04 September 2008

புழக்கடையில் மேய்ந்துத்திரியும் பன்றி

Posted by Gunalan Lavanyan 7:50 PM, under | 1 comment

வா...
எனது ஒவ்வோர் அசைவையும் கண்காணி.
வந்தெனது
அந்தரங்கத்தை
உன் சவுகரியம் ஆக்கிக்கொள்.
சம்பந்தமின்றி
என் சுயத்தில் தலையிடு.
எச்சில் கையால்கூட காக்கை நீ
பகிர்தலையும் அன்பையும் பற்றி
முழுக்கப் பேசு!
உன் சூத்து நாறும்போது
அடுத்தவன் சூத்து நாறுவதாய் புரளிசெய்!
சாதியாலும் மதத்தாலும்
என் சனங்களையும்
என் ஈனச்சாமியையும்
கேலிக்குள்ளாக்கு...
புழக்கடையில் மேய்ந்துத்திரியும்
என் புழக்கடைச் சங்கதிகளை
வயிறு புடைக்கத்தின்று
செறிக்காமல் திரி...
செறிக்க வேண்டுமெனில்
கண்ணாடியில் உன் பிம்பத்தைப் பார்...
காரித்துப்பு...
செரிக்கத்தொடங்கும் இப்போது!

1 comments:

//உன் சூத்து நாறும்போது
அடுத்தவன் சூத்து நாறுவதாய் புரளிசெய்!//
இவ்வரிகளைத் தவிர மற்றவை அனைத்தும் நன்றாகத் தான் உள்ளது.

Post a Comment