக்கு. அதேமாதிரி தமிழ்நாட்டில் நிறைய சமையல் வெரைட்டி இருக்கு. ஒவ்வொரு கம்யூனிட்டிக்கும் ஒரு சமையல் இருக்கு. செட்டியார்களுக்கு மட்டும்தான் கம்யூனிட்டி சமையல் இல்லை. செட்டிநாட்டு சமையலும் அவங்களுக்கே உரிய சமையல் இல்லை. செட்டியார்கள் நல்லா சாப்பிடக்கூடியவங்க. சமையலில் நிறைய வெரைட்டியை எதிர்பார்ப்பாங்க. நிறைய வேலைப்பாடுகள் இருக்கணும்னு நினைப்பாங்க. அதனால்தான், செட்டிநாட்டு சமையலில் கோலா உருண்டை, பனியாரம், ஆப்பம், இடியாப்பாம்னு நிறைய அயிட்டங்கள் இருக்கு. அவங்களுக்கு ஒரேமாதிரி சாப்பிடுவது பிடிக்காது. செட்டிநாட்டு சமையல் பிரபலம் ஆனதற்கு இப்படி ஏகப்பட்ட வெரைட்டிகள் இருந்ததும் ஒரு காரணம். இதேமாதிரி நிறைய கம்யூனிட்டியோட சமையல் தமிழ்நாட்டில் இருக்கு. அதை யாருமே கண்டுக்கிறதாகவே இல்லை. எத்தனை நாளைக்குத்தான் 'செட்டிநாடு... செட்டிநாடு...'ன்னு சொல்லிட்டு இருக்கப்போறோம்..?


02 August 2011

சமையல் தமிழன் செஃப் ஜேக்கப்

Posted by lavanyan gunalan 9:19 PM, under | 2 comments


'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி?'
ந்த ஒற்றைக் கேள்விதான் பலரது வாழ்க்கையில் விளையாடிக்கொண்டு இருக்கிறது. இதற்கான பதிலைத் தேடுவதில்தான் சிலர் வாழ்க்கையைப் பெறுகிறார்கள்; பலர் இழக்கிறார்கள். சரியான பதிலைக் கண்டடைந்தவர்கள் வெற்றியின் பாதையை அடைகிறார்கள். இயலாதவர்கள் திசை தெரியாமல் போய்க்கொண்டே இருக்கிறார்கள். இப்படி வாழ்க்கை சூட்சமமான பல முடிச்சுகளைக் கொண்டது. அதை அவிழ்க்கத் தெரிந்தவன் மட்டுமே வெற்றி பெறுகிறான். இப்படி பல சூட்சம முடிச்சுகளை அவிழ்த்து தங்கள் வாழ்க்கையை ஒரு மைல்கல்லாக மாற்றியவர்களின் கதைதான் இந்தத் தொடர். வெவ்வேறு துறையில் சாதனைப் படைத்தவர்கள் இந்தத் தொடரில் இடம்பெறுவார்கள். ஓவியர் ஸ்யாமின் சாதனைகளை மைல்கல் - 1இல் பார்த்தோம். அடுத்தது சமையல் தமிழன் செஃப் ஜேக்கப். இந்தத் தொடர் விகடன் இணையதளத்தில் வெளிவந்தபோது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதை சாத்தியமாக்கிய விகடன் டாட் காம் எஸ்.சரவரணனுக்கு நன்றிகள்.
மைல்கல்: 2

செஃப் ஜேக்கப்: 1

புலரா பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலை பந்து கண்டன்ன
ஊன் சோற் றமலை.

- புறநானூறு


செஃப் ஜேக்கப்.. முழுப் பெயர் ஜேக்கப் சகாயகுமார் அருணி. சமையல் தமிழன். ஜேக்கப், சமையலில் கின்னஸ் சாதனை செய்தபோது அவர்தான் ஒரே இந்தியன். 489 வகையான சமையலை 24 மணி நேரத்தில் செய்து கின்னஸ் சாதனைப் படைத்தார். தன்னுடைய சாதனைக்காக 956 கிலோ எடை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் இறைச்சிகளைப் பயன்படுத்தினார். 


2008 மார்ச் 14 காலை 9.30 மணிக்கு ஆரம்பித்த இவரது சாதனை சமையல் மார்ச் 15 காலை 9.30 மணிக்கு நிறைவடைந்திருக்கிறது. இவரது சாதனையை 500-க்கும் அதிகமானோர் பார்த்து - ரசித்து, சாப்பிட்டு - ருசித்திருக்கிறார்கள். சங்க கால சமையல் குறித்து, இவர் செய்துவரும் ஆராய்ச்சிகள் இவரது வாழ்க்கையில் ஒரு மைல்கல்.

கிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்

Posted by lavanyan gunalan 8:25 AM, under | 4 comments

''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய 20 கேள்விகளுக்கு அவருடைய 20 பதில்கள்:

01 August 2011

சொக்கவைக்கும் சோனா

Posted by lavanyan gunalan 9:18 AM, under | No comments

சினிமாவிலும், அரசியலிலும் காப்பியடிப்பது இன்று நேற்றா நடக்கிறது... அரசியல்வாதிகள் கொள்ளையடிப்பது, கொள்கைகளை காப்பியடிப்பது, தேர்தல் அறிக்கைகளை உல்டாவாக்கி டெவலப் செய்வது என்று இருந்தால், சினிமாக்காரர்கள் கதைகளை, கேரக்டர்களை காப்பியடிப்பார்கள். அப்படி ‘கோ’ படத்தில் நமீதா மாதிரி சோனா நடித்தார். ஆனாலும், நேர்மையாக நமீக்கு போன் போட்டு நன்றி சொல்ல படாதபாடு பட்டதை மீடியா வெளிச்சம்போட்டு காட்டியது. ஆனாலும் சோனா மீது நமீதாவுக்கு இருக்கிற வயிற்றெரிச்சல் குறைந்தது மாதிரி தெரியவில்லை. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சோனா ரொம்ப பிஸியாகத் திரிகிறாராம்.

மல்லிகைப்பூ, ஓணம் புடவை, சாந்து பொட்டு, சந்தனப் பொட்டு என்று மங்களகரமாக அடுத்த ரவுண்டுக்கு தயாராகிக்கொண்டிருக்கும் சோனாவின் சொக்கவைக்கும் படங்கள். 

31 July 2011

குத்துப்பாட்டுக்கு ஏத்த அந்த நடிகை

Posted by lavanyan gunalan 6:44 PM, under | No comments

நல்ல குத்துப்பாட்டுகளில் அடையாளம் தெரியாத நடிகைகள் அல்லது கவர்ச்சி காட்டத்தெரியாத நடிகைள் அல்லது Old ஹீரோன்களைப் போட்டு ஒப்பேத்தும் சில தமிழ் சினிமா இயக்குனர்கள் சுவாதி வர்மா மாதிரியான நடிகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சம்பளமும் கம்மி, தாராளமான கவர்ச்சி, ஏ சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமான முகம் என்று சுவாதிக்கு பல குவாலிஃபிகேஷன்ஸ் உண்டு. ஆனால், ஏனோ தெரியவில்லை அவர் அந்தமாதிரி படங்களில் அல்லது அப்படியும் இப்படியுமான கேரக்டர்களில் மட்டுமே நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், இவரைப் போன்ற நடிகைகளை குறை சொல்லி மட்டும் என்ன பிரயோஜனம்? நல்ல கேரக்டர் வாங்கிக் கொடுப்பதாகச் சொல்லி பலான படங்களில் சிக்கவைத்துவிடும் புரோக்கர்களைத்தான் வாய்வலிக்கத் திட்டவேண்டும்!

30 July 2011

சிறுமிகள் விபச்சாரம்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Posted by lavanyan gunalan 6:25 PM, under | 3 comments


சிறுமிகள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகப்படுவதும், விபசாரத்தில் தள்ளப்படுவதும், பொட்டு கட்டி ஊர் பொதுவில் விடுவதும் இன்று நேற்று நடந்து வருவதல்ல; திட்டமிட்டே காலம் காலமாக அரங்கேறி வருகின்றன.

ஆண்வர்க்கத்தால் நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக வன்மையான தொடர் நடவடிக்கைகள், இதுவரை எந்த மன்னராட்சியோ மக்களாட்சியோ எடுத்ததாக தெரியவில்லை. ஆனால், இப்படி மைனர் பெண்களை விபசாரத்திலும் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுத்துகிறவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், காவல் துறையினர் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியேறும் அளவுக்கு அசிரத்தையாக நடந்துகொள்கின்றனர். சில நீதிமன்றங்களும்கூட அவர்களுக்கு ஜாமீன் வழங்கி மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதற்கு வழி வகை செய்கின்றன.

28 July 2011

ஓவியத்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்பு

Posted by lavanyan gunalan 10:30 PM, under | 3 commentsமைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 4


தொடர்ச்சி...

ஒரு விஷயத்தைச் சொன்னா, சில நிமிஷத்திலே படம் கொடுக்கிற மாதிரி வெச்சுக்கிட்டேன். அது அவங்களுக்கு ரொம்பப் புடிச்சது. இப்பவரைக்கும் அப்படிதான் வரையிறேன். ஒருத்தர் சொன்ன, அஞ்சாவது நிமிஷத்துலே அவங்க கையில் நான் வரைஞ்ச படம் இருக்கும். குமுதம் ஆபீஸுக்கு கூட்டி வந்த டிரைவரைப் பார்த்தேன், 'பார்த்தியா நான் சொன்னபடி நல்ல சம்பளத்துலே வேலை கிடைச்சிடுச்சு, அதேமாதிரி ஆனந்த விகடன், கல்கி, வாரமலர்... எல்லாப் பத்திரிகைக்கும் போய் பாரு'ன்னார். அஞ்சுநாள் ஆச்சு. சொல்லாமலேயே வந்துட்டதாலே ஊர்லே என்னை தேடுறாங்க.

அம்புலிமாமா ஆபிஸ்லே நான். இன்டர்வியூ எடுத்தவர் என்னை கூப்பிட்டாரு. கூப்பிட்டவரு பிரசாத் ரெட்டி. உள்ளே போனா எல்லா பத்திரிகை ஆபீஸ்லேருந்தும் லெட்டர் வந்திருக்கு. ரெட்டி கேக்கறாரு... 'ஈயந்த்தா ஏமி' 'என்ன... தெரியலையே...'னு சொன்னேன். 'என்ன தெரியலையா....' பத்திரிகை பேர் எல்லாம் சொல்லி, 'இங்கிருந்தெல்லாம் உனக்கு லெட்டர் வந்திருக்கு'ன்னார். 'ஆமா சார் அங்கெல்லாம் போனேன்; டிராயிங்க்ஸ் கொடுத்துட்டு வந்தேன். லெட்டர் வந்திருக்கா'ன்னேன். 'இந்த மாதிரி எல்லாரும் பண்றாங்கன்னுதானே உனக்கு முன்பணமா 350 ரூபா கொடுத்தேன். நீங்க எல்லாருமே இப்படிதான் இருப்பீங்களா... இங்க சம்பளம் கொடுக்கிறேன் வெளியே வேலை பார்க்குறீயே... என்ன அர்த்தம்...?'ன்னு எரிச்சலா கேட்டாரு. 'உனக்கு இதைவிட வெளியே சம்பளம் ஜாஸ்தின்னா தாராளமா வெளியே போகலாம்...' 'எனக்கு குமுதத்துலே 2 ஆயிரம் ரூபா தரேன்னு இருக்காங்க. அங்கே போகப் போறேன்னேன்'. 'போ... போ...'ன்னார். வெளியே வந்துட்டேன்.

27 July 2011

தமிழ் சினிமா பார்க்காத கதை

Posted by lavanyan gunalan 6:20 PM, under | 2 comments

ஆரம்பமே ஆஹா என்று சொல்லும்படியான வாய்ப்பு எல்லா ஹீரோக்களுக்கும் கிடைக்காது. ஆனால், ராஜீவ் கிருஷ்ணாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அவருடைய முதல் படமே ஆஹா..! சின்ன இடைவெளிக்குப் பிறகு சில படங்களில் நடித்தார். மீண்டும் இடைவெளி! இப்போது அந்த இடைவெளி மொத்தத்தையும் இட்டு நிரப்பும் வகையில் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கியிருக்கிறார் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தின்மூலம்!

கேரளத்துப் பைங்கிளி

Posted by lavanyan gunalan 9:20 AM, under | 1 comment

மின்வெளி மீடியா ஒர்க்ஸ் தயாரிப்பில் கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை தனபால் பத்மநாபன் இயக்கி வருகிறார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகள் முடிந்துவிட்டது. விரைவில் படம் வெளியாக இருக்கிறது. படத்தில் புதுமுகங்கள் நந்தனா, ஹேமச்சந்திரன் கதாநாயகி, நாயகனாக வலம் வருகிறார்கள். முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்து இருக்கிறார்கள். 80களில் இருந்த மில் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் இந்தப் படம், தமிழ் சினிமா இதுவரை பார்க்காத கதைக் களன். இந்தப் படத்தில் அறிமுகமாகும் நந்தனா இன்னொரு கேரளத்துப் பைங்கிளி. குடும்பப் பாங்கான தோற்றமும் சரசரக்கும் மல்லிகையும் வைத்திருக்கும் நந்தனாவைப் பார்த்தால் லவ் பண்ணத் தோன்றும். கிருஷ்ணவேணி பஞ்சாலைப் படத்தில் நந்தனாவை காதலிக்கும் கதாநாயகன் ஹேமச்சந்திரன்.

செக்ஸி ஷில்பா!

Posted by lavanyan gunalan 6:52 AM, under | No commentsமைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 3

தொடர்ச்சி...


டென்த் படிக்கும்போது மூர்த்திங்கிற பையனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. அவன் ரஜினி ரசிகன். ரஜினிக்கு ஒரு லெட்டர் போட்டான். அவரும் பதில் கடிதம் அனுப்பிட்டாரு. அவ்வளவுதான் அவன் ஹீரோ ஆயிட்டான்.

ஸ்கூல்லே எவனும் என்னை மதிக்கலை. இந்தமாதிரி ரஜினி கிட்டேருந்து லெட்டர் வந்தா நம்பளை யார் மதிப்பா..? அப்போ பரீட்சை வேற நடந்துட்டு இருந்தது. முடியட்டும்னு இருந்தேன். முடிஞ்சதும், கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் போகவேண்டியவன் மெட்ராஸுக்கு பஸ் ஏறிட்டேன். கையில் ஒரு முன்னூறு ரூபா. அப்புறம் ரஜினி, கமல், சத்தியராஜ் இப்படி நிறைய ஹீரோக்கள். படங்களாக இருக்கிறார்கள்; அவ்வளவுதான்.

எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து நடந்தே ஏவி.எம். ஸ்டூடியோ வந்தேன். உள்ளே போனா, 'குற்றவாளிகள்'னு ஒரு படம் ஷூட்டிங். வேடிக்கைப் பார்க்கலாம்னு அங்கிருந்த ஒரு கல்லு மேலே உட்கார்ந்தேன். கல்லு டபக்குன்னு உள்ளே போயிடுச்சு. எழுந்து ஒரு திண்ணையிலே உட்கார்ந்தேன். திண்ணை பொதக்குன்னு போயிடுச்சு. 'ஏய்... ஏய்... அங்கே உட்காராதப்பா, எல்லாம் செட்டு'ன்னு சொல்லிட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் வந்தாரு, 'யாரு நீ... எல்லாத்தையும் உடைச்சிட்டு இருக்கே'ன்னார். 'இல்லைங்க டிராயிங் வரைஞ்சிருக்கேன் ரஜினிகாந்தைப் பார்க்கணும்.' 'என்னது ரஜினிகாந்தை பார்க்கணுமா.' 'அட்லீஸ்ட் கமல், சத்தியராஜையாவது பார்க்கணும்; ஆட்டோகிராஃப் வாங்கணும்'னேன். 'ஊர்லேருந்து கிளம்பி வந்திருக்கியா... எங்க படத்தைக் காட்டு'ன்னார். பார்த்துட்டு, 'எதுக்குப்பா இதெல்லாம் உனக்கு, எதிர்லேதான் 'அம்புலிமாமா' பத்திரிகை இருக்கு அங்க போனாலும் எதாச்சும் வேலை கொடுப்பாங்க'ன்னு சொன்னாரு.

26 July 2011

ரஜினியின் வெளிவராத படங்கள்

Posted by lavanyan gunalan 2:55 PM, under | 1 comment

உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக ரஜினி இருந்தது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வேதனையாக இருந்தது. அதனால், கோயிலுக்குப் போவதும் கடவுளிடம் வேண்டுவதுமாக இருந்துவந்தார்கள். அதன்பிறகு அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் போனபோதுகூட மிகவும் வேதனையோடு இருந்தார்கள். அப்போதெல்லாம் அவர் பற்றிய தவறான செய்திகளே கசிந்துகொண்டிருந்தன. அவருடைய படங்களோ, வீடியோ காட்சிகளோ வெளிவராமலேயே இருந்தது. சிகிச்சைக்குப் பிறகு ரஜினியின் மகிழ்ச்சியான தருணங்களை இப்போது அவருடைய ரசிகர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார்.

25 July 2011

ஆறாம் அறிவு

Posted by lavanyan gunalan 10:19 PM, under | 1 comment

குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்குப் பெரும்பாடு ஆகிவிடுகிறது. கண்ணில் படுகிற பொருளையெல்லாம் எடுத்துப் பதம் பார்த்துவிடுவதே குழந்தைகளின் வாடிக்கை இதுதான் ‘ஆறாம் அறிவு’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பிரபாகரன்.


கூந்தல் பராமரிப்பு

Posted by lavanyan gunalan 7:44 PM, under | No comments

பெண்ணோ, ஆணோ... முடி பிரச்னை பலருக்கும் முடியாத பிரச்னை! கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு மற்றும் பேன் தொல்லை, டை அலர்ஜி என்று ஏகப்பட்ட சிக்கல்கள். “வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்தே இவற்றுக்கெல்லாம் எளிய முறையில் இயற்கை வழியில் தீர்வு காணலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வி.கௌரிதேவி.


லடாய்: நமீதா vs சோனா

Posted by lavanyan gunalan 2:31 PM, under | No comments


கவர்ச்சி நடிகைகள் சோனாவுக்கும் நமீதாவுக்கும் இடையே லடாய் ஏற்பட்டு இருக்கிறது. கோ படத்தில் நமீதாவை இமிடேட் செய்து சோனா நடித்ததற்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார் கவர்ச்சி நடிகை நமீதா.

24 July 2011

சக்தி கொடு!

Posted by lavanyan gunalan 8:11 AM, under | 3 comments

வியாசர்பாடி ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் சக்தி ஈஸ்வரி வீட்டுக்கு வழி சொல்கிறார்கள். வீடு நிறைய மெடல்களையும் கோப்பைகளையும் குவித்து வைத்திருக்கிறார் இந்த கால்பந்தாட்ட வீராங்கனை. கோப்பைகளுக்கும் மெடல்களுக்கும் இணையாக சக்தியின் வீட்டில் வறுமையும் நிறைந்திருக்கிறது.

“இந்த ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் ஹோம்லெஸ் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நான் நிச்சயம் பங்குபெறுவேன்... போனமுறை பிரேசில் போட்டியை மிஸ் பண்ணிய மாதிரி இந்தமுறை விடமாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொல்லும் சக்தியிடம், “ஏன் போனமுறை கலந்துக்கலை... ஃபிட்னஸ் இல்லாமல் போயிடுச்சா” என்றால் வேதனையோடு சிரிக்கிறார்.

சக்தி ஈஸ்வரி

23 July 2011

கண்ணழகி அமலா பால்/Amala Paul hot stills

Posted by lavanyan gunalan 10:41 PM, under | 1 comment

மைனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான கண்ணழகி அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் அழகுப் பதுமையாக பதுமையாக வலம் வந்து இருக்கிறார். இனி தமிழ் சினிமாவை ஒரு ரவுண்ட் அடிக்கப் போகும் அமலாபாலின் சூடான படங்கள்:

ஆலைக்காரி... பஞ்சாலைக்காரி...

Posted by lavanyan gunalan 6:15 PM, under | 1 comment

வைரமுத்துவுக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இளையராஜா, ஏ. ஆர். ரஹ்மானை அடுத்து இசையமைப்பாளர் என். ஆர். ரஹ்நந்தன் சேர்ந்து இருக்கிறார். தென்மேற்குப் பருவக்காற்று படத்தில் இவருடைய இசையில் வைரமுத்து எழுதிய ‘கள்ளிக்காட்டு தாயே...’ பாடல்தான் தேசிய விருதை வென்றிருக்கிறது. அதே உற்சாகத்தோடு இருவரும் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’க்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆலைக்காரி அனுபவத்தைச் சொல்லுங்கள் என்றதும் துள்ளலாகப் பேசத் தொடங்கினார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில்...

19 July 2011

தெய்வத்திருமகள் படைத்த தெய்வத்திருமகன்

Posted by lavanyan gunalan 11:14 PM, under | 3 comments


தெய்வத் திருமகள் படத்தை இயக்கிய இயக்குனர் விஜய்க்கு பாராட்டுகள். இப்படியொரு படம் தமிழில் இதுவரை வந்தது இல்லை. தழுவல் படமாக இருந்தாலும், காப்பி படமாக இருந்தாலும் அதை தமிழில் சோடைபோகாமல் கொடுத்ததற்கு பாராட்டவேண்டும். சீயான் விக்ரமுக்கு தேசிய விருது காத்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக நடித்த சாராவுக்கு தமிழக அரசு விருதாவது கொடுக்க வேண்டும். தேசிய விருதுக்கு பரிசீலிக்கலாம்! விக்ரமின் நடிப்பு இளகிய மனம் படைத்தவர்களை அழவைக்கிறது! நானும் அழுதுவிட்டேன். மதராசபட்டணம் படத்துக்குப் பிறகு இப்படியொரு படத்தை கொடுத்த தெய்வத்திருமகன் விஜய்க்கு என்னுடைய ஸ்பெஷல் பாராட்டுகள்.18 July 2011

வெண்ணிலா - முருகேஷ் காதல் கதை

Posted by lavanyan gunalan 10:32 PM, under | 3 comments

கவிஞர் அ.வெண்ணிலாவின் கனவிருந்த கூடு புத்தகத்தைப் புரட்டியபோது ‘நன்றி இந்திய தபால்துறை’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான்... அவருக்கும் கவிஞர் மு.முருகேஷுக்குமான காதலில் முக்கிய பங்கு இந்திய தபால் துறைக்கு இருக்கிறது. அவர்களுடைய காதலுக்காக இந்திய அரசாங்கமே ஓடி ஓடித் தூது சென்றிருக்கிறது. அந்த வகையில் அவர்களுடைய காதல், கடிதங்களால் ஆனது! கல்யாணத்துக்காகக் காதலிப்பவர்களின் பெயர்களை எழுதிக்கொண்டே இருக்கலாம்! காதலிப்பதற்காகக் கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் பட்டியல் மிகச் சிறியது. அதில் முன் வரிசையில் இருப்பவர்கள் அ.வெண்ணிலா - மு.முருகேஷ். இலக்கிய நண்பர்களாகிக் காதலரானவர்கள். காதலித்துக் கொண்டிருந்தபோது நாள் தவறாமல், வெண்ணிலா முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் கவிதை. முருகேஷ் எழுதிய கவிதைகள் அத்தனையும் வெண்ணிலாவுக்கான கடிதம். தங்களுடைய காதல் வாழ்க்கையை முருகேஷ் பேசுகிறார்...

வெண்ணிலா - முருகேஷ்

17 July 2011

இருள்

Posted by lavanyan gunalan 9:21 AM, under | 2 comments

இரவை
விழுங்கிக் கொண்டிருக்கிறது
யாருமற்ற
ரயில் தடத்தின் 
பாலத்திற்கடியில்
நடந்து கொண்டிருக்கிறேன்
என்னையும்
விழுங்கப் பார்க்கிறது16 July 2011

அழகுக் குறிப்புகள்: பாதம் நகம் பராமரிப்பு

Posted by lavanyan gunalan 10:38 PM, under | 4 comments

அடுத்தவர் கண்களுக்கு அத்தனை எளிதில் தெரியாது என்பதால், பாத பராமரிப்பு பல பெண்களுக்கு இரண்டாம்பட்சம்தான். தவிர, பாதப் பிரச்னையில் பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பித்தம் அதிகமாவதால் குதிகால் வெடிப்பு, பாதத்தில் வலி, குடைச்சல் ஏற்படும். தோல் வெடிப்பு ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக தோல் உரிந்துவரும். தோல் உரிவதால் வலி உண்டாகும். “உங்கள் கைக்கெட்டும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம்” 
என்கிறார் சித்த மருத்துவர் பொன்.ராமச்சந்திரன்.மழை இரவு

Posted by lavanyan gunalan 7:31 PM, under | No comments

ஒரு மழை இரவின்
வெற்று வெளியில்
தனிமையில்
நடந்திருந்தேன்
வெகு தூரத்திலிருந்து
நெடிய சப்தத்துடன்
ஒளி கடந்துச் சென்றது
மோட்டார் சைக்கிள்.
15 July 2011

நகர நாகரிகம்

Posted by lavanyan gunalan 10:23 PM, under | No comments


நகர நாகரிகம் 


பூட்டப்பட்ட
வீடுகளைக் கொண்டு 
நகரத்து
வீதிகளெங்கும் 
வெறிச்சோடியே
கிடக்கின்றன
வாயில்கள் தோறும்
மாட்டப்பட்டிருக்கும்
வாசகங்கள்
பொறிக்கப்பட்ட
பலகை
தீர்மானமாகவே
எழுதியிருப்பார்கள்
வெளியாட்கள்
உள்ளே வராதீர்
நாய்கள் ஜாக்கிரதை
நகர நாகரிகம்.

13 July 2011

தொடர் குண்டுவெடிப்பு: மும்பையில் என்ன நடக்கிறது - வீடியோ ரிப்போர்ட்

Posted by lavanyan gunalan 9:51 PM, under | No comments

மும்மையில் தொடர்ந்து 3 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததையடுத்து இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் மாநிலத் தலைநகரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


மும்பையில் நடந்த இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து இருப்பதாக இதுவரை வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றனர். 100க்கும் அதிகமானோர் காயமடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம், விமான நிலையம் என மக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பும் ரஜினிக்கு பாதுகாப்பு பலப்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதனால், ரசிகர்கள் ரஜினியை சந்திப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே.

மும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு

Posted by lavanyan gunalan 7:32 PM, under | No comments

மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால், பெரிய உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் காவல்துறை திணறிவருகிறது. தொடர்ந்தும் குண்டுவெடிப்புகள் நிகழலாம் என்பதால் மும்பை மாநகரமே அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. இதற்குமுன் பல முறை மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் இந்தமுறை நிகழ்ந்த சம்பவம் பெரிய அளவில் இருக்குமோ என்று தெரிகிறது.

கோப்புப் படம்

12 July 2011

பூனை ரோமம் போயே போச்சு!

Posted by lavanyan gunalan 10:35 PM, under | 2 comments

பார்க்கப் போனால் ரொம்பச் சின்ன விஷயம்... ஆனால், அதுதான் பெண்ணை மனதளவில் வீழ்த்தி தன்னம்பிக்கையைக் கெடுக்கும். கை கால்களில் முளைத்திருக்கும் பூனை ரோமங்கள்தான் அவை. என்னதான் அழகாக இருந்தாலும் கைகளையும் கால்களையும் ஆமை போல மறைத்துக்கொண்டே வாழும் பெண்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். பூனை ரோமங்கள் வெளியே தெரியும் என்று வெட்கப்பட்டுக்கொண்டே பலர் குட்டைக் கை வைத்த சுடிதாரோ பிளவுஸோ அணியத் தயங்குகிறார்கள். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டே வெளியே போக யோசிப்பார்கள். இதற்காக கடைகளில் விற்கிற ‘ஹேர் ரிமூவிங் க்ரீம்’களைப் பயன்படுத்தினாலும் சில நாட்களில் முன்பைவிட வேகமாகவும் முரடாகவும் ரோமங்கள் வளர்ந்துவிடும். அவற்றின் அடர்த்தியும் கூடியதுபோல இருக்கும். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு சொல்கிறார் சித்தமருத்துவர் செல்வ சுப்பிரமணியன்.

10 July 2011

பேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனம்

Posted by lavanyan gunalan 10:27 PM, under | 4 comments

சமீபகாலமாக பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு பேருந்து ஓட்டுனர்களே மூலகாரணமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை பெரிய அளவில் பேருந்து விபத்துகள் நடந்துள்ளன. இந்த இரண்டு விபத்துகளில் இருந்தும் பேருந்து ஓட்டுனர்கள் உயிர்தப்பி விட்டார்கள். உயிர் இழந்ததும், காயமுற்றதும் பயணிகள்தான். பாதிக்கப்பட்டதும் அவதிப்பட்டதும் பயணிகள்தான். அங்காங்கே இப்படி விபத்துகள் நடப்பதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்திகள், காட்சிகள் வெளியிட்டாலும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையும் பொறுப்பற்றத்தன்மையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

கிசு கிசு: பில்டப் கொடுக்கும் நடிகைகளின் அம்மாக்கள்

Posted by lavanyan gunalan 3:57 PM, under | No comments

நடிகைகளை விட நடிகைகளின் அம்மாக்கள்தான் ரொம்பவே பில்டப் கொடுப்பார்கள் என்பது நாடறிந்த செய்தி. ஆனால், பெரும்பாலான நடிகைகளை ஆட்டிவைப்பதே அவர்களுடைய அம்மக்களாகத்தான் இருக்கிறார்கள். அதனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகையைவிட அவர் அம்மாவுக்குதான் அஸிடெண்டுகள் பயப்படுகிறார்களாம்.

மாடல் மட்டுமே...

ஹீரோவுக்காக மோதும் அக்கா, தங்கை

Posted by lavanyan gunalan 11:02 AM, under | No comments

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு தமிழ் சினிமாவில் வட்டமடித்து வருகிறார் காஜல் அகர்வால். அதேபோல அவருடைய தங்கை நிஷா அகர்வால் தெலுங்கில் அறிமுகமானார். இப்போது விமலுக்கு ஜோடியாக தமிழிலும் நிஷா குதிக்கப் போகிறார். பெயர் முடிவு செய்யப்படாத இந்தப் படத்தை, பிரேம் நிஸார் இயக்குகிறார். பாலாஜி ரியல் மீடியா நிறுவனம் சார்பில் ரமேஷ் தாண்ட்ரா தயாரிக்கிறார்.

இந்தப் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் தன் கனவு நனவாகி இருப்பதாக சொல்லும் நிஷா பார்ப்பதற்கு இன்னொரு காஜல் மாதிரியே இருக்கிறார். ஒருவேளை அக்கா தங்கை ரெண்டுபேரும் ஒரே படத்தில் ஹீரோவுக்காக மோதிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. தமிழ் சினிமாவில்தான் என்னவேண்டுமானாலும் நடக்குமே!அவன் இவன் - அத்தனையும் என் வசனங்கள்தான்!

Posted by lavanyan gunalan 9:38 AM, under | 1 comment


தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் வாயிலாக வெகுஜனங்களுக்கும் பழக்கப்பட்டவர். பாபா தொடங்கி அவன் இவன் வரைக்கும் பத்து படங்கள் வரை இதுவரை வசனம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் ராமகிருஷ்ணன் அவன் இவன் படம் பற்றி வருகிற விமர்சனங்கள் குறித்தும் அந்தப் படத்தைப் பற்றியும் தெனாலிக்காக பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன்

09 July 2011

ஈழ இலக்கியத்தின் இறுதிக் குரல்

Posted by lavanyan gunalan 7:31 PM, under | 1 comment


பேராசிரியர் சிவதம்பி

மொழியியல் ஆய்வாளரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவதம்பி ஜூலை 6 அன்று இரவு இலங்கையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 79. தமிழ் மொழித் துறைக்காக பல்வேறு ஆய்வுகளை சிவதம்பி அளித்திருக்கிறார். தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து மாணவர்களோடு கலந்துரையாடல், ஆய்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வற்றாத தமிழ் அறிவை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறார். அடிக்கடி அவர் தமிழகத்துக்கு வரக் காரணமானவர்களில், சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் வீ.அரசு ஒருவர். சிவதம்பியோடு மொழி ரீதியாகவும் மன ரீதியாகவும் நெருங்கிப் பழகியிருக்கும் பேராசிரியர் வீ.ரசிடம் சிவதம்பியின் நினைவுகளை  பகிர்ந்துகொள்ளச் சொன்னோன். அருவியாகக் கொட்டிவிட்டார்.

07 July 2011

கா.சிவதம்பி நினைவுகள்...

Posted by lavanyan gunalan 11:21 PM, under | No comments

மறைந்த மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை கூட்டாஞ்சோறு காலாண்டிதழுக்காக 2006 ஆண்டு நானும் வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் அவர்களும் நேர்காணல் நடத்தினோம். தமிழ் எழுத்து சீரமைப்பு குறித்து அப்போது வ.செ.குழந்தைசாமி ஆய்வுநடத்திக்கொண்டிருந்தார். தமிழ் வழிக் கல்வி சீரழிந்து வருவது பற்றியும் அப்போது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதேபோல அன்றைய சூழலில் இருந்த தமிழ் கல்வி, தமிழ் இலக்கியம் குறித்தும் சிவத்தம்பியோடு விவாதித்தோம். அதில் முக்கியமான சில கேள்வி-பதிலை மட்டும் கூட்டாஞ்சோறு இதழில் வெளியிட்டோம். கூட்டாஞ்சோறு வெளிந்துகொண்டு இருந்தபோது பத்திரிகை நிர்வாகத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன்.
தமிழ் மொழிக்கு சிவத்தம்பி ஆற்றிய பணிகள் ஏராளம். அவருடைய ஆய்வுகள் பல கல்லூரிகளிலும் பல்கலைகளிலும் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்ந்துவந்த அவர் நேற்று இரவு காலமானார். இதற்குமுன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள சிவத்தம்பி வந்தபோது விமானநிலையத்திலேயே அவரை திருப்பியனுப்பியது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது.  ஆனால், கடைசியாக கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்கு சிவத்தம்பிக்கு கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். கடைசிவரைக்கும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், பழைய சம்பவங்களை யெல்லாம் மறந்துவிட்டு செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி கலந்துகொண்டு ஆய்வுரையாற்றியது கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளித்தது. மறைந்த கா.சிவதம்பிக்கு இரங்கல் தெரிவிக்கும் முகத்தான் அவருடைய பழைய நேர்காணலை செய் அல்லது செய் வலைப்பூவில் வெளியிட்டு பழை நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
கா.சிவதம்பிக்கு அஞ்சலி
இலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .குழந்தை வளர்ப்பது எப்படி?

Posted by lavanyan gunalan 5:00 PM, under | No comments


”டிவி பார்க்காதேன்னு சொல்லி முடிக்கிறதுக்குள்ள மூணு சேனல் மாத்திடறான். ஃபிரிட்ஜை திறக்காதேடான்னா அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறான்... தண்ணியிலே விளையாடாதே, சளி பிடிக்கும்னு கரடியா கத்துனாலும் காதே கேட்காதமாதிரி தண்ணியில விளையாடுறா என் பொண்ணு... எதை செய்யாதேன்னு சொன்னாலும் அதைத்தான் செய்வேன்னு அடம்பிடிக்கிறா...

பெரியவங்க பேசும்போது வாயைப் பார்த்துக்கிட்டு நிக்காதேன்னு எத்தனையோ முறை சொல்லியாச்சு... திருந்தறதாவே இல்லை... இவங்களை எப்படி வழிக்குக் கொண்டுவர்றதுன்னே தெரியலை” - பெரும்பாலான பெற்றோரின் புலம்பல் இதுதான்.

03 July 2011

மெழுகுச் சிலை தமன்னா: Vengai stills

Posted by lavanyan gunalan 7:33 PM, under | No comments

பையா படத்துக்குப் பிறகு தமன்னாவுக்கு தமிழ் ரசிகர்கள் பெருகிவிட்டார்கள். அதனால் பத்து படங்கள் வந்தால், ஒரு படத்திலாவது தமன்னா ஒய்யாரம் காட்டுகிறார். சிம்ரனுக்குப் பிறகு அழகு, உடற்கட்டு, டான்ஸ், நடிப்பு, காமெடி, ரொமான்ஸ் என்று எல்லாவற்றிலும் தூள் கிளப்பும் நடிகை தமிழ் சினிமாவுக்கு கிடைக்கவில்லை. அந்த இடத்தை தமன்னா நிரப்பிவிட்டார். ஹரி இயக்கத்தில் திரைக்கு வர காத்திருக்கும் வேங்கைப் படத்தில் தனுஷுக்கு ஜோடி போட்டு டூயட் பாடும் மெழுகுச் சிலை தமன்னாவின் அழகு படங்கள்.

நடிகர் கார்த்தி - ரஞ்சனி கல்யாண ஆல்பம்

Posted by lavanyan gunalan 1:09 PM, under | 4 comments

நடிகர் சிவகுமார் மகன் கார்த்திக் திருமணம் கோவையில் உள்ள கொடீசியா அரங்கில் கோலாகலமாக நடந்தது. அப்பா, அம்மா பார்த்துவைத்து பெண் ரஞ்சினியை மணமுடித்த சந்தோஷம் கார்த்திக் முகத்தில் தவழ்வதை இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.

அழுமூஞ்சி கேரக்டர் வேண்டாம்: ரேணுகா

Posted by lavanyan gunalan 12:47 PM, under | No comments


படபடவென்று பேசும் ரேணுகா படு அமைதியாக இருந்தார். “நான் இப்போ ரேணுகா இல்லை... ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை...’ பூங்கோதையின் அம்மா... அதனால், இப்படித்தான் இருக்கணும்...” என்றார். அதுதான் ரேணுகா.

படத்தின் கதாபாத்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு சுயத்தை மறந்து நடிக்கும் மிகச்சில நடிகைகளில் அவரும் ஒருவர்.

”நான் போட்ட கண்டிஷனே அதுதான். ஏன்னா பத்தோடு பதினொன்னா வந்து நடிச்சுட்டுப் போறதில் என்ன லாபம் இருக்கு சொல்லுங்க... நம்ம பேரு நிக்கற மாதிரி நடிக்கவேண்டாமா..?” என்றவர், நம் கேள்விகளை நிதானமாக உள்வாங்கிப் பேசுகிறார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்திலிருந்து...

02 July 2011

பேயாட்சி செய்யும் நாடு!

Posted by lavanyan gunalan 9:02 PM, under | No comments


நதிக்கு யாரால் பாதையமைத்து கொடுக்க முடியும்?

சூரியனுக்கு உங்களால் சுற்றுவட்டப் பாதை அமைக்க முடியுமா?

புலியை வளர்த்து புல் திங்கவைக்கத்தான் முடியுமா..?

இல்லையென்றால், கவியரசர் சொன்னது மாதிரி காற்றுக்கும் கடலுக்கும் வேலியும் மூடியும்தான் உங்களால் போட்டுவிட முடியுமா..?

இதையெல்லாம் செய்ய முடியாதபோது இந்த இயற்கையையும் இயற்கையின் படைப்புகளையும் சூறையாடுவதற்கும், சின்னாபின்னப் படுத்துவதற்கும் என்ன உரிமை இருக்கிறது?

கோத்ரா ரயில் பற்றவைக்கப்பட்டு எரிகிறது... 

01 July 2011

இதயம் டிவென்டி 20: எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை

Posted by lavanyan gunalan 12:03 AM, under | 1 comment

படுபயங்கர பிஸியாக இருக்கிறார் இந்தியாவின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாட்சம்.

"அதுதான் கஷ்டமாக இருக்கு... நாங்க பிஸியாக இருந்தா நோய்களெல்லாம் ஓவர் டைம் பண்ணுதுன்னுதானே அர்த்தம்... அப்படி இருந்தா நல்லது இல்லையே... நம்ம உடம்பை நாமேதான் நோய்க்கு பரிசாகக் கொடுத்துடறோம்... சில பழக்கங்களால்!” என்று ஜாலியாகப் பேசிய சிவகடாட்சத்திடம் அவருடைய நேரத்தை வீணாக்காமல் ஒரு டிவெண்டி 20 பேட்டியை முடித்தேன்.

30 June 2011

சர்ச்சை படங்களும் சர்ச் பண்ணும் படங்களும்...

Posted by lavanyan gunalan 7:18 AM, under | 1 comment

நயந்தாராவின் சர்ச்சைக்கு உள்ளான சில படங்களும்
அதிகம் சர்ச் பண்ணும் சில படங்ளும்


சினிமாவுக்கு முழுக்கு போட்ட சர்ச்சை நாயகி

Posted by lavanyan gunalan 6:49 AM, under | 1 comment

பிரபல நடிகை திரையுலகைவிட்டு பிரிந்தார். பிரபு தேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து, பல பிரச்னைகளையும் சந்தித்தனர். முதல் மனைவி இருக்கும்போதே நயன்தாராவுடன் தகாத உறவு வைத்திருக்கிறார் என்று பிரபுதேவா மனைவி ரமலத் குற்றம்சாட்டி கோர்ட் வரைக்கும் சென்றார். 

ஒருகட்டத்துக்கு மேல் பிரபுவின் நடவடிக்கைகளை ரமலத்தால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. அதனால், தன்னுடைய போராட்டம் விழலுக்கு இறைத்த நீராகாகிவிடக்கூடாது என்பதற்காக பிரபுவோடு சுமுகமாக போகத் தொடங்கியவர், விவாகரத்து பெற்றுக்கொள்வது என்றும், தனக்கு ஜீவனாம்சம் வழங்கவேண்டும் என்றும், சொத்தில் பங்கு தரவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

கோப்பு

கோப்பு